TAMIL ELIGIBILITY TEST ALL TYPES OF MATERIALS
PG TRB ONLINE TEST LINKS
Monday, December 1, 2025
Sunday, November 30, 2025
தமிழ் இலக்கிய வினா விடைகள் 150
1. எட்டுத்தொகை நூல்களுள்
பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் யாவை?
விடை: கலித்தொகை, பரிபாடல்
2. பரிபாடலுக்கு உரை எழுதியவர் யார்?
விடை: பரிமேலழகர்
3. உலகின் தோற்றம் குறித்து கூறும்
நூல் எது?
விடை: பரிபாடல்
4. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில்
இடம்பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
5. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர்
யார்?
விடை: சி.வை தாமோதரம் பிள்ளை
6. கலித்தொகையுள் குறைந்த பாடல்களை
கொண்ட திணை எது?
விடை: முல்லை திணை 17 பாடல்கள்
7. பாண்டியரைத் தவிர மற்ற மன்னர்கள்
பற்றிய குறிப்பில்லாத சங்க நூல் எது?
விடை: கலித்தொகை
8. ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல்
எது?
விடை: கலித்தொகை
9. பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற
ஒரே சங்க நூல் எது?
விடை: கலித்தொகை
10. காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே
சங்க நூல் யாது?
விடை: கலித்தொகை
11. அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில்
பரவிய மதம் எது?
விடை: பௌத்தம்
12. தமிழில் எழுதப்பட்ட முதல்
ஐந்திலக்கண நூல் எது?
விடை: வீரசோழியம்
13. சந்திரகுப்தன் காலத்தில்
பத்திரபாகு முனிவர் மூலம் தமிழகம் வந்த மதம் எது?
விடை: சமணம்
14. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட
முதல் உரைநடை நூல் எது?
விடை: ஸ்ரீ புராணம்
15. நிகண்டு என்ற சொல்லை முதன் முதலில்
பயன்படுத்தியவர் யார்?
விடை: மண்டலபுருடர்
16. சித்திரக்கவி பாடுவதில் வல்லவர்
யார்?
விடை: சேகனாப்புலவர்
17. யாருடைய படையெடுப்பால் தமிழகத்தில்
இஸ்லாம் மதம் பரவியது?
விடை: மாலிக்கபூர்
18. இஸ்லாம் இலக்கியத்தில் பெரியநூல்
மற்றும் காப்பிய நூல் எது?
விடை: சீறாப்புராணம்
19. இஸ்லாமிய மதுரகவி, மதுரகவி ராசன்
என்று போற்றப்படுபவர் யார்?
விடை: காசிம் புலவர்
20. வசைபாடுவதில் களமேகத்தை ஒத்தவர் யார்?
விடை: சவ்வாது புலவர்
21. காமனின் தம்பி யார்?
விடை: சாமன்
22. பாரதக்கதைகளை மிகுதியும் கூறும்
நூல் எது?
விடை: கலித்தொகை
23. புராணக் கதைகளை மிகுதியும் கூறும்
நூல் எது?
விடை: பரிபாடல்
24. நாடகம் போன்று காட்சி அமைப்புகளைக்
கொண்ட நூல் எது?
விடை: கலித்தொகை
25. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த
நூல் எது?
விடை: கலித்தொகை
26. அகநானூற்றில் கடவுள் வாழ்த்தில்
இடம் பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
27. ஓர் ஒழுங்கு முறையில்
தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது?
விடை: அகநானூறு
28. சங்க இலக்கியத்துள் வரலாற்றுச்
செய்திகளை அதிகமாகக் கூறும் அகநூல் எது?
விடை: அகநானூறு
29. வரலாற்றுச் செய்திகளை மிக
அதிகமாகக் கூறும் மிக புலவர்கள் யார்?
