Breaking

Friday, April 24, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 02


புவியியல் மற்றும் விண்வெளி (Geography and Space)

1.     அண்டத்தைப் பற்றிய படிப்பின் பெயர்: அண்டவியல் (Cosmology).

2.     சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை: 6000°C.

3.     இரட்டைக் கோள்கள் என அழைக்கப்படுபவை: வெள்ளியும் புவியும்.

4.     உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்: புவி.

5.     மிக அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள்: வியாழன்.

6.     செவ்வாய்க் கோளை ஆராய இஸ்ரோ (ISRO) அனுப்பிய விண்கலத்தின் பெயர்: மங்கள்யான்.

7.     தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள்: யுரேனஸ்.

8.     76 வருடங்களுக்கு ஒருமுறை விண்ணில் தோன்றும் வால்விண்மீன்: ஹேலி.

9.     புவி தன் அச்சில் சாய்ந்திருக்கும் அளவு: 23½ டிகிரி.

10.   உலகின் மிகப் பெரிய கண்டம்: ஆசியா.

11.   உலகின் மிகச் சிறிய கண்டம்: ஆஸ்திரேலியா.

12.   "உலகத்தின் கூரை" என்று அழைக்கப்படுவது: திபெத் பீடபூமி.

13.   உலகின் மிக உயரமான சிகரம்: எவரெஸ்ட் சிகரம் (8848 மீட்டர்).

14.   புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல்: பசிபிக் பெருங்கடல்.

15.   பசிபிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியின் பெயர்: மரியானா அகழி.

16.   ஆங்கில எழுத்து 'S' வடிவத்தைப் போன்று உள்ள பெருங்கடல்: அட்லாண்டிக் பெருங்கடல்.

17.   பாக் நீர்ச்சந்தி இணைப்பது: வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும்.

18.   "உலகின் பெரும் மருந்தகம்" என அழைக்கப்படுவது: வெப்ப மண்டல மழைக்காடுகள்.

19.   வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் திமிங்கலப் புனுகு பெறப்படுவது: ஸ்பெர்ம் திமிங்கலம்.

20.   ஆசியாவின் மிக நீளமான ஆறு: யாங்சி.

21.   உலகின் மிக ஈரப்பதம் வாய்ந்த பகுதி: மௌசின்ராம்.

22.   தென்கிழக்கு ஆசியாவின் 'அரிசிக் கிண்ணம்' என அழைக்கப்படும் நாடு: தாய்லாந்து.

23.   உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம்: டிரான்ஸ்-சைபீரியன் இருப்புப்பாதை.

24.   ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு: வோல்கா ஆறு.

25.   உலகிலேயே நீர் மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள்: நார்வே மற்றும் ஸ்வீடன்.

அட்ச, தீர்க்கக் கோடுகள் மற்றும் பொருளாதாரம் (Latitudes, Longitudes, and Economy)

1.     முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவர்: தாலமி.

2.     0° அட்சக்கோடு அழைக்கப்படுவது: நிலநடுக்கோடு.

3.     பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தீர்க்கக்கோடு: 180° தீர்க்கக்கோடு.

4.     இந்திய திட்ட நேரம் (IST) கணக்கிடப்படும் ஆதாரத் தீர்க்கக்கோடு: 82½ டிகிரி கிழக்கு தீர்க்கக்கோடு.

5.     உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்: முதல் நிலை தொழில்.

6.     சேவைத் துறை என்று அழைக்கப்படுவது: மூன்றாம் நிலைத் தொழில்கள்.

அரசியலமைப்பு மற்றும் இந்தியத் தேசிய சின்னங்கள் (Constitution and Indian National Emblems)

1.     இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்" என்று கூறிய வரலாற்றாசிரியர்: வி.ஏ.ஸ்மித்.

2.     இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி: தமிழ்மொழி (2004).

3.     'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற நூலை எழுதியவர்: ஜவஹர்லால் நேரு.

4.     சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு: பிரிவு 14.

5.     தீண்டாமையை ஒழிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு: பிரிவு 17.

6.     "இந்திய அரசியலமைப்பின் தந்தை" எனப் போற்றப்படுபவர்: டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்.

7.     இந்தியாவின் 'ஏவுகணை மனிதர்' என்று சிறப்பிக்கப்படுபவர்: அப்துல் கலாம்.

8.     இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரம்: சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம்.

9.     இந்திய தேசிய கீதத்தை வங்காள மொழியில் எழுதியவர்: இரவீந்திரநாத் தாகூர்.

10.   தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை எழுதியவர்: பங்கிம் சந்திர சட்டர்ஜி.

11.   இந்திய ரூபாய் சின்னத்தை (₹) வடிவமைத்தவர்: டி.உதயகுமார்.

12.   இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாகத் தயாராகி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 1949 நவம்பர் 26.

மக்களாட்சி மற்றும் உள்ளாட்சி (Democracy and Local Governance)

1.     மக்களாட்சியின் பிறப்பிடம்: கிரேக்கம்.

2.     உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு: நியூசிலாந்து (1893).

3.     இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பு: சென்னை மாநகராட்சி (1688).

4.     தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி: வாலாஜாபேட்டை நகராட்சி.

5.     தேசிய ஊராட்சி தினம்: ஏப்ரல் 24.

No comments:

Post a Comment