1.
’மெத்த வணிகன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-----
2.
’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். – இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது---------
3.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.------
4.
’கேட்டாவர் மகிழப் பாடிய பாடல் இது’ – இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே----------------
5.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ---------.
6.
”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூற்கிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
7.
செய்தி 1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது எனக்கு பெருமையே. செய்தி 3 – காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
8.
”பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல் செய்தி -------.
9.
’பெரிய மீசை சிரித்தார்' – வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை------
10.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்கஅ) கொண்டல் - 1. மேற்கு ஆ) கோடை - 2. தெற்கு இ) வாடை - 3. கிழக்கு ஈ) தென்றல் - 4. வடக்கு
11.
பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
12.
‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது ------
13.
அறிஞருக்கு நூல் , அறுஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ----------
14.
காசிக்காண்டம் என்பது -----------
15.
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்’ என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை---------
16.
'உனதருளே பார்ப்பன் அடியேனே ' - யாரிடம் யார் கூறியது?
17.
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க. தலைப்பு : செயற்கை நுண்ணறிவு குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் வரைபடம் போக்குவரத்திற்குச் வழியைக் காட்டுகிறது.
18.
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசை யும்' என் னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
19.
குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மா’ என் று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –
20.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
21.
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.
22.
அருந்துணை என்பதைப் பிரித்தால் ……………..
23.
“இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது ……. வினா. “அதோ, அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது …… விடை.
24.
“ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி, மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
25.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ………… இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ……..….
26.
குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்
27.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது ?
28.
கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினை எது ?
29.
மலர்கள் தரையில் நழுவும் எப்போது ?
30.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
31.
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க
32.
மாலவன் குன்றம் போனலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும். மாலவன் குன்றம் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
33.
"தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்.
34.
இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி போரிடுவதன் காரணம் ---------- .
35.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது--------
36.
மேன்மை தரும் அறம் என்பது---------.
37.
‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது
38.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
39.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்------
40.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
41.
“இவள் தலையில் எழுதியதோ, கற்காலம்தான் எப்போதும்...” - இவ்வடிகளில் கற்காலம் என்பது
42.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
43.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ------ --------- வேண்டினார்
44.
வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி
45.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
00:00:00
No comments:
Post a Comment