Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 04


  1. மனித உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியது எது? உள்காதில் உள்ள அங்கவடி (Stapes) எலும்பு.
  2. சூரிய ஒளியைப் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான வைட்டமின்-D உற்பத்தி செய்யும் உறுப்பு எது? தோல்.
  3. காந்தத்தின் திசைக் காட்டும் பண்பை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் யார்? சீனர்கள்.
  4. மின்காந்த தொடர்வண்டிகளில் பயன்படுவது எது? மின்காந்தங்கள்.
  5. புவியில் காணப்படும் நீரில் நன்னீரின் அளவு எவ்வளவு சதவீதம்? 3%.
  6. நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? H₂O.
  7. உலக நீர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? மார்ச் 22.
  8. நீர் சுழற்சியின் வேறு பெயர் என்ன? ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி.
  9. ஒரு காலன் என்பது எத்தனை லிட்டருக்குச் சமம்? 3.785 லிட்டர்.
  10. அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது? கியூசக் (கன அடி / விநாடி).
  11. வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் கண்ணீர் வரக் காரணமான வேதிப்பொருள் எது? புரோப்பேன் தயால் S-ஆக்சைடு.
  12. தாவரங்கள் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையான முதன்மை சத்துக்கள் யாவை? நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (NPK).
  13. யூரியாவில் எவ்வளவு சதவீதம் நைட்ரஜன் உள்ளது? 46%.
  14. முதன்முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார்? வில்லியம் ஆஸ்பிடின் (1824).
  15. வலுவூட்டப்பட்ட காரை என்பதில் அடங்கியுள்ள பொருள்கள் யாவை? சிமெண்ட், மணல், ஜல்லிக்கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் நீர்.
  16. ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன? கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்.
  17. எப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? MgSO₄.7H₂O.
  18. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் எது? ஜிப்சம்.
  19. கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலம் எது? பீனால்.
  20. திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள் எந்த ஆண்டு வகுக்கப்பட்டன? 2016.
  21. உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அக்டோபர்- 16.
  22. இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்யும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்.
  23. பூமியிலும் நிலவிலும் ஒரு பொருளின் எந்த அளவு சமமாகவே இருக்கும்? நிறை.
  24. ஒரு கிலோகிராம் எடைக்கான பிளாட்டினம் - இரிடியம் உலோகத் தண்டு சர்வதேச நிறுவனத்தால் எந்த ஆண்டு முதல் வைக்கப்பட்டுள்ளது? 1889 முதல்.
  25. வெப்பத்தை அளக்கப் பயன்படும் மற்றொரு அலகு எது? கலோரி.

No comments:

Post a Comment