விடை: பரணர், மாமூலர்
30. புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில்
இடம் பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
31.அகத்திய
மாணவர்களின் எண்ணிக்கை
விடை: 12
32.அகத்தியர் சங்கம்
வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு
விடை: வேள்விக்குடிச் செப்பேடு
33.அகநானூற்றில்
1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள்
விடை: பாலைத்திணை
34.அகநானூற்றில்
10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்
விடை: நெய்தல்திணை
35.அகநானூற்றில்
2,8,12,18 போல 2,8,என முடியும் திணைப்பாடல்கள்
விடை: குறிஞ்சித்திணை
36.அகநானூற்றில்
4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள்
விடை: முல்லைத்திணை
37.அகநானூற்றில்
6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள்
விடை: மருதத்திணை
38.அகநானூற்றில்
பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்
விடை: நோய்பாடியார், ஊட்டியார்
39.அகநானூற்றின்
அடிவரையறை
விடை: 13-31 அடிகள்
40.அகநானூற்றின்
இரண்டாம் பகுதி
விடை: மணிமிடைப்பவளம்
41.அகநானூற்றின்
நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள்
விடை: வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை
43.அகநானூற்றின்
பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை
விடை: 90
44.அகநானூற்றின்
பிரிவுகள்
விடை: 3 (களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை)
45. அகநானூற்றின்
முதல் பகுதி
விடை:களிற்றுயானை நிரை
46. அகநானூற்றின்
முதல் பதிப்பாசிரியர்
விடை:வே.இராசகோபால் 16.
47.அகநானூற்றின்
மூன்றாம் பகுதி
விடை: நித்திலக்கோவை
48. அகநானூற்றுக்கு
வழங்கும் வேறு பெயர்
விடை: நெடுந்தொகை
49. அகநானூற்றைத்
தொகுத்தவர்
விடை: உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
50. அகநானூற்றைத்
தொகுப்பித்தவன்
விடை: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
51. அகப்பொருள்
பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள்
விடை: கலிப்பா,பரிபாடல் (தொல்காப்பியர்)
52. அகராதி நிகண்டு
ஆசிரியர்
விடை: சிதம்பரம் வனசித்தர்
53. அகலிகை வெண்பா
நூலாசிரியர்
விடை: சுப்பிரமணிய முதலியார்
54. அசோகன் காதலி
நாவலாசிரியர்
விடை: அரு.ராமநாதன்
55. அசோமுகி நாடக
ஆசிரியர்
விடை: அருணாசலக் கவி
56. அஞ்சி ஓடுவோர்
மீது பகை தொடுதல்
விடை: தழிஞ்சி
57.
அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்
விடை: ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
58. அடிநூல்
ஆசிரியர்
விடை: நத்தத்தனார்
59. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்
விடை: பொன்னப்ப காங்கேயன்
60. அதிக மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட அற நூல்
விடை: திருக்குறள்
61. அதியமானைச்
சிறப்பித்துப் பாடிய புலவர்
விடை: ஔவையார்
62.அந்தகக் கவிராயர்
எழுதிய உலா
விடை: திருவாரூர் உலா
63.அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல்
விடை: பதிற்றுப்பத்து -நான்காம் பத்து
67.அப்துல்
ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
விடை: ஆலாபனை – 1999
68. அப்பாவின்
