Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 10, 2025

Friday, October 17, 2025

6:54:00 PM

6TH TAMIL - சிறகின் ஓசை

  • பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. 
  • அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன
  • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன.
  • பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.
  • நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
  • உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. 
  • நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. 
  • பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
  • பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. 
  • சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
  • பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.
பறவைகள் வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  • தலையில் சிறகு வளர்தல்
  • இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்
  • ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறுதலும் உண்டு
தமிழ் இலக்கியத்தில் வலசைபோதல் செய்திக்குறிப்பு

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு பறவைகள் வந்து சென்ற செய்தியை ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் நாராய் நாராய்,செங்கால் தாராய்" என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

பறவைகளின் புகலிடம் தமிழ்நாடு

ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

சிட்டுக்குருவிகள் பற்றிய தகவல்கள்

  • தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் சிட்டுக் குருவி .
  • உருவத்தில் சிறியதாக இருக்கும் ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். 
  • ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். 
  • பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. 
  • கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். 
  • கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 
  • பதினான்கு நாள்கள் அடைகாக்கும். 
  • பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  • துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளும் வாழ்கின்றன. 
  • இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். 
  • இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன
  • தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும். 
  • சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகன் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும்.
சிட்டுக்குருவிகனின் அழிவுக்குக் காரணங்கள்
  • மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
  • நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
  • தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. 
  • சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
  • உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக் குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.
பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை
  • ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
  • நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.
  • தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவின் பறவை மனிதர்
  • இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. 
  • தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். 
  • அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். 
  • பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். 
  • தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fali of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
  • மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! என்கிறார் - சலீம் அலி. 
பிரித்தெழுதுக

  1. பெருங்கடல் = பெருமை + கடல்
  2. செங்காேல் = செம்மை + காேல்
  3. வடதிசை = வடக்கு + திசை
  4. இளந்தளிர் = இளமை + தளிர்
  5. பறவையினம் – பறவை + இனம்
சரியான விடையைத் தேர்வு செய்க

1. பறவைகள் இடம் பெயர்தலை என்னவென்று கூறுவர்.

அ) இடம் விட்டு இடம் பெயர்தல்
ஆ) கூட்டமாகச் செல்லுதல்
இ) வலசை போதல்
ஈ) பறந்து போதல்

2. என்பதன் பொருள்

அ) இடம் விட்டு இடம் பெயர்தல்
ஆ) கூட்டமாகச் செல்லுதல்
இ) வலசை போதல்
ஈ) பறந்து போதல்

3.எந்தவகைப் பறவைகள் வலசைபோகின்றன

அ) நீர்வாழ் பறவைகள்
ஆ) நிலவாழ் பறவைகள்
இ) கடல்வாழ் பறவைகள்
ஈ) மரம்வாழ் பறவைகள்

4. பறவைகள் இடம்பெயர்தலுக்காண காரணங்கள் அல்லாத ஒன்று.

அ) உணவு
ஆ) வாழ்வைத்தேடி
இ) தட்பவெப்பநிலை மாற்றம்
ஈ) இனப்பெருக்கம்

5.  கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் இடம்பெயர்தலுக்காண அடிப்படைக் காரணங்கள் அல்லாத ஒன்று.

அ) நிலவு
ஆ) விண்மீன்
இ) புவிஈர்ப்புப் புலம் 
ஈ) வானம்

6. பறவைகள் எத்திசைக்கு வலசை போகின்றன.

1. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி
2. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி
3. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
4. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி

அ) 1, 2 சரி
ஆ) 1, 3 சரி
இ) 1, 4 சரி
ஈ) 1,3,4 சரி

7. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1.  பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
கூற்று 2. சில பறவை இனங்கள் போவதற்கும் ஒரு வழித்தடத்தையும் வருவதற்கும் வேநு வழித்தடத்தையும் பயன்படுத்துகின்றன.

