9TH TAMIL - பகுபத உறுப்பிலக்கணம்
- ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் உணர்த்துவது சொல். இதனைப் பதம் என்றும் கூறுவர்.
- இப்பதம் பகாபதம், பகுபதம் என இரண்டு வகைப்படும்.
- பிரித்தால் பொருள் தராத சொல் பகாபதம் எனப்படும்.
- எ.கா. மரம், உண், பல, பிற, சார
- பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தரக் கூடியதுமான சொல் பகுபதம் எனப்படும்.
- எ.கா. நடந்தான், நின்றார்
- வேலன் – வேல்+அன் (வேல் – பகுதி, அன் – விகுதி)
- செய்தான் – செய்+த்+ஆன் ( செய் – பகுதி, த் – இடைநிலை, ஆன் – விகுதி)
- பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
- அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்பனவாகும்
- பகுபதத்தின் முதல் உறுப்பு பகுதி.
- ஒரு சொல்லின் அடிச் சொல்லே பகுதியாகும்.
- இதை முதனிலை என்றும் கூறுவர்.
- பகாபதமாக அமையும்.
- ஏவல் (கட்டளை) பொருளில் வரும்.
- பகுபதத்தின் இறுதி உறுப்பு விகுதி
- இதனைக் கடைநிலை என்றும் கூறுவர்
- இவ்விகுதி திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும்.
- பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு இடைநிலை என்று பெயர்.
- வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையைக் கால இடைநிலை, எதிர்மறை இடைநிலை என இருவகைப்படுத்துவர்.
- பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையைப் பெயர் இடைநிலை என்பர்.
- இறந்தகால இடைநிலைகள - த், ட், ற், இன்
- நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று
- எதிர்கால இடைநிலைகள் - ப், வ்
- எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்
- பெயர் இடைநிலைகள் - ச், ஞ், ந், த், வ்
- பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும் உறுப்பு, சந்தி எனப்படும்.
- சந்தி, பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்காகும்.
- பெரும்பாலும் த், ப், க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஒன்று சந்தியாக வரும்.
- உடம்படுமெய்கள் (ய். வ்) சந்தியாக வருவதுண்டு.
- பகுதி, விகுதி, இடைநிலையைச் சார்ந்து வரும் உறுப்பு சாரியை.
- பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
- அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் என்பன சாரியைகளாகும்.
- பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றமே விகாரமாகும்
- ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிவாகவும் மாற்றம் பெறும். இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.
- பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப் பேறு எனப்படும்.
- பெரும்பாலும் த் மட்டுமே எழுத்துப் பேறாக வரும்.
- சாரியை இடத்தில் த் வந்தால் அது எழுத்துப்பேறு
- இறந்தகால இடைநிலைகள் – த், ட், ற், இன்
- நிகழ்கால இடைநிலைகள் – கிறு, கின்று, ஆநின்று
- எதிர்கால இடைநிலைகள் – ப், வ்
- எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்
- தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் – என், ஏன், அல், அன், கு, டு, து, று
- தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் – எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும்
- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் – ஐ, ஆய், இ
- முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் - இர், ஈர், மின்
- படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் - அன், ஆன்
- படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதிகள் - அள், ஆள்,
- படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார், கள்
- படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் - து, று, டு
- படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள் - அ, ஆ
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, ய, இயர்
- தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் - அ, உம்
- தெரிநிலை வினையெச்ச விகுதிகள் – உ, இ





