Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 07


  1. இதயத்தை மூடியுள்ள இரு சுவர்களைக் கொண்ட உறைக்கு பெயர் என்ன? பெரிகார்டியம்.
  2. இரத்தம் எவற்றைக் கொண்டுள்ளது? பிளாஸ்மா மற்றும் இரத்த அணுக்கள்.
  3. இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்? மூன்று.
  4. ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு இருக்கும்? 72 முதல் 80 வரை.
  5. வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இரத்தக் குழாய்கள் எவை? தமனிகள்.
  6. கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இரத்தக் குழாய்கள் எவை? சிரைகள்.
  7. அசுத்த இரத்தத்தினைக் கடத்தும் சிரைகளில் விதிவிலக்கானது எது? நுரையீரல் சிரைகள்.
  8. மூளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? மூன்று (முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை).
  9. உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் எது? மூளை.
  10. ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் எவை? நாளமில்லா சுரப்பிகள்.
  11. ஆண்களில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பு எது? ஓரிணை விந்தகம்.
  12. பெண்களில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பு எது? ஓரிணை அண்டகம்.
  13. அவரை விதை வடிவத்தில் அடிவயிற்றுக் குழியில் அமைந்துள்ள உறுப்பு எது? சிறுநீரகங்கள்.
  14. நமது உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது? 70 சதவிகிதம்.
  15. நமது உடலில் நீளமான எலும்பு எது? தொடை எலும்பு.
  16. குழந்தைகள் பிறக்கும் பொழுது தோராயமாக எத்தனை எலும்புகளுடன் பிறக்கின்றன? 300க்கும் அதிகமான.
  17. கண்ணின் மூன்று முக்கிய பகுதிகள் யாவை? கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்).
  18. மனிதனின் புறச் செவியில் உள்ள மடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? புறச்செவி மடல் (Pinna).
  19. வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி எது? மின்கலன்.
  20. கைப்பேசிகள், மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் பலமுறை மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன்கள் யாவை? துணை மின்கலன்கள்.
  21. அம்மீட்டர் ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்? தொடரிணைப்பில்.
  22. காந்தத்தன்மை உள்ள பொருள்களுக்கு எடுத்துக்காட்டு தருக. இரும்பு, நிக்கல், கோபால்ட்.
  23. மின்காந்த தொடர்வண்டிகள் தற்போது நடைமுறையில் உள்ள நாடுகள் எவை? சீனா, ஜப்பான், தென்கொரியா.
  24. விதை முளைத்தல், பருவகால மாற்றங்கள் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மெதுவான மாற்றங்கள்.
  25. கண்ணாடி உடைதல், பட்டாசு வெடித்தல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? வேகமான மாற்றங்கள்.

No comments:

Post a Comment