அ) கூற்று 1, 2 சரி
ஆ) கூற்று 1 சரி, 2 தவறு
இ) கூற்று 1 தவறு, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு

8. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1.  பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காக தரை இறங்கும். 
கூற்று 2. முட்டை இடுவதற்காக சில பறவைகள் தரை இறங்கும்

அ) கூற்று 1, 2 சரி
ஆ) கூற்று 1 சரி, 2 தவறு
இ) கூற்று 1 தவறு, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு

9. வலசைபோதல் - பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ) தலையில் சிறகு வளர்தல்
ஆ இறகுகளின் நிறம் மாறுதல்
இ) புதியதாக சிறகுகள் முளைத்தல்
ஈ) உடலில் கற்றையாக முடி வளர்தல்

10. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர்.

அ) சத்திமுத்தப் புலவர்
ஆ) காக்கைபாடினியார்
இ) நப்பச்சொல்லையார்
ஈ) 

11. சத்திமுத்தப்புலவர் எந்தப் பறவையை வலசைபோதலைப் பாடினார்

அ) மீன்கொத்தி
ஆ) பருந்து
இ) நாகனவாய்ப் பறவை
ஈ) செங்கால் நாரை

12. "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்று பாடியவர்

அ) சத்திமுத்தப்புலவர்
ஆ) கணைக்கால் இரும்பொறை
இ) காக்கைபாடினியார்
ஈ) வானம்பாடியார்

13. "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்ற பாடலடி எதனைக் குறிப்பிடுகிறது. 

அ) பறந்து செல்லல்
ஆ) வலசைபோதல்
இ) நீர்நிலை அடைதல்
ஈ) மீண்டும் திரும்புதல்

14. நாராய் நாராய் எனத்தாெடங்கும் பாடலை எழுதியவர்

அ) சத்திமுத்தப்புலவர்
ஆ) கணைக்கால் இரும்பொறை
இ) காக்கைபாடினியார்
ஈ) வானம்பாடியார்

15. செங்கால் நாரைகள் எங்கிருந்து தமிழகம் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன

அ) இங்கிலாந்து
ஆ) ஐரோப்பா
இ) எகிப்து
ஈ) ரஷ்யா

16. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாக அமைந்துள்ள இடம்.

அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரா
இ) தெலுங்கானா
ஈ) குஜராத்

17. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம். 

அ) மைனா
ஆ) சிட்டுக் குருவி .
இ) கரிச்சாஞ்குருவி
ஈ) செம்போத்து

18.  கூடுகட்டும்போதே சத்தமிடும் பறவையினம்.

அ) மைனா
ஆ) சிட்டுக் குருவி .
இ) கரிச்சாஞ்குருவி
ஈ) செம்போத்து

19. பெண் சிட்டுக்குருவியின் உடல், முழுவதும் மங்கிய ............. நிறத்தில் இருக்கும்.

அ) பழுப்பு
ஆ) சிவப்பு
இ) கறுப்பு
ஈ) வெள்ளை

20. ஆண்குருவியின் தொண்டைப்பகுதி ................ நிறத்தில் இருக்கும்.

அ) பழுப்பு
ஆ) சிவப்பு
இ) கறுப்பு
ஈ) வெள்ளை

21. கூற்றுகளை ஆராய்க

கூற்று 1.  உருவத்தில் சிறியதாக இருக்கும் ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும்.
கூற்று 2. சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது.

அ) கூற்று 1, 2 சரி
ஆ) கூற்று 1 சரி, 2 தவறு
இ) கூற்று 1 தவறு, 2 சரி
ஈ) கூற்று 1, 2 தவறு

22. சிட்டுக்குருவிகள் எத்தனை முட்டை வரை இடும்.

அ) இரண்டு முதல் மூன்று வரை
ஆ) இரண்டு முதல் ஐந்து வரை
இ) மூன்று முதல் ஆறு வரை
ஈ) கண்க்கில்லாமல்

23. சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் காலம்.

அ) பத்து நாட்கள்
ஆ) பதினைந்து நாட்கள்
இ) பதினான்கு நாள்கள் 
ஈ) இருபது நாட்கள்

24. துருவப் பகுதியில் வாழாத முடியாதப் பறவை

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு

25. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி 

அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்

26. மனிதன் வாழும் இடங்களில் வாழும் பறவை.

