Breaking

Saturday, April 25, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 12


வரலாறு:

1.     சக ஆண்டு முறை தொடங்கிய ஆண்டு (பேரரசர் கனிஷ்கர் காலத்தில்): கி.பி. 78.

2.     லீப் ஆண்டுகளில் சக ஆண்டு முறை தொடங்கும் நாள்: மார்ச் 21.

3.     தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பரிந்துரை: மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழு.

4.     ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயம்: ருபியா (16ம் நூற்றாண்டு).

5.     ஹரப்பாவை முதன்முதலில் விவரித்தவர்: சார்லஸ் மேசன் (கிழக்கிந்திய கம்பெனியில் படைவீரர் மற்றும் ஆராய்ச்சியாளர்).

6.     வேத காலத்தில் 'சுருதிகள்' என்ற இலக்கியப் பிரிவு: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள்.

7.     வேத காலத்தில் 'ஸ்மிருதிகள்' என்ற இலக்கியப் பிரிவு: இதிகாசங்கள், புராணங்கள்.

8.     வேத காலத்தில் 'ஜனா' (இனக்குழு) வின் தலைவர்: ராஜன்.

9.     வேதகாலத்தின் துறவற வாழ்க்கை (மோட்சம் அடைவதற்கான): சன்னியாசம்.

10.   மகாவீரர் இறந்த இடம்: பவபுரி (பீகார்).

11.   சமண மதத்தில் 'தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது' என்ற பொருள் தரும் சொல்: ஜினா.

12.   புத்தர் துறவறம் மேற்கொண்ட வயது: 29.

13.   அசோகர் கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரிக்கும் கல்வெட்டு: 13 வது பாறைக் கல்வெட்டு.

14.   'அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்' என்று கூறியவர்: H.G. வெல்ஸ்.

15.   தர்மத்தின் பொருள் குறித்து விளக்கும் அசோகரின் கல்வெட்டு: இரண்டாம் தூண் கல்வெட்டு.

16.   மௌரியர் காலத்தில் வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட கல்வெட்டு எழுத்துமுறை: கரோஸ்தி.

17.   பேராணை என்பது: அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்படும் ஆணை அல்லது பிரகடனம்.

18.   மௌரிய அமைச்சரவை (மந்திரிபரிஷத்) உறுப்பினர்கள்: ஒரு புரோகிதர், ஒரு சேனாபதி, ஒரு மகாமந்திரி, இளவரசன்.

19.   நாகார்ஜுனா கொண்டாவிலுள்ள குகைகளில் கல்வெட்டுகள் உள்ளவர்: தசரத மௌரியர் (அசோகரின் பேரன்).

20.   'யக்ஷன்' தொடர்புடைய கடவுள்: நீர், வளம், மரங்கள், காடுகள் மற்றும் காட்டுச்சூழல்.

21.   ஒலிம்பியாவில் கட்டப்பட்ட கோயில் அர்ப்பணிக்கப்பட்ட கடவுள்: ஜியஸ் கடவுள் (கிரிஸ் நாடு).

22.   சங்க காலத்தைப் பற்றிய அயல்நாட்டவர் குறிப்புகள்: 'எரித்திரியக்கடலின் பெரிப்ளஸ்', 'பிளினியின் இயற்கை வரலாறு'.

23.   தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்ற பாண்டிய அரசன்: நெடுஞ்செழியன்.

24.   சங்க காலத்தில் அரசருக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழு: எண்பேராயம் (8 பேர் கொண்ட குழு).

25.   'மத்தவிலாசப்பிரகசனம்' நாடகத்தை எழுதியவர்: முதலாம் மகேந்திரவர்மன்.

26.   வெங்கி அரசைக் கைப்பற்றி விஷ்ணுவர்த்தனருக்கு வழங்கியவர்: இரண்டாம் புலிகேசி.

27.   காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிய சாளுக்கிய அரசர்கள்: முதலாம் விக்கிரமாதித்தன் மற்றும் இரண்டாம் விக்கிரமாதித்தன்.

28.   சாளுக்கியர்களின் ஓவியப் பாணி: வாகடகர் பாணி.

29.   தக்கோலம் போர் நடைபெற்ற மாவட்டம்: வேலூர் மாவட்டம் (சோழர்களைத் தோற்கடித்தவர் மூன்றாம் கிருஷ்ணர்).

30.   மாபெரும் லேஷன் புத்தர் சிலையை கட்டிய அரச வம்சம்: சீனாவின் தாங் அரச வம்சம்.

ஆளுமைகள் மற்றும் விருதுகள்:

1.     டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பி.எச்.டி பட்டம் பெற்றது (கொலம்பியா பல்கலைக்கழகம்): 1927.

2.     டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாரத ரத்னா விருது பெற்றது: 1990.

3.     'தி லூமினஸ் பார்க்' மற்றும் 'மிசன் இந்தியா' நூல்களின் ஆசிரியர்: அப்துல் கலாம்.

4.     உலக இளையவர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் (14வது வயதில்): விஸ்வநாதன் ஆனந்த்.

5.     ரியோ பாராலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் (2016): மாரியப்பன் தங்கவேலு.

6.     முதல் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் (2008, பிரான்ஸ்): செல்வி. செ. இளவழகி.

7.     'கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்' என்று புகழ்ந்து பாடியவர்: பாரதியார்.

8.     இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் இடம்பெற்ற முக்கிய பெண் உறுப்பினர்கள்: விஜயலட்சுமி பண்டிட், சரோஜினி நாயுடு.

9.     அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் ஆலோசகர்: பி.என். ராவ்.

அரசியலமைப்பு மற்றும் மக்களாட்சி:

1.     அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம்: 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி.

2.     இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன்மாதிரியாகக் கொண்ட நாடுகள்: 60 நாடுகள்.

3.     இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் பாதுகாக்கப்படும் பேழை: ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழை (நாடாளுமன்ற நூலகம்).

4.     ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு அளித்த வரையறை: மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி.

5.     அதிபர் மக்களாட்சி நடைபெறும் முக்கிய நாடுகள்: அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா.

6.     ஐக்கிய பேரரசு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட ஆண்டு: 1918.

7.     அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட ஆண்டு: 1920.

8.     ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலர்: வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO).

9.     மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியாகச் செயல்படுபவர்: இந்திய ஆட்சிப்பணி (..) அதிகாரி.

அறிவியல் மற்றும் இயற்கை வளங்கள்:

1.     மருத்துவப் புரதம் தயாரித்தலுக்குப் பயன்படும் கடல் வளம்: கடல் ஈஸ்ட்.

2.     மருத்துவ குணம் உடைய தாவரங்களின் சதவிகிதம் (புவியில்): 25 சதவிகிதம் (.கா. சின்கோனா).

3.     திமிங்கலப்புனுகு எடுத்துக்காட்டு: பன்னாட்டு வளங்கள்.

No comments:

Post a Comment