Breaking

Saturday, April 4, 2026

9TH TAMIL - பகுபத உறுப்பிலக்கணம்



  • ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் உணர்த்துவது சொல். இதனைப் பதம் என்றும் கூறுவர்.
  • இப்பதம் பகாபதம், பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பகாபதம்
  • பிரித்தால் பொருள் தராத சொல் பகாபதம் எனப்படும்.
  • எ.கா. மரம், உண், பல, பிற, சார
பகுபதம்
  • பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தரக் கூடியதுமான சொல் பகுபதம் எனப்படும்.
  • எ.கா. நடந்தான், நின்றார்
பெயர்ப்பகுபதம்
  • வேலன் – வேல்+அன் (வேல் – பகுதி, அன் – விகுதி)
வினைப்பகுபதம்
  • செய்தான் – செய்+த்+ஆன் ( செய் – பகுதி, த் – இடைநிலை, ஆன் – விகுதி)
பகுபத உறுப்புகள்
  • பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். 
  • அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்பனவாகும்
பகுதி
  • பகுபதத்தின் முதல் உறுப்பு பகுதி.
  • ஒரு சொல்லின் அடிச் சொல்லே பகுதியாகும்.
  • இதை முதனிலை என்றும் கூறுவர்.
  • பகாபதமாக அமையும்.
  • ஏவல் (கட்டளை) பொருளில் வரும்.
விகுதி
  • பகுபதத்தின் இறுதி உறுப்பு விகுதி
  • இதனைக் கடைநிலை என்றும் கூறுவர்
  • இவ்விகுதி திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும்.
இடைநிலை
  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு இடைநிலை என்று பெயர்.
  • வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையைக் கால இடைநிலை, எதிர்மறை இடைநிலை என இருவகைப்படுத்துவர்.
  • பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையைப் பெயர் இடைநிலை என்பர்.
கால இடைநிலை
  • இறந்தகால இடைநிலைகள - த், ட், ற், இன்
  • நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று
  • எதிர்கால இடைநிலைகள் - ப், வ்
  • எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்
  • பெயர் இடைநிலைகள் - ச், ஞ், ந், த், வ்
சந்தி
  • பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும் உறுப்பு, சந்தி எனப்படும்.
  • சந்தி, பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்காகும்.
  • பெரும்பாலும் த், ப், க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஒன்று சந்தியாக வரும்.
  • உடம்படுமெய்கள் (ய். வ்) சந்தியாக வருவதுண்டு.
சாரியை
  • பகுதி, விகுதி, இடைநிலையைச் சார்ந்து வரும் உறுப்பு சாரியை.
  • பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
  • அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் என்பன சாரியைகளாகும்.
விகாரம்
  • பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றமே விகாரமாகும்
  • ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிவாகவும் மாற்றம் பெறும். இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.
எழுத்துப் பேறு
  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப் பேறு எனப்படும்.
  • பெரும்பாலும் த் மட்டுமே எழுத்துப் பேறாக வரும்.
  • சாரியை இடத்தில் த் வந்தால் அது எழுத்துப்பேறு
நினைவில் கொள்க.
  • இறந்தகால இடைநிலைகள் – த், ட், ற், இன்
  • நிகழ்கால இடைநிலைகள் – கிறு, கின்று, ஆநின்று
  • எதிர்கால இடைநிலைகள் – ப், வ்
  • எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்
  • தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் – என், ஏன், அல், அன், கு, டு, து, று
  • தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் – எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும்
  • முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் – ஐ, ஆய், இ
  • முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் - இர், ஈர், மின்
  • படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் - அன், ஆன்
  • படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதிகள் - அள், ஆள்,
  • படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார், கள்
  • படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் - து, று, டு
  • படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள் - அ, ஆ
  • வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, ய, இயர்
  • தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் - அ, உம்
  • தெரிநிலை வினையெச்ச விகுதிகள் – உ, இ

No comments:

Post a Comment