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு

27. தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை தேடி உண்ணும் பறவை

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு
  
28. சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் எதனை உண்ணும்

அ) தானியங்களை
ஆ) புழு, பூச்சிகளை
இ) தாவரங்களை
ஈ) பூக்கள்

29. சிட்டுக்குருவியின் வாழ்நாள் காலம்

அ) பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்
ஆ) பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள்
இ) பத்து முதல் பதினைந்து ஆண்டுகள்
ஈ) ஐந்து முதல் ஏழு ஆண்டுகள்

30. உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும் பறவை.

அ) சிட்டுக் குருவி
ஆ) காகம்
இ) மைனா
ஈ) கழுகு

31.' தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தட்பம் + வெப்பம்’
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்

32.' வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்

33. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) தரையிறங்கும்
ஆ) தரைஇறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரையிறங்கும்

34. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்

35. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை 

விடை : ஆர்டிக் ஆலா

36. இந்தியாவின் பறவை மனிதர்

விடை : டாக்டர் சலீம் அலி

37. உலகச் சிட்டுக் குருவிகள் நாள் 

விடை : மார்ச் 20

38. டாக்டர் சலீம் அலியின் தன் வரலாற்று நூலின் பெயர்

விடை : சிட்டுக் குருவியின் வீழ்ச்சி.

39. ஆர்டிக் ஆலா எவ்வளவு தூரம் பயணம் செய்யும்.

விடை : 22,000 கி.மீ

40. காக்கைகுருவி எங்கள் சாதி என்று பாடியவர்

விடை : பாரதியார்

41. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை

விடை : கப்பல் பறவை (Frigate bird).

42. கப்பல் பறவை தரையிறங்காமல் எவ்வளவு தூரம் வரை பறக்கும்.

விடை : 400 கிலோ மீட்டர்

43. கப்பல் பறவை _______, _______ என்றும் அழைக்கப்படுகிறது.

விடை : கப்பல் கூழைக்கடா , கடற்கொள்ளைப் பறவை

44. பறவைகள் பற்றிய படிப்பு 

விடை : ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) 

45. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் 

விடை :  மார்ச் - 20

Thursday, October 16, 2025

Tuesday, October 14, 2025

4:22:00 AM

PG TRB 12.10.2025 All SubjectS - Tentative Answer key

Tamil - Siragukal Academy - Answer Key - Download here

English Madura - Answer Key - Download here

Commerce - SSS Academy - Answer Key - Download here

Chemistry - Answer Key - Download here

Zoology Aristotle PG TRB Coaching Centre - Answer Key - Download here

Maths Sivagami Academy - Answer Key - Download here

Physics - ks Academy - Answer Key - Download here

Physics - Global Academy - Answer Key - Download here

Physics kandhan Academy - Answer Key - Download here

Monday, October 13, 2025

Saturday, October 4, 2025

Monday, September 29, 2025

9:15:00 PM

PG-TRB கட்டாய தமிழ் தகுதி தேர்வு 1– 60 Tests PDF Collection (Free Download)

Sunday, September 21, 2025

Friday, September 19, 2025

8:21:00 AM

10TH TAMIL - கம்பராமாயணம்

கம்பராமாயணம் நூல் குறிப்பு

  • “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைபடுபவர் = பாரதியார்.
  • “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று கூறியவர் = பாரதியார்.
  • கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
  • இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
  • இது ஆறு காண்டங்களை உடையது.
  • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
  • “ஆற்றுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “நாட்டுப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = பாலகாண்டம்.
  • “கங்கைப்படலம்” இடம் பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கங்கை காண் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = அயோத்தியா காண்டம்.
  • “கும்பகருணன் வதைப் படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = யுத்த காண்டம்.
  • கம்பராமாயணத்தில் கூறப்படும் நதி = சரயு நதி.
  • “காலனுக்கு தூதரானவர்” என கம்பர் குறிப்பிடுவது = இராமனை.
  • “வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கம்பராமாயணம்

