தொழில்கள் மற்றும் பொருளாதாரம்:
1.
முதல் நிலைத் தொழில்கள்: மரம் வெட்டுதல், மூலப்பொருள்கள் சேகரித்தல், மீன் பிடித்தல்.
2.
இரண்டாம் நிலைத் தொழில்கள்: முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருளிலிருந்து அன்றாடத் தேவைக்கான பொருள்களை உற்பத்தி செய்தல். (எ.கா: காடு சார்ந்த மற்றும் கடல்சார் தொழிற்சாலைகள்).
3.
மூன்றாம் நிலைத் தொழில்கள் (சேவைத் துறை): போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வர்த்தகம், வங்கி சேவைகள்.
புவியியல்:
1.
அதிக மழை பொழியும் பகுதி: மௌசின்ராம் (மேகாலயா).
2.
குறைவான மழைப்பொழியும் பகுதி: ஜெய்சால்மர் (ராஜஸ்தான்).
3.
ஆர்டிக் பெருங்கடலில் கலக்கும் ஆறுகள்: ஓப், எனிசி, லேனா.
4.
திபெத் பீடபூமியில் உற்பத்தியாகும் ஆறுகள்: ஹோவாங்கோ, மீகாங்.
5.
அதிக இரும்புத்தாது இருப்புள்ள ஆசிய நாடுகள்: சீனா மற்றும் இந்தியா.
6.
நெதர்லாந்தில் கடல்நீரைத் தடுக்க எழுப்பப்பட்ட சுவர்: டைக்.
7.
ஐரோப்பிய ஒன்றியம்: 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட குழுமம்.
8.
ஐரோப்பாவின் முக்கிய மீன்பிடித்தளம்: டாகர் பாங்க்ஸ்.
9.
'இங்கிலாந்தின் முதுகெலும்பு' என அழைக்கப்படும் மலைத்தொடர்: பென்னைன்ஸ்.
10.
உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு: ஐஸ்லாந்து (3 நபர்கள்/ச.கி.மீ).
11.
வட அரைக்கோளத்தில் உள்ள அட்சக்கோடுகள்: 89.
12.
இந்திய நேர மண்டலம் செல்லும் இடம்: மிர்சாபூர் (அலகாபாத்) வழியே 82½ டிகிரி கிழக்கு தீர்க்கக்கோடு.
13.
உலகில் உள்ள மொத்த மணி நேர மண்டலங்கள்: 24.
14.
தீர்க்கக் கோடுகள் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கு (1884): அமெரிக்காவின் வாஷிங்டன் நகர்.
பண்பாடு மற்றும் மொழி:
1.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவில் உள்ள மொழிகள்: 122 முக்கிய மொழிகள் மற்றும் 1599 பிற மொழிகள்.
2.
இந்தியாவில் உள்ள முக்கிய மொழிக் குடும்பங்கள்: இந்தோ-ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோஆஸ்டிக், சீன திபெத்தியன்.
3.
மலையாளம் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு: 2013.
4.
ஒடியா செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு: 2016.
5.
அசாம் மாநில நடனங்கள்: சத்ரியா (செவ்வியல்), பிஹு (நாட்டுப்புற).
6.
பஞ்சாப் மாநில நடனம்: பாங்க்ரா.
7.
குஜராத் மாநில நடனங்கள்: கார்பா, தாண்டியா.
8.
ராஜஸ்தான் மாநில நடனங்கள்: கல்பேலியா, கூமர்.
9.
உத்திரப்பிரதேச மாநில நடனங்கள்: ராசலீலா, சோலியா.
10.
ஜம்மு மற்றும் காஸ்மீர் மாநில நடனம்: தும்ஹல்.
11.
'வேற்றுமையில் ஒற்றுமை' என்று 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' நூலில் கூறியவர்: ஜவஹர்லால் நேரு.
12.
சீனா, வியட்நாம் மற்றும் தைவானில் கொண்டாடப்படும் பண்டிகை: நடு இலையுதிர்கால பண்டிகை (நிலவு பண்டிகை).
13.
இஸ்ரேல் நாட்டின் அறுவடைத் திருவிழா: சுக்கோத்.
தமிழகப் புள்ளிவிவரங்கள் (2011 கணக்கெடுப்பு):
1.
அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள்: கன்னியாகுமரி (91.75%), சென்னை (90.18%).
2.
குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் (அரியலூர்): 71.34 சதவீதம்.
3.
அதிகபட்ச பாலின விகிதம் கொண்ட மாவட்டம்: நீலகிரி (1041).
4.
குறைந்தபட்ச பாலின விகிதம் கொண்ட மாவட்டம்: தருமபுரி (946).
5.
அதிக நகராட்சிகள் உள்ள மாவட்டம்: காஞ்சிபுரம்.
6.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை: 12.
7.
தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை: 561.
8.
அதிகப்படியாக ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்ட மாவட்டம் (22): விழுப்புரம்.
9.
மயில்களுக்கான சரணாலயம்: விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்).
10.
தமிழகத்தின் மாநில விலங்கு: நீலகிரி வரையாடு.
11.
தமிழகத்தின் மாநில பறவை: மரகதப் புறா.
12.
தமிழகத்தின் மாநில மலர்: செங்காந்தள் மலர்.
13.
தமிழகத்தின் மாநில மரம்: பனை மரம்.
இந்தியச் சின்னங்கள்:
1.
தேசிய இயற்கை சின்னங்கள் - 1950: தாமரை, ஆலமரம், மாம்பழம்.
2.
தேசிய பறவை (மயில்) - 1963.
3.
தேசிய விலங்கு (புலி) - 1973.
4.
ஆற்று ஓங்கில் (Dolphin) மற்றும் யானை (தேசிய இயற்கை சின்னங்கள்) - 2010.
5.
தேசியக்கொடியின் நிறங்களின் குறியீடுகள்: பச்சை - செழுமை/வளம், வெள்ளை - நேர்மை/அமைதி/தூய்மை.
6.
முதல் தேசியக் கொடியை செங்கோட்டையில் ஏற்றியவர் (15.08.1947): பண்டித ஜவஹர்லால் நேரு.
7.
தேசிய இலச்சினையின் அடிப்பகுதியில் உள்ள உருவங்கள்: யானை, குதிரை, காளை, சிங்கம்.
8.
தேசிய கீதம் முதன்முதலில் பாடப்பட்ட மாநாடு: 1911 டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு.
9.
தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலை எழுதியவர்: பங்கிம் சந்திர சட்டர்ஜி.
10.
தேசிய உறுதிமொழியை தெலுங்கில் எழுதியவர்: வெங்கட சுப்பாராவ்.




No comments:
Post a Comment