Breaking

Friday, April 24, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 01



வரலாறு மற்றும் காலக்கோடு (History and Timeline)

1.     வரலாறு என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து ('இஸ்டோரியா') பெறப்பட்டது. அதன் பொருள்: விசாரிப்பதன் மூலம் கற்றல்.

2.     வரலாற்றின் தந்தை: ஹெரடோடஸ்.

3.     அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்ட ஆங்கிலேயர்: சார்லஸ் ஆலன்.

4.     மனிதர்களின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று: சக்கரம்.

5.     மானுடவியல் (Anthropology) என்பது பெறப்பட்ட மொழி: கிரேக்க வார்த்தை.

6.     குரோமேக்னான்ஸ் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்: பிரான்சில் உள்ள லாஸ்காஸ் குகைகள்.

7.     நெருப்பின் பயனை அறிந்திருந்த தொடக்ககால மனிதன்: ஹோமோ எரக்டஸ்.

8.     கலிங்கத்தின் மீது அசோகர் போர் தொடுத்தது: கி.மு. 261.

9.     பண்டைய மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம்: ஹரியங்கா வம்சம்.

10.   இந்தியாவிலேயே முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள்: நந்தர்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization)

1.     ஹரப்பா நகரத்தை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர்: சார்லஸ் மேசன்.

2.     சிந்துவெளி மக்களுக்குப் பயன் தெரியாத உலோகம்: இரும்பு.

3.     மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்: செம்பு.

4.     உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்: மெசபடோமியா நாகரிகம்.

5.     இந்திய தொல்லியல் துறை (ASI) நிறுவப்பட்ட ஆண்டு: 1861.

6.     கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்: குஜராத்திலுள்ள லோதல்.

சங்க காலம் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் (Sangam Period and Archaeological Studies)

1.     சங்க காலச் சோழ அரசனின் துறைமுகம்: பூம்புகார்.

2.     மதுரை 'தூங்கா நகரம்' என அழைக்கப்படக் காரணமான அங்காடிகள்: நாளங்காடி மற்றும் அல்லங்காடி.

3.     "நகரங்களில் சிறந்தது காஞ்சி" என்று கூறியவர்: கவிஞர் காளிதாசர்.

4.     "கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று காஞ்சியைப் புகழ்ந்தவர்: திருநாவுக்கரசர்.

5.     பொருந்தல் அகழாய்வு இடம்: திண்டுக்கல் மாவட்டம்.

6.     கீழடி அகழாய்வு இடம்: சிவகங்கை மாவட்டம்.

7.     சங்க காலச் சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்: கரிகால் வளவன் (அல்லது) கரிகாலன்.

8.     'கொற்கையின் தலைவன்' எனப் போற்றப்பட்ட பாண்டிய அரசன்: நெடுஞ்செழியன்.

9.     முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டவர்: மூத்த பிளினி.

10.   களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலம்: சுமார் இரண்டரை நூற்றாண்டுகள்.

மதங்கள் மற்றும் பேரரசுகள் (Religions and Empires)

1.     ஆரியர்களின் கல்வி முறை: குருகுலக் கல்வி முறை.

2.     'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எடுக்கப்பட்டது: முண்டக உபநிடதம்.

3.     சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர்: ரிஷபர்.

4.     சமண மதத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரர்: மகாவீரர்.

5.     கௌதம புத்தரின் இயற்பெயர்: சித்தார்த்தா.

6.     பௌத்த சங்கம் பிரிந்த பிரிவுகள்: ஹீனயானம் மற்றும் மகாயானம்.

7.     புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்திய இடம்: சாரநாத் மான்கள் பூங்கா.

8.     நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தங்கி கல்வி பயின்ற சீனப் பயணி: யுவான் சுவாங்.

9.     மெகஸ்தனிஸ் எழுதிய நூல்: இண்டிகா.

மௌரியர், குப்தர் மற்றும் தென்னிந்திய அரசுகள் (Mauryas, Guptas, and South Indian Kingdoms)

1.     மௌரியப் பேரரசை நிறுவியவர்: சந்திரகுப்த மௌரியர்.

2.     நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்: குமாரகுப்தர்.

3.     சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்: கௌதமபுத்திர சதகர்ணி.

4.     கனிஷ்கர் கூட்டிய நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்: ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தலவனத்தில்.

5.     அஸ்வகோஷர் எழுதிய முதல் சமஸ்கிருத நாடகம்: புத்த சரிதம்.

6.     குப்த அரச வம்சத்தை நிறுவியவர்: ஸ்ரீகுப்தர்.

7.     'கவிராஜா' எனும் பட்டம் பெற்ற குப்த அரசர்: சமுத்திர குப்தர்.

8.     விக்கிரமாதித்யர் என்று அறியப்பட்ட குப்த மன்னர்: இரண்டாம் சந்திரகுப்தர்.

9.     அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்: சுஸ்ருதர்.

10.   ஹர்ஷவர்த்தனர் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்: ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா.

11.   சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர்: ஹரிசேனர்.

12.   காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்: இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்).

13.   'மாமல்லன்' என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன்: முதலாம் நரசிம்மவர்மன்.

14.   சாளுக்கியர்களின் தலைநகரம்: வாதாபி (பதாமி).

15.   ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர்: தந்திதுர்க்கர்.

16.   எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை உருவாக்கியவர்: முதலாம் கிருஷ்ணர்.

No comments:

Post a Comment