கம்பராமாயணம் – நூல் அமைப்பு

  • காண்டம் = 6
  • படலம் = 113
  • மொத்த பாடல்கள் = 10569
  • முதல் படலம் = ஆற்றுப்படலம்
  • இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்

காண்டங்கள்

  • பால காண்டம்
  • அயோத்தியாகாண்டம்
  • ஆரண்யகாண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • சுந்தர காண்டம்
  • யுத்தகாண்டம்
  • ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”

கம்பர் ஆசிரியர் குறிப்பு

  • பெயர் = கம்பர்
  • ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
  • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
  • மகன் = அம்பிகாபதி
  • மகள் = காவிரி
  • தேரழுந்தூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
  • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
  • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
  • காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
  • தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
  • கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
  • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆசிரியரின் சிறப்பு பெயர்

  • கவிச்சக்ரவர்த்தி (நாதமுனிகள்)
  • கவிப்பேரரசர்
  • கவிக்கோமான்
  • கம்பநாடுடைய வள்ளல்
  • சந்த வேந்தர்
  • தமிழரின் கவிதாமண்டலத்தை ஆண்டவன்

இவரின் படைப்புகள்

  • ஏர் எழுபது
  • சிலை எழுபது
  • திருக்கை வழக்கம்
  • சரஸ்வதி அந்தாதி
  • சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)

கம்பராமாயணம் – சிறப்பு பெயர்கள்

  • கம்பசித்திரம்
  • கம்பநாடகம்
  • தோமறுமாக்கதை
  • மானுடம் பாடும் காவியம்
  • இயற்கை பரிணாமம்
  • தமிழர் கவித்துவத்தின் பேரெல்லை
  • முற்காலக் காப்பியங்களை எல்லாம் தமிழுலகம் மறக்கச் செய்து தன்னிடத்திலே தமிழர் உள்ளதை தேக்கி வாய்த்த புகழ் உடையது = கம்பராமாயணம்

கம்பராமாயண சிறப்புகள்

  • மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்.
  • வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
  • வ.வே.சு ஐயர் = பெருங்காப்பிய இலக்கணத்தில் உலகக் காப்பியங்களை எல்லாம் கம்பராமாயணம் வென்றுவிட்டது
  • வையாபுரி பிள்ளை = கம்பன் காவியம் தமிழரின் கவித்துவத்தின் பேரெல்லை
  • எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
  • பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
  • பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
  • கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
  • கவிமணி = கம்பன் கவியே கவி
  • “கல்வியிற் பெரியவர் கம்பர்”
  • “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
  • “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
  • “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
  • தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
  • திருமணம் செல்வக்கேசவராய முதலியார் = தமிழுக்கு கதியாவர் இருவர்; ககரத்தை கம்பர் என்றும், திகரத்தை திருவள்ளுவர் என்றும் கூறுகிறார்
  • 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
  • சந்த வேந்தர் எனப்படும் கம்பர், தனது கம்பராமாயணத்தில் 460க்கும் மேற்பட்ட சந்தங்களை பயன்படுத்தி உள்ளார்
  • கம்பராமாயணத்தில் ஒவ்வொரு 22 பாடல்களுக்கு ஒருமுறை, சந்தத்தை வேறுபடுத்தி பாடியுள்ளார் கம்பர்
  • காக்கும் பெருமாள் = கம்பர் ஒரே பாடலுக்காகச் சந்ததி மாற்றவும் செய்துள்ளார்
  • “கம்பராமாயணம் பெண் நடையுடையது” என்றவர் = கா.சு.பிள்ளை

பொதுவான குறிப்புகள்

  • கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
  • கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
  • கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
  • வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
  • கமபராமாயணம் ஒரு வழி நூல்
  • கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
  • கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
  • கம்பராமாயணத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விருத்தம் = கலி விருத்தம்
  • கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
  • இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
  • இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
  • 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார் (10569 பாடல்கள்)
  • கம்பனுக்கு முன்பு இருந்த தமிழ் இராமாயணங்கள் = இராமாயண வெண்பா, சைன ராமாயணம்
  • கம்பராமாயணத்தோடு ஒப்பிடப்படும் உலகக் காப்பியம் = இலியட் (ஹோமர்)
  • உலக அரங்கில் தமிழுக்கு உயரிய மதிப்பைப் பெற்றுத் தந்த இலக்கியங்கள் = திருக்குறளும் கம்பராமாயணமும் ஆகும்