ஆசை,சிறுவர் நாடகம்
விடை: அரு.இராமநாதன்
69. அம்பிகாபதி
அமராவதி நாடக ஆசிரியர்
விடை: மறைமலையடிகள்
70. அம்பிகாபதி
கோவையைப் பாடியவர்
விடை: அம்பிகாபதி
71.இடைக்காலத்தில்
தோன்றிய நாடகம்
விடை: குறவஞ்சி
72. இடைச்
சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள்
விடை: 3700
73. இடைச் சங்கத்தை
ஆதரித்த அரசர்கள்
விடை: 59
74. இடைச்சங்க
இலக்கியங்கள்
விடை: அகத்தியம்,தொல்காப்பியம், மாபுராணம்,
பூதபுராணம், இசைநுணுக்கம்
75. இடைச்சங்கம்
இருந்த இடம்
விடை: கபாடபுரம்
76. இடைச்சங்கம்
இருந்த மொத்த ஆண்டுகள்
விடை: 3700
77. இதிகாச
நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல்
விடை: கலித்தொகை
78. இந்தப்பூக்கள்
விற்பனைக்கல்ல கவிதையாசிரியர்
விடை: வைரமுத்து
79. இந்திய – அரபு
எண்ணான பதின் கூற்று
விடை: பழந்தமிழர் கண்டுபிடிப்பு
80.இந்திய மொழியில்
முதன்முதலாக வெளிவந்த நூல்
விடை: துர்க்கேச நந்தினி (1865)
81. இந்தியா எனும்
இதழ் நடத்தியவர்
விடை: பாரதியார்
82. இந்திரகாளியம்
என்னும் பாட்டியல் நூலை எழுதியவர்
விடை: இந்திரகாளியர்
83. இந்திராயன்
படைப்போர் எழுதியவர்
விடை: புலவர் அலியார்
84. இமிழ் குரல்
முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல்
விடை: புறநானூறு
85. இயல்,இசை,நாடகம்
குறித்துக் கூறிய முதல் நூல்
விடை: பிங்கலம்
86.இயற்பா, இசைப்பா
எனப்பிரிக்கப்படும் நூல்
விடை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
87. இயற்பெயர்
சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை
விடை:470
88. இரகுநாத சேதுபதி
மன்னனின் அவைக்களப் புலவர்
விடை: படிக்காசுப் புலவர்
89. இரட்சணிய குறள்
எழுதியவர்
விடை: எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
90.இரட்டைப்
புலவர்கள் பாடிய உலா
விடை: ஏகாம்பரநாதர் உலா
91. இரட்டைப்
புலவர்களின் பெயர்
விடை: இளஞ்சூரியன்,முதுசூரியன்
92.இராமலிங்க அடிகள்
பிறந்த ஊர்
விடை: மருதூர்
93.இராமலிங்க
அடிகளின் பாடல் தொகுப்பு
விடை: திருவருட்பா
94. இராமாயண
உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர்
விடை: சுப்பிரமணிய முதலியார்
95. இராமானுச
நூற்றந்தாதி பாடியவர்
விடை: அமுதனார்
96. இராவண காவியம்
நூலாசிரியர்
விடை: புலவர் குழந்தை
97. இராஜ ராஜசுர
நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு
விடை: கி.பி.10-ஆம் நூற்றாண்டு
98. இருபத்திரண்டு
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்
விடை: திருக்குறள்
99.இரும்புக் கடல்
என அழைக்கப் படும் நூல்
விடை: பதிற்றுப் பத்து
100.இருவகை நாடகம்
விடை: இன்பியல், துன்பியல்
101.இலக்கண உலகின்
ஏகசக்கரவர்த்தி
விடை: பாணினி
102.இலக்கண விளக்கச்
சூறாவளி இயற்றியவர்
விடை: சிவஞான முனிவர்
103.இலக்கண விளக்கம்
நூலாசிரியர்
விடை: திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
104. இலக்கணக்
கொத்தின் ஆசிரியர்
விடை: சுவாமிநாத தேசிகர்
105.இலக்கிய உதயம்
நூலாசிரியர்
விடை: எஸ்.வையாபுரிப் பிள்ளை
106. இலக்கியம்
இதழாசிரியர்
விடை: சுரதா
107.இலங்கேசுவரன்
நாடக ஆசிரியர்
விடை: ஆர்.எஸ்.மனோகர்
107.இல்லாண்மை எனும்
நூலாசிரியர்
விடை: கனக சுந்தரம் பிள்ளை
108.
