Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 03


  1. வளிமண்டலம் பூமியிலிருந்து சுமார் எத்தனை கிலோமீட்டர் தொலைவிற்குப் பரவியுள்ளது? 800 கி.மீ..
  2. வானூர்திகள் பறக்கும் வளிமண்டல அடுக்கு எது? அடிவளி மண்டலம் (Troposphere).
  3. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் எந்த அடுக்கில் உள்ளது? அடுக்குவளி மண்டலம் (Stratosphere).
  4. காற்று என்பது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை என்று நிரூபித்தவர் யார்? ஜோசப் பிரிஸ்ட்லி (1774).
  5. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்துவதற்கு சூரியஒளி தேவைப்படுகிறது என்பதனை நிரூபித்தவர் யார்? ஜான் இன்ஜென்ஹவுஸ்.
  6. நைட்ரஜனைக் கண்டறிந்து அதற்குப் பெயரிட்டவர் யார்? டேனியல் ரூதர்ஃபோர்டு.
  7. காற்றில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் சதவீதம் எவ்வளவு? நைட்ரஜன் - 78%, ஆக்சிஜன் - 21%.
  8. உலர்பனிக்கட்டி என்பது என்ன? -57°C க்கு குளிர்விக்கப்பட்ட கார்பன்டை ஆக்சைடு.
  9. 'மைக்ரோகிராபியா' என்ற நூலினை வெளியிட்டவர் யார்? ராபர்ட் ஹூக் (1665).
  10. செல்லுலா என்ற லத்தீன் சொல்லின் பொருள் என்ன? சிறிய அறை.
  11. மனித உடலில் உள்ள செல்களின் தோராயமான எண்ணிக்கை எவ்வளவு? 3.7 X 10^13.
  12. தெளிவற்ற உட்கருவைக் கொண்ட செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? புரோகேரியோட்டிக் செல்கள்.
  13. விலங்கு செல்லில் எவை காணப்படுவதில்லை? செல்சுவர் மற்றும் பசுங்கணிகம்.
  14. செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது எது? மைட்டோகாண்டிரியா.
  15. செல்லின் உணவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது எது? பசுங்கணிகம்.
  16. செல்லின் மூளையாகச் செயல்பட்டு அதன் செயல்களைக் கட்டுப்படுத்தும் மையம் எது? உட்கரு (நியூக்ளியஸ்).
  17. முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன? 206 எலும்புகள்.
  18. நமது விருப்பத்திற்கேற்ப செயல்படாத கட்டுப்படாத இயங்கு தசைகளுக்கு எடுத்துக்காட்டு தருக. மென்தசைகள் மற்றும் இதயத் தசைகள்.
  19. சிறுகுடல் தோராயமாக எத்தனை மீட்டர் நீளமுடையது? 6 மீட்டர்.
  20. சுவாசப்பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கும் அமைப்பு எது? குரல்வளை மூடி (எப்பிகிளாட்டிஸ்).
  21. நுரையீரல்களைச் சுற்றியுள்ள இரு அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்புப் படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ப்ளூரா (Pleura).
  22. சுத்த இரத்தத்தினைக் கடத்தும் தமனிகளில் விதிவிலக்கான தமனி எது? நுரையீரல் தமனிகள்.
  23. இரத்த சிகப்பு அணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன? எலும்பு மஞ்சையில்.
  24. மூளையைப் பாதுகாக்கும் சவ்வுகளுக்கு என்ன பெயர்? மூளை உறைகள் (Meaninges).
  25. சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகுகள் யாவை? நெஃப்ரான்கள்.

No comments:

Post a Comment