மேற்கோள்

  • தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
  • எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
  • இல்லாரும் இல்லை உடையாரும்
  • இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
  • அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
  • இன்று போய் நாளை வா
  • வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
  • வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
  • உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
  • கை வண்ணம் அங்குக் கண்டேன்
  • கால் வண்ணம் இங்குக் கண்டேன்
  • அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
7:03:00 AM

10TH TAMIL - பன்முகக் கலைஞர்






கலைஞர் கருணாநிதி குறிப்புகள்

  • “புதையல்” எனும் புதினத்தின் ஆசிரியர் = கலைஞர் கருணாநிதி.
  • இசை முகிழ்ந்த புலமும் வேளாண் செழித்த நிலமும் என்று கூறப்படும் மாவட்டம் = திருவாரூர்.
  • கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர் = திருவாரூர் மாவட்டத்தில் உள்ள “திருக்குவளை” என்னும் ஊர்.
  • கலைஞர் கருணாநிதி பிறந்த தேதி = 3 சூன் மாதம் 1924.
  • பெற்றோர் = முத்துவேல், அஞ்சுகம் அம்மையார்.

போராட்டக் கலைஞர்

  • கருணாநிதி தொடக்கக்கல்வியை நிறைவு செய்த இடம் = திருக்குவளை.
  • கருணாநிதி உயர்நிலைக் கல்வியை முடித்த இடம் = திருவாரூர்.
  • 1921இல் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்தவர் = நீதிக்கட்சியின் பனகல் அரசர்.
  • இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட பொழுது கலைஞர் கருணாநிதியின் வயது = பதினான்கு.

பேச்சுக் கலைஞர்

  • யாருடைய பகுத்தறிவுக் கருத்துக்கள் கலைஞரை ஈர்த்தன = பெரியார்.
  • யாருடைய பேச்சாற்றல் கலைஞரை கவர்ந்தது = பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா.
  • “நட்பு” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியவர் = கலைஞர் கருணாநிதி.
  • பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி வழங்க கருணாநிதி உருவாக்கிய சங்கம் = சிறுவர் சீர்திருத்தச் சங்கம்.
  • பள்ளிப் பருவத்திலேயே மாணவரிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த கருணாநிதி உருவாக்கிய சங்கம் = தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்.
  • “சிறுவர் சீர்திருத்தச் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கியவர் = கலைஞர் கருணாநிதி.
  • “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்ற அமைப்பை உருவாக்கியவர் = கலைஞர் கருணாநிதி.
  • “இளைய தலைமுறையே; எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்! அறிவில் மூத்தோரைத் தொழுவாய்! அரிய பயன் காண ஆழ உழுவாய்!” என்று கூறியவர் = கலைஞர் கருணாநிதி.

நாடகக் கலைஞர்

  • கலைஞர் கருணாநிதியின் முதல் நாடகம் = பழநியப்பன்.
  • கலைஞர் கருணாநிதி எழுதிய “தூக்குமேடை” என்னும் நாடகத்தில் எம்.ஆர்.ராதாவின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நாடகத்தில் மாணவர் தலைவராக நடித்தார்.
  • எந்த நாடகத்தின் பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு “கலைஞர்” என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது = தூக்குமேடை.

திரைக் கலைஞர்

  • எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடித்த படம் = ராஜகுமாரி (1947).
  • எம்.ஜி.ஆர் முதல் படமான “ராஜகுமாரி” படத்திற்கு முழு வசனமும் எழுதியவர் = மு.கருணாநிதி.
  • கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் = ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன்.
  • சிவாஜியின் முதல் படம் = பராசக்தி.
  • சிவாஜியின் முதல் படமான “பராசக்தி” படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் = மு.கருணாநிதி.
  • கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் = பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா.
  • கலைஞர் மு.கருணாநிதி திரைப்படப் பாடல்கள் எழுதிய படங்கள் = ரங்கோன் ராதா, மந்திரிகுமாரி, மறக்க முடியுமா?

