Breaking

Showing posts with label கையேடு. Show all posts
Showing posts with label கையேடு. Show all posts

Wednesday, August 28, 2024

5:58:00 AM

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள "தமிழைப் பிழையின்றி எழுதுவோம்" கையேடு



சங்கம் வளர்த்த தமிழ்ச்சோலையில் குழலும் யாழும் மயங்கும் . உயிருக்கு ஒப்பாய் உயிரெழுத்து : தனித்து இயங்கா மெய்யெழுத்து ; உடம்புடன் கலந்த உயிரேபோல் உயிர்மெய்யென எண்ணிடலங்காப் பெருமைக்குரிய சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி . இம்மொழி , பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும் , எளிதாகத் தொடர்பு கொள்ளும் தொடர்பு மொழியாகவும் உள்ளது.

தமிழர்கள் மட்டுமின்றி , பல அயலகத்தாரும் தமிழில் இலக்கண இலக்கியங்களை இயற்றியுள்ளார்கள் . எம்மொழியாயினும் அம்மொழியின் அடிப்படைக் கூறுகளைக் கற்றுத் தெளியவேண்டும். அத்தகைய வகையில் ' தன்னேரிலாத் தமிழ் ' என்ற தமிழின் சிறப்பினை உணர்ந்தவர்கள் தமிழின் அடிப்படைகளை மெல்ல மெல்லக் கற்கின்றனர்.

இதன் மூலம் தமிழைப் பிழையின்றிப் பேசவும் , எழுதவும் முயற்சி செய்து வருகின்றனர் . இன்று , உலகெங்கும் தமிழின் செம்மாந்த நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் வந்தவண்ணமுள்ளன. அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகமும் குறுகிய காலத்தில் தமிழைப் பிழையின்றிப் படிப்பதற்கும் , எழுதுவதற்கும் தமிழைப் பிழையின்றி எழுதுவோம் ' என்ற புத்தகத்தை உருவாக்கியுள்ளது.

Thamizhai_Pizhaiyinri_Ezhuthuvom.pdf👇👇👇👇

Monday, January 22, 2024

5:06:00 PM

தலைமையாசிரியர் கையேடு (உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள்) 2023 - 2024

தலைமையாசிரியர் கையேடு (உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள்) 2023 - 2024

தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களின் பணிகளும் கடமைகளும், பள்ளிகளில் மன்ற செயல்பாடுகள் - பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியீடு

HeadMaster's Handbook (High / Higher Secondary Schools) 2023 - 2024 - Works, Duties & Responsibilities...👇
Download here

Sunday, December 17, 2023

5:31:00 AM

4 & 5TH கணக்கு எண்ணும் எழுத்தும் 3 பருவம் - (THB ) ஆசிரியர் கையேடு

எண்ணும் எழுத்தும் - (THB ) ஆசிரியர் கையேடு -


கணக்கு-


பருவம் -3


வகுப்பு -4 & 5

மூன்றாம் பருவத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த

எந்த வகுப்பிற்கான செயல்பாடுகள்

செயல்பாடுகளின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வகுப்பிற்கு ஏற்ற வண்ணப் புள்ளிகளை கவனித்து எந்த வகுப்பிற்கான செயல்பாடு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்

தனி வகுப்பு

தனி வகுப்பு எனில் அந்த வகுப்புக்குரிய செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

நான்காவது பயனில் வண்ணத்தில் உள்ள செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்

ஐந்தாம் வகுப்பு எண்ணில் வண்ணத்தில் உள்ள செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டும்

இரு வண்ண உள்ள செயல்பாடு இரண்டு வகுப்பும் பொதுவானவை எனவே வகுப்பு சூழலில் இருவருக்கும் மாணவர்கள் இணைத்து மேற்கொள்ள வேண்டும்

வகுப்பற்ற நிலையில் இல்லாத மாணவர்களுக்கு இதுவரை கற்றவை பகுதியில் கொடுத்துள்ள காணொளிகளை பயன்படுத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

தொழில்நுட்பத் துணை விரைவு தொடங்கல் குறியீடு பின் இணைப்புகள் செயல்திட்டம் பாடக்குறிப்பு படிவம் மதிப்பீடு பயிற்சி நூல் ஆகியவற்றை கொண்டு சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்

மூன்றாம் பருவத்தில் கணக்கில்

பொருளடக்கம் பகுதியில்

1) வடிவியல்
2) எண்கள்
3)பணம்
4)பின்னங்கள்
5)காலம்
6)அளவைகள்

பின்னிணைப்புகள்

THB download செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கொள்ளவும்..

Click here to download pdf

Tuesday, November 28, 2023

2:32:00 AM

மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு

மன எழுச்சி நலன் மேம்பாடு - ஆசிரியர் கையேடு


வளரிளம் பருவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் மிக முக்கியமான காலகட்டமாகும். இப்பருவத்தில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் நடைபெறும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வளரிளம் பருவத்தினருக்கு மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனவளர்ச்சி நலன் மேம்படுவதற்காக வளரிளம் பருவத்தினர் மனவளர்ச்சி நலன் என்ற மாணவர் நல்வாழ்வு இணைய முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட கலை சார்ந்த செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் மனவளர்ச்சி நலனை மேம்படுத்தி வாழ்வியல் திறன்களை வளர்ப்பதை இந்த இணைய முகப்பு நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த இணைய முகப்பு பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.👇

CLICK HERE TO DOWNLOAD