SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Saturday, September 23, 2023
Wednesday, August 18, 2021
7th STD TAMIL UNIT 1 TEST QUESTION PAPER - VILLUPURAM DIST
Wednesday, August 11, 2021
7ஆம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு இயல் 1 வினாத்தாளுக்கான விடைகள் முழுமையும்
இயல்-1
பகுதி -அ
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.
1. தமிழ்மொழியின் குறிக்கோளாக வெ.இராமலிங்கனார் கூறுவது யாது?
அ) பொய்யாமை
ஆ) கொல்லாமை
இ) எள்ளாமை
ஈ) தள்ளாமை
விடை : ஆ ) கொல்லாமை
2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
அ) வெ.இராமலிங்கனார்
ஆ) ஈ.வெ.இராமசாமி
இ) பாரதியார்
ஈ) இராமலிங்க அடிகளார்
விடை : அ ) வெ.இராமலிங்கனார்
3. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது எது?
அ) பெரு+செல்வம்
ஆ) பெருஞ்+செல்வம்
இ) பெரிய+செல்வம்
ஈ) பெருமை+செல்வம்
விடை : ஈ ) பெருமை + செல்வம்
4. முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரிவான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி-
இவ்வடிகளில் 'வள்ளல்' என்னும் பொருள் தரும் சொல் யாது?
அ) கொடுத்தான்
ஆ) உபகாரி
இ) முகில்
ஈ) வேல்பாரி
விடை : ஆ ) உபகாரி
5. மொழியின் இரண்டாம் நிலை யாது?
அ) பேசுதல், எழுதுதல்
ஆ) கேட்டல், பேசுதல்
இ) படித்தல், எழுதுதல்
ஈ) உணர்தல், பேசுதல்
விடை : இ ) படித்தல் , எழுதுதல்
6. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உளவாகும் - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?
(அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) ஒன்றல்ல இரண்டல்ல
ஈ) எங்கள் தமிழ்
விடை : அ ) நன்னூல்























