Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 02



  1. யூக்ளினா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? கசையிழையின் மூலம்.
  2. ஒரு விலங்கு பருவமாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வலசை போதல்.
  3. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது? நீலகிரி வரையாடு.
  4. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம்.
  5. அதிக புரதம் உள்ள உணவு எது? சோயாபீன்ஸ்.
  6. ஆரஞ்சு பழங்களைவிட 20 மடங்கு அதிக வைட்டமின்-C காணப்படும் கனி எது? நெல்லிக்கனி.
  7. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்குக் காரணமான சத்து எது? இரும்புச் சத்து.
  8. தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்குத் தேவைப்படும் சத்து எது? அயோடின் சத்து.
  9. குவாஷியோர்கர் மற்றும் மராஸ்மஸ் ஆகியவை எதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்? புரதக் குறைபாடு.
  10. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? ரிக்கெட்ஸ்.
  11. குழந்தைகளுக்கு அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? கிரிட்டினிசம்.
  12. இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? இரத்தசோகை.
  13. வெப்பத்தின் SI அலகு என்ன? ஜூல்.
  14. வெப்பநிலையின் SI அலகு என்ன? கெல்வின்.
  15. மனித உடலின் சராசரி வெப்பநிலை என்ன? 37°C.
  16. சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிப் பொருள்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன? போரோசிலிகேட் கண்ணாடி (பைரக்ஸ் கண்ணாடி).
  17. உலகிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக கணக்கிடப்பட்டுள்ள இடம் எது? அண்டார்ட்டிக் கண்டம் (-89°C).
  18. தமிழகத்தில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் யாவை? காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி.
  19. மின் உற்பத்தி நிலையங்களில் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவது எது? டர்பைன் எனப்படும் மிகப்பெரிய சுழலிகள்.
  20. மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாத மின்கலன்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? முதன்மை மின்கலன்கள்.
  21. மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் வகை எது? ஈல் மீன்.
  22. ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவி எது? அம்மீட்டர்.
  23. மின்விளக்குகளைக் கண்டறிந்தவர் யார்? தாமஸ் ஆல்வா எடிசன்.
  24. பனிக்கட்டி உருகுதல் என்பது எவ்வகை மாற்றம்? இயற்பியல் மாற்றம்.
  25. இரும்பு துருபிடித்தல் என்பது எவ்வகை மாற்றம்? வேதியியல் மாற்றம்.

No comments:

Post a Comment