கலைஞர் எழுதிய நாடகங்கள்

  • கலைஞர் கருணாநிதியின் முதல் நாடகம் = பழநியப்பன்.
  • சாம்ராட் அசோகன்
  • மணிமகுடம்
  • வெள்ளிக்கிழமை
  • காகிதப்பூ
  • தூக்குமேடை

கலைஞர் மு.கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்கள்

  • கலைஞரின் கதை, வசனங்களில் பகுத்தறிவு பேசிய படங்கள் = பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் சமூகக்கருத்துகளைப் பேசிய படங்கள் = மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் பெண்கள் முன்னேற்றம் பேசிய படங்கள் = மணமகள், ராஜாராணி, இருவர் உள்ளம், பாசப் பறவைகள்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் அரசியல் பேசிய படங்கள் = புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி, வண்டிக்காரன் மகன்.
  • கலைஞரின் கதை, வசனங்களில் இலக்கியம் பேசிய படங்கள் = அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை.

கலைஞர் மு.கருணாநிதி எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்

  • ‘மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது’ என்ற வசனம் இடம் பெற்ற படம் = பூம்புகார்.
  • “நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ, சாக்ரட்டீஸ் அழைக்கிறேன், ஓடி வாருங்கள்” என்ற வசனம் இடம் பெற்ற படம் = ராஜாராணி.
  • “பொறுத்தது போதும் மனோகரா! பொங்கி எழு” என்ற வசனம் இடம்பெற்ற படம் = மனோகரா.

இராமானுஜர் தொடர்

  • கருணாநிதி திரைப்படங்களுக்காக எழுதத் துவங்கிய பொழுது வயது = 23.
  • தொலைக்காட்சிக்காக “இராமானுஜர்” தொடருக்கு வசனம் எழுதிய பொழுது அவருக்கு வயது = 92.

இதழியல் கலைஞர்

  • “மாணவநேசன்” என்ற கையெழுத்து ஏட்டை நடத்தியவர் = மு.கருணாநிதி.
  • “திராவிட நாடு” என்ற இதழின் ஆசிரியர் = அறிஞர் அண்ணா.
  • எந்த இதழில் மு.கருணாநிதி தந்து முதல் கட்டுரையை எழுதினார் = அண்ணாவின் திராவிட நாடு.
  • “முரசொலி” இதழை துவக்கியவர் = மு.கருணாநிதி.
  • “சேரன்” என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகளை எழுதியவர் = கலைஞர் மு.கருணாநிதி.

கயிற்றில் தொங்கிய கணபதி

  • மலேசியாவில் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த தமிழகத்தை சேர்ந்த “மலேயா கணபதி” என்பவருக்கு ஆங்கிலயே அரசு தூக்கு தண்டனை வழங்கியது.
  • அவர் தூக்கிலிடப்பட்டதை அறிந்த கலைஞர் “கயிற்றில் தொங்கிய கணபதி” என்ற கட்டுரையை எழுதி வெளியிட்ட பொழுது கலைஞருக்கு வயது 22.
  • கலைஞர் கருணாநிதிக்கு ஆங்கிலேய எதிர்ப்பு இருந்ததை பதிவு செய்த நூல் = கயிற்றில் தொங்கிய கணபதி.

கலைஞர் கருணாநிதி எழுதிய சிறுகதைகள்

  • நளாயினி
  • சித்தார்த்தன் சிலை
  • சந்தனக் கிண்ணம்
  • தாய்மை
  • புகழேந்தி
  • அணில்குஞ்சு

கலைஞர் கருணாநிதி எழுதிய புதினங்கள்

  • ரோமாபுரிப் பாண்டியன்
  • பொன்னர் சங்கர்
  • தென்பாண்டிச்சிங்கம்
  • ஒரே ரத்தம்

நெஞ்சுக்கு நீதி

  • மு.கருணாநிதி எழுதிய தன வரலாற்று நூல் = நெஞ்சுக்கு நீதி.
  • நெஞ்சுக்கு நீதி நூலில் உள்ள பாகங்களின் எண்ணிக்கை = ஆறு.

