Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 06


  1. ஆஸ்டியோமலேசியா எந்த தாது உப்பு குறைபாட்டால் ஏற்படுகிறது? பாஸ்பரஸ்.
  2. விலங்குகளின் சுவாசத்தின் போது வெளியிடப்படுவது யாவை? காபன்டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றல்.
  3. ஒருசெல் உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக. பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ் மற்றும் ஈஸ்ட்.
  4. பலசெல் உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக. தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதன்.
  5. புரோகேரியாட்டிக் செல்களின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நியூக்ளியாய்டு.
  6. புரோகேரியாட்டிக் செல்கள் எவ்வளவு விட்டம் கொண்டவை? 0.003 மைக்ரோமீட்டர் முதல் 20 மைக்ரோமீட்டர் வரை.
  7. தெளிவான உட்கருவைக் கொண்டுள்ள செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? யூகேரியாட்டிக் செல்கள்.
  8. சென்டிரியோல்கள் எவ்வகைச் செல்லில் மட்டுமே காணப்படும்? விலங்கு செல்.

 

  1. செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தரும் பாதுகாப்பாளர் எது? செல்சுவர்.
  2. செல்லின் கதவு என்று அழைக்கப்படுவது எது? செல்சவ்வு.
  3. செல்லின் நகரும் பகுதி எனப்படுவது எது? சைட்டோபிளாசம்.
  4. உணவு, நீர் மற்றும் வேதிப் பொருள்களைச் சேமிக்கும் சேமிப்பு கிடங்கு எது? நுண்குமிழ்கள்.
  5. நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்பும் உட்கரு கதவு எது? உட்கரு உறை.
  6. நமது உடலில் எத்தனை பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன? எட்டு.
  7. எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? இரண்டு (அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம்).
  8. மண்டையோடு, முதுகெலும்புத் தொடர், விலா எலும்புக்கூடு ஆகியவை எதில் அடங்கும்? அச்சுச் சட்டகம்.
  9. மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவை எதில் அடங்கும்? இணையுறுப்புச் சட்டகம்.
  10. விலா எலும்புக்கூடு எத்தனை இணைகள் கொண்ட எலும்புகளைக் கொண்டுள்ளது? 12 இணைகள்.
  11. முன்னங்கையை தூக்கி உயர்த்த எந்த தசை சுருங்கி சிறியதாகிறது? இரு தலைத்தசை.
  12. நமது விருப்பத்திற்கேற்ப செயல்படும் தசைகள் எவை? இயக்க தசைகள் (எலும்புத் தசைகள்).
  13. உணவுக் குழாய் சுமார் எத்தனை மீட்டர் நீளமுடையது? 9 மீட்டர்.
  14. உமிழ்நீரில் ஸ்டார்ச்சினை சிதைக்கக்கூடிய நொதி எது? அமைலேஸ்.
  15. இரைப்பை நொதியானது எந்த அமிலத்தைக் கொண்டுள்ளது? ஹைட்ரோகுளோரிக் அமிலம்.
  16. மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய எத்தனை நுண் காற்றுப்பைகளைக் கொண்டுள்ளன? 300 மில்லியன்.
  17. நமது இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது? நான்கு.

No comments:

Post a Comment