Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 05


  1. செல்சியஸ் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? சென்டிகிரேட்.
  2. வெப்ப ஆற்றலை நாம் எந்த அலகால் அளவிடலாம்? கலோரி.
  3. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தப்பயன்படும் வெப்ப அளவு என்ன? ஒரு கலோரி.
  4. பொருளின் நீளத்தில் வெப்பத்தினால் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீள்விரிவு.
  5. 1922 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் எந்த இடத்தில் 59°C வெப்பநிலை கணிக்கப்பட்டது? லிபியா.
  6. நேர்கோட்டு பாதையில் நடந்து செல்லும் மனிதனின் இயக்கம் எவ்வகை இயக்கம்? நேர்கோட்டு இயக்கம்.
  7. கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுழற்றப்படும் கல்லின் இயக்கம் எவ்வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு? வட்டப்பாதை இயக்கம்.
  8. பம்பரத்தின் இயக்கம் எவ்வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு? தற்சுழற்சி இயக்கம்.
  9. தனிஊசல் எவ்வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு? அலைவு இயக்கம்.
  10. குறிப்பிட்ட வடிவம் மற்றும் பருமன் கொண்ட பருப்பொருள் நிலை எது? திண்மம்.
  11. குறிப்பிட்ட வடிவமோ பருமனோ அற்ற பருப்பொருள் நிலை எது? வாயு.
  12. அதிக அளவு அழுத்தத்திற்கு உட்படும் பருப்பொருள் எது? வாயு.
  13. போஸ்- ஐன்ஸ்ட்டீன் சுருக்கம் எந்த ஆண்டு கணிக்கப்பட்டு, எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது? 1925 ல் கணிக்கப்பட்டு, 1995 ல் உறுதி செய்யப்பட்டது.
  14. ஆணிவேர் தொகுப்பிற்கு எடுத்துக்காட்டுகள் தருக. மா, வேம்பு.
  15. பூவின் அடிப்படையில் தாவரங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன? இரண்டு வகைகள் (பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத் தாவரங்கள்).
  16. மூடிய விதைத் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஆஞ்சியோஸ்பெர்ம்கள்.
  17. 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவாழ் தாவரங்கள் எவை? மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள்.
  18. காகிதப்பூவின் மற்றொரு பெயர் என்ன? போகெய்ன்வில்லா.
  19. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடும் வாயு எது? ஆக்சிஜன்.
  20. சுவாசம், சளி, மூச்சுக்குழாய் அழற்சியை குணப்படுத்த உதவும் தாவரம் எது? துளசி.
  21. அமீபாவில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது? சுருங்கும் நுண் குமிழ்கள்.
  22. குளிர்கால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக. ஆமை.
  23. கோடைகால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக. நத்தை.
  24. சிங்கப்பூரில் பென்குவின் பறவைகள் பராமரிக்கப்படும் பூங்காவின் பெயர் என்ன? ஜீராங் பறவைகள் பூங்கா.
  25. முருங்கை இலையில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் யாவை? வைட்டமின்-A, C, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதம்.

No comments:

Post a Comment