கருணாநிதி எழுதிய உரை நூல்கள்

  • சங்கத்தமிழ்
  • குறளோவியம்
  • தொல்காப்பியப் பூங்கா

தொல்காப்பியப் பூங்கா

  • இலக்கண நூலுக்கு இலக்கியச் சுவை தோன்றுமாறு அமைந்த புதுமை நூல் = தொல்காப்பியப் பூங்கா.
  • 142 தொல்காப்பிய நூற்பாக்களை கொண்டு 100 தலைப்புகளில் எழுதியுள்ளார்.
  • “நெல்லுக்குள்ளிருந்து அரிசி தலைகாட்டுவதுபோல, வெள்ளை விழிகள் இமைகளின் இடுக்குகளில் ஒளிகாட்டிய வண்ணமிருந்தன” என்று உவமையாக கூறியவர் = கலைஞர் கருணாநிதி.
  • “வல்லினம், மெல்லினம், இடையினம் ஒன்றுபட்டுத் தமிழ் என்றே தகத்தகாய ஒளிபரப்பிடும்போது தமிழர்கள் பலகூறுகளாகப் பிளவுபட்டுப் பாழ்பட்டுக் கிடப்பது நியாயந்தானா?” என்று உவமையை கூறியவர் = கலைஞர் மு.கருணாநிதி.
  • எழுத்துகளின் ஒற்றுமையைக் கூறவந்த இடத்தில், தமிழர்கள் தமக்குள் பிளவுபட்டு இருப்பதைக் உவமையாகக் கூறியவர் = மு.கருணாநிதி.

கவிதைக் கலைஞர்

  • “கவியரங்குகளே தனக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!” என்று கூறியவர் = கலைஞர் கருணாநிதி.
  • கலைஞர் மு.கருணாநிதி எழுதிய கவிதைகள் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளன = ஒன்பது.
  • கலைஞர் கருணாநிதி எழுதிய வசன கவிதை நூல் = புறநானூற்றுத்தாய்.
  • “இந்த எட்டுச்சுவை பிட்டுத்தமிழ் கட்டித்தயிர் வட்டில்நிறை கொட்டித்தரப் பட்டுக்கொடிக் கொற்றக்குடை முத்துச்சரச் சோழனூர்வருவீரே!” என்ற கருணாநிதியின் வரிகள் குறிப்பிடும் நூல் = சிலப்பதிகாரம்.
  • “கொடுமைக்கு முடிவு கண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?” என்று அறிஞர் அண்ணாவின் மறைவின் பொழுது கருணாநிதி குறிப்பிட்டார்.

கட்டுமான ஆர்வலர் கலைஞர்

  • சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் அமைத்தார் கலைஞர்.
  • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கத்தின் பெயர் = குறள் மணிமாடம்.
  • அழிந்து போல சிலப்பதிகார நகரான பூம்புகாரில், “பூம்புகார்க் கலைக்கூடம்” என்ற அரங்கை உருவாக்கினார்.
  • அண்ணாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு 2010ஆம் ஆண்டு “அண்ணா நூற்றாண்டு நூலகம்” திறந்து வைத்தார்.
  • காமராஜர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் = கன்னியாகுமரி.

செம்மொழிக் கலைஞர்

  • “முத்தமிழ் அறிஞர்” என்று போற்றப்படுபவர் = மு.கருணாநிதி.
  • கல்வித்துறையை பள்ளிக்கல்வித்துறை என்றும், உயர்கல்வித்துறை என்றும் இரண்டாக பிரித்தார்.
  • 2010 ஆம் ஆண்டு “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை” எங்கு நடத்தினார் = கோவை.
  • கருணாநிதி எழுதிய “செம்மொழியான தமிழ்மொழியாம்” பாடலுக்கு இசை அமைத்தவர் = ஏ.ஆர்.ரஹ்மான்.
  • கலைஞர் மு.கருணாநிதி எந்த வயதில் காலமானார் = 94.
  • கலைஞர் மு.கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி காலமானார்.