Breaking

Friday, April 24, 2026

8TH TAMIL - புணர்ச்சி


நிலைமொழி, வருமொழி

  • சொல்லில் முதலில் உள்ள சொல்லை நிலைமொழி என்றும், பின்னால் வந்து சேரும் சொல்லை வருமொழி என்று கூறுவார்.
  • எ.கா
    • தமிழமுது
    • தமிழ் = நிலைமொழி
    • அமுது = வருமொழி

புணர்ச்சி என்றால் என்ன

  • சொற்கள் சேரும் பொழுது நிலைமொழியின் இறுதி எழுதும், வருமொழியின் முதல் எழுதும் இணையும்.
  • நிலைமொழியின் ஈறும் (இறுதி எழுத்து), வருமொழியின் முதலும் இணைவதைப் “புணர்ச்சி” என்கிறோம்.

உயிரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • சிலை + அழகு = சிலையழகு
  • இதில் “லை” (ல் + ஐ) ஆனது, நிலைமொளியான சிலை என்பதன் இறுதி எழுத்தாகும்.

மெய்யீற்றுப் பௌணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • மண் + அழகு = மண்ணழகு
  • இதில் நிலைமொழியின் இறுதி எழுத்து “ண்” ஆகும்.

உயிர்முதல் புணர்ச்சி என்றால் என்ன

  • வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது “உயிர்முதல் புணர்ச்சி” எனப்படும்.
  • எ.கா:
    • பொன் + உண்டு = பொன்னுண்டு

மெய்முதல் புணர்ச்சி என்றால் என்ன

  • வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது “மெய்முதல் புணர்ச்சி” எனப்படும்.
  • எ.கா:
    • பொன் + சிலை = பொற்சிலை (சி = ச் + இ)

இயல்பு புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • தாய் + மொழி = தாய்மொழி

விகாரப் புணர்ச்சி என்றால் என்ன

  • இரண்டு சொற்கள் இணையும் பொழுது, நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்

  • விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை,
    • தோன்றல் விகாரம்
    • திரிதல் விகாரம்
    • கெடுதல் விகாரம்

தோன்றல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஒரு எழுத்து தோன்றுவது “தோன்றல் விகாரம்” எனப்படும்.
  • எ.கா:
    • தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

திரிதல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது “ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது” திரிதல் விகாரம் எனப்படும்.
  • எ.கா:
    • வில் + கொடி = விற்கொடி

கெடுதல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் பொது “ஓர் எழுத்து மறைவது” கெடுதல் விகாரம் எனப்படும்.
  • எ.கா:
    • மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி.

ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்தல்

  • இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு.
  • எ.கா:
    • நாடகம் + கலை = நாடகக்கலை
  • இங்கு,
    • கெடுதல் விகாரம் படி = நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது
    • தோன்றல் விகாரம் படி = க் என்னும் மெய் எழுத்து தோன்றியது.


1.       நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது.

          அ)    இயல்பு புணர்ச்சி                    ஆ)   விகாரப்புணர்ச்சி

          இ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஈ)     மெய்யீற்றுப் புணர்ச்சி

2.       நிலைமொழியும் வருமொழியும் சில மாற்றங்களுடன் இணைவது.

          அ)    இயல்பு புணர்ச்சி                       ஆ)   விகாரப்புணர்ச்சி

          இ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஈ)     மெய்யீற்றுப் புணர்ச்சி

3.       விகாரப்புணர்ச்சி ............ வகைப்படும்.

          அ)    இரண்டு  ஆ)   மூன்று    இ)    நான்கு     ஈ)     ஐந்து

4.       ‘தாய்+தமிழ்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு    ஆ)   தோன்றல்       இ)    திரிதல்    ஈ)     கெடுதல்

5.       ‘மனம்+மகிழ்ச்சி’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு    ஆ)   தோன்றல்        இ)    திரிதல்    ஈ)     கெடுதல்

6.       ‘வில்+கொடி’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு    ஆ)   தோன்றல்        இ)    திரிதல்   ஈ)     கெடுதல்

7.       ‘பாலாடை’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    இயல்பு   ஆ)   தோன்றல்        இ)    திரிதல்    ஈ)     கெடுதல்

8.       ‘பொன்+உண்டு’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஆ)   மெய்யீற்றுப் புணர்ச்சி

          இ)    உயிர் முதல் புணர்ச்சி          ஈ)     மெய் முதல் புணர்ச்சி

9.       ‘பொன்+சிலை’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.

          அ)    உயிரீற்றுப் புணர்ச்சி               ஆ)   மெய்யீற்றுப் புணர்ச்சி

          இ)    உயிர் முதல் புணர்ச்சி             ஈ)     மெய் முதல் புணர்ச்சி

10.     பொருத்துக.

          அ)    மட்பாண்டம்   -        1.       தோன்றல் விகாரம்

          ஆ)   மரவேர்             -        2.       இயல்பு புணர்சி

          இ)    மணிமுடி                   -        3.       கெடுதல் விகாரம்

          ஈ)     கடைத்தெரு   -        4.       திரிதல் விகாரம்

          அ)    4 2 1 3        ஆ)   4 3 2 1       இ)    4 3 1 2        ஈ)     4 1 2 3

No comments:

Post a Comment