இளங்கோவடிகளுக்கு கண்ணகி கதையை கூறியவர்
விடை: சாத்தனார்
109. இறந்த மறவன்
புகழை பாடுதல்
விடை: மன்னை காஞ்சி
110.வெட்சி
விடை: நிறைகவர்தல்
111.வெண்டேர்ச்
செழியனின் காலம்
விடை: இடைச்சங்க காலம்
112.வெண்பாப்பாட்டியலின்
வேறு பெயர்
விடை: வச்சநந்திமாலை
113.வெறியாட்டு
விடை: வள்ளிக் கூத்தாடுவது
114.வேங்கையின்
மைந்தன் நாவலாசிரியர்
விடை: அகிலன்
115.வேதஉதாரணத்
திரட்டு ஆசிரியர்
விடை: இரேனியஸ்
116.வேதநாயக
சாஸ்திரியை ஆதரித்தவர்
விடை: சரபோஜி மன்னர்
117.வேதநாயகம்
பிள்ளை எழுதிய நூல்
விடை: நீதிநூல்
118.வேய்
விடை: உளவு- ஒற்றாராய்தல்
119.வேருக்கு நீர் (
சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர்
விடை: ராஜம் கிருஷ்ணன்
120. வைகறைப்
பொழுதுக்குரிய நிலம்
விடை: மருதம்
121. வைதாலும்
வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர்
விடை: ஆறுமுக நாவலர்
122. ஜி.யு.போப்பைக்
கவர்ந்த எட்டுத்தொகை நூல்
விடை: புறநானூறு
123. ஜீவகாருண்யம்
போதித்தவர்
விடை: வள்ளலார்
124. ஜீவபூமி
நாவலாசிரியர்
விடை: சாண்டில்யன்
125. ஸ்வர்ணகுமாரி
சிறுகதையாசிரியர்
விடை: பாரதியார்
126. கண்ணீர்
பூக்கள் கவிதை நூலாசிரியர்
விடை: நா.காமராசன்
127. அடிகள் முன்னம்
யானடி வீழ்ந்தேன்
விடை: மாதவி
128. மணிமேகலைக்கு
துறவு தந்தவர்
விடை: அறவண அடிகள்
129.பால் மர காட்டினிலே
நாவலாசிரியர்
விடை: அகிலன்
130.பாலும் பாவையும்
நாவலாசிரியர்
விடை: விந்தன்
131. ஈட்டி எழுபது
நூலின் ஆசிரியர்
விடை: ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச் சீரின்
வேறுபெயர்
விடை: ஆசிரிய உரிச்சீர்
133. ஈன்று
புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர்
விடை: பொன்முடியார்
134.உ.வே.சா வின்
ஆசிரியர்
விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து
எதிரூன்றல்
விடை: காஞ்சி
136. உடம்பை
வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர்
விடை: திருமூலர்
137. உண்டாட்டு
விடை: கள்குடித்தல்
138. உண்டாலம்ம
இவ்வுலகம் எனப் பாடியவர்
விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல்
விடை: புறநானூறு
140. உண்பவை நாழி,
உடுப்பவை இரண்டே என்று பாடியவர்
விடை: நக்கீரர்
141. உமைபாகர்
பதிகம் பாடியவர்
விடை: படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து
அன்பு வேணும் எனப்பாடியவர்
விடை: பாரதியார்
143. இறந்தவனின்
தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது
விடை: தலையொடு முடிதல்
144. இறந்து பட்ட
வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது
விடை: பாண்பாட்டு – தும்பை
145. இறையனார்
அகப்பொருளுக்கு உரை எழுதியவர்
விடை: நக்கீரர்
146. இறைவன்
திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம்
விடை: திருக்கோலக்கா
147. இறைவன்
மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர்
விடை: திருப்பெருந்துறை
148. உரிச்சொல்
நிகண்டு எழுதியவர்
விடை: காங்கேயர்
149. உரிப்பொருள்
எனத் தொல்காப்பியம் கூறுவது
விடை: ஒழுக்கம்
150. உரை நூல்களுள்
பழமையானது
விடை: இறையனார் அகப்பொருள் உரை – நக்கீரர்
