Breaking

Saturday, March 7, 2026

6TH அறிவியல் வினா விடைகள் - 01


  1. நீளத்தின் SI அலகு என்ன?  - மீட்டர்.
  2. SI அலகு முறையின் விரிவாக்கம் என்ன? பன்னாட்டு அலகு முறை (International System of Unit).
  3. பூமியை விட நிலவில் ஒரு பொருளின் எடை எத்தனை மடங்கு குறைவாக இருக்கும்? ஆறு மடங்கு.
  4. வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடும் கருவி எது? ஓடோமீட்டர்.
  5. மெட்ரிக் முறை அலகுகளை உருவாக்கியவர்கள் யார்? 1790ல் ஃபிரெஞ்சு நாட்டினர்.
  6. நீளத்தை அளவிடும் அளவுகோலைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் யார்? பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் பெட்வெல்.
  7. சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான பிளாட்டினம்-இரிடியம் படித்தர மீட்டர் கம்பி எங்கு வைக்கப்பட்டுள்ளது? பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில்.
  8. டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது எது? படித்தர மீட்டர் கம்பியின் நகல்.
  9. வளைவுப்பாதை இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. வீசி எறியப்பட்ட பந்து.
  10. ரோபாட் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது? ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து.
  11. ரோபாட் என்ற வார்த்தையின் பொருள் என்ன? உத்தரவுக்கு படிந்த ஊழியர்.
  12. பருப்பொருள்களில் உள்ள சிறிய துகளை 'பரமானு' என்று அழைத்த இந்திய தத்துவமேதை யார்? கனடா.
  13. பருப்பொருள்களின் சிறிய துகளை 'அட்டாமஸ்' (அணு) என்று அழைத்த கிரேக்க தத்துவமேதை யார்? டெமாக்ரட்டிஸ்.
  14. பருப்பொருளின் நான்காம் நிலை என்ன? பிளாஸ்மா நிலை.
  15. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எந்த நிலையில் உள்ளது? பிளாஸ்மா நிலை.
  16. பருப்பொருளின் ஐந்தாம் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? போஸ்- ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்.
  17. தூய தங்கம் எத்தனை காரட் கொண்டது? 24 காரட்.
  18. துணி துவைக்கும் இயந்திரம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது? மைய விலக்கல்.
  19. சல்லிவேர் தொகுப்பிற்கு எடுத்துக்காட்டுகள் தருக. நெல், வாழை, கரும்பு, தென்னை.
  20. மூன்று விட்டம் வரையில் வளரும் இலைகளைக் கொண்ட தாவரம் எது? விக்டோரியா அமேசோனிக்கா.
  21. திறந்த விதைத் தாவரங்