Breaking

Showing posts with label TET TAMIL. Show all posts
Showing posts with label TET TAMIL. Show all posts

Sunday, April 5, 2026

6:06:00 AM

9TH TAMIL - வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள் 

தற்கால உரைநடையில் வல்லினம் மிகவேண்டிய இடங்களாகக் கீழ்க்காண்பனவற்றைக் கூறலாம்.

1. அச்சட்டை

இந்தக்காலம்

த்திசை?

எந்தப்பணம்?

அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.

 

2. கதவைத்திற

தகவல்களைத்திரட்டு

காட்சியைப்பார்

என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

 

3. முதியவருக்குக்கொடு

மெட்டுக்குப்பாட்டு

ஊருக்குச்செல்

கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

 

4. எனக்கேட்டார்

வருவதாகக்கூறு

என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்.


மேலும் சில வல்லினம் மிகும் இடங்களை அறிந்துகொள்வோம்

அதற்குச் சொன்னேன்

இதற்குக் கொடு

எதற்குக் கேட்கிறாய்?

அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

 

இனிக் காண்போம்

தனிச் சிறப்பு

இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும்.

 

மிகப் பெரியவர்

மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.

 

எட்டுத்தொகை

த்துப்பாட்டு

எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின்பின் வல்லினம் மிகும்.

 

தீப் பிடித்தது

பூப் பந்தல்

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.

 

கூவாக் குயில்

ஓடாக் குதிரை

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வல்லினம் மிகும்.

 

கேட்டுக் கொண்டான்

விற்றுச் சென்றான்

வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும்.

 

ஆடச் சொன்னார்

ஓடிப் போனார்

(அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.

 

புலித்தோல்

ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

 

கிழக்குப் பகுதி

வடக்குப் பக்கம்

திசைப் பெயர்களின்பின் வலிமிகும்.

 

மல்லிகைப்பூ

சித்திரைத்திங்கள்

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

 

தாமரைப்பாதம்

உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

 

சாலப்பேசினார்

தவச்சிறிது

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்.

 

நிலாச் சோறு

கனாக் கண்டேன்

தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின்பின் வல்லினம் மிகும்.

 

வாழ்க்கைப்படகு

உலகப்பந்து

சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.

3:39:00 AM

9TH TAMIL - செய்தி


9TH TAMIL செய்தி
  • நாதஸ்வர வித்துவானின் மகன் = தங்கவேல்.
  • சங்கீத கோஷ்டியின் தலைவர் = பிலிப் போல்ஸ்கா
  • வக்கீல் = மணி.
  • தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை “உதயசூரியன்” என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார்.
  • இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
  • ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
  • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
  • தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
  • உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
  • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
  • நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
  • “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் தி. ஜானகிராமன்.
  • தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
  • செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
  • தி. ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை “உதயசூரியன்” என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
  • ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974இல் நூலாக வெளியிட்டார்.
  • தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை, அடுத்த வீடு ஐம்பது மைல் என்பதாகும்.
  • தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
  • உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
  • வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
  • நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
  • “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் தி. ஜானகிராமன்.
  • தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
  • செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
  • தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே. சாமிநாதர், மௌனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்.
  • இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று.
  • மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது.
  • இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.
  • 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும்  நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை.
  • 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
  • தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை.
  • ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது.
  • நாகசுரம் என்ற பெயரே சரியானது.
  • நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது.
  • வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது.
  • எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது.
  • நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது.
  • சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.
  • 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
  • 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
  • 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
  • 1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
  • 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
  • 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
  • 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.

1. தி. ஜானகிராமன், தன் ஜப்பான் பயண அனுபவங்களை உதய சூரியன் என்னும் தலைப்பில் ........ வார இதழில் எழுதினார்.

 அ) கணையாழி   

ஆ) கிராம ஊழியன்

 இ) சுதேசமித்திரன்   

ஈ) மணிக்கொடி

2. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) கருங்கடலும் கலைக்கடலும் 

ஆ) நடந்தாய் வாழி காவேரி

இ) சக்தி வைத்தியம்   

ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை தி.ஜானகிராமனின் பயண இலக்கியங்கள்)

3. நாகசுரக் கருவி ................ மரத்தில் செய்யப்படுகிறது.

அ) யா  

ஆ) ஆச்சா 

இ) பலா  

ஈ) மூங்கில்

4. ‘கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்’ என்றவர்.

அ) தி. ஜானகிராமன்   

ஆ) புதுமைபித்தன்

இ) மேலாண்மை பொன்னுசாமி 

ஈ) கு. அழகிரிசாமி

5. தி. ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு.

அ) 1970  

ஆ) 1979  

இ) 1987  

ஈ) 1996

6. ‘உதய சூரியன்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.

அ) 1967  

ஆ) 1974  

இ) 1987  

ஈ) 1996

7. ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.

அ) 1967  

ஆ) 1974  

இ) 1987  

ஈ) 1996

8. தமிழில் எந்த நூற்றாண்டு வரை நாதசுரம் பற்றிய குறிப்பு கிடைக்கப்பெறவில்லை?

அ) ஆறாம்    

ஆ) பத்தாம்

இ) பதிமூன்றாம்   

ஈ) பதினைந்தாம்

9. ‘சங்கீத இதத்னாகரம்’ எந்த நூற்றாண்டு இயற்றப்பட்டது?

அ) ஆறாம்    

ஆ) பத்தாம்

இ) பதிமூன்றாம்   

ஈ) பதினைந்தாம்

10. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) உ.வே.சாமிநாதர்   

ஆ) மௌனி

இ) புதுமைப்பித்தன்   

ஈ) தி. ஜானகிராமன்

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவர், தஞ்சைப் பகுதியைச் சார்ந்தவர்கள்)