Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 08


  1. தொட்டால் சிணுங்கி தாவரம், ரப்பர் வளையம் நீளுதல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மீள் மாற்றம்.
  2. பால் தயிராதல், உணவு செரித்தல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மீளா மாற்றம்.
  3. வளிமண்டலம் எத்தனை வெவ்வெறு அடுக்குகளால் ஆனது? ஐந்து.
  4. பூமியின் அருகிலுள்ள, நாம் வாழும் வளிமண்டல அடுக்கு எது? அடிவளி மண்டலம் (Troposphere).
  5. மேகங்கள் உருவாகக் காரணமாகும் அடுக்கு எது? அடிவளி மண்டலம்.
  6. செயற்கை மழை பொழிய வைத்தலில் பயன்படுவது எது? உலர்பனிக்கட்டிகள்.
  7. நன்னீரில் துருவ பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளின் சதவீதம் எவ்வளவு? 68.7%.
  8. நன்னீரில் நிலத்தடி நீரின் சதவீதம் எவ்வளவு? 30.1%.
  9. நன்னீரில் குறைந்தபட்சம் தொடங்கி அதிகபட்சமாக எவ்வளவு உப்புகள் கரைந்திருக்கும்? 0.05 முதல் 1% அளவுள்ள உப்புகள்.
  10. கடல் நீரில் சதவீதம் எந்த அளவிற்கு மேல் உப்பு கரைந்திருக்கும்? 3% சதவீதத்திற்கும் மேல்.
  11. கடல் நீரில் கலந்துள்ள முக்கிய உப்புகள் யாவை? சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு.
  12. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது? TMC/Feet.
  13. பிச்சாவரம், முத்துப்பேட்டை, பள்ளிக்கரணை, செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் காணப்படுவது யாவை? சதுப்பு நிலங்கள் (சதுப்பு நிலக்காடுகள்).
  14. நெய்வேலி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? அனல்மின் நிலையங்கள்.
  15. மேட்டூர் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? நீர்மின் நிலையங்கள்.
  16. ஆரல்வாய்மொழி மற்றும் கயத்தாறு ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? காற்றாலைகள்.
  17. இயற்கையான நிறங்காட்டிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மஞ்சள்.
  18. எலும்பு முறிவுச் சிகிச்சையிலும் சிலைகள் தயாரிப்பிலும் பயன்படுவது எது? பாரிஸ் சாந்து.
  19. நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்கு கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? கரிம உரங்கள்.
  20. தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் எவை? கனிம உரங்கள்.
  21. சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் தாது உப்புக்கள் எவை? சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம்.
  22. ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன? ரோபாட்டிக்ஸ்.
  23. உலகின் மிக நீளமான நதி எது? நைல் நதி (6,650 கி.மீ.).
  24. இந்தியாவின் மிக நீளமான நதி எது? கங்கை (2,525 கி.மீ.).
  25. உலக வாழிட நாளாக கொண்டாடப்படும் நாள் எது? அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை.

No comments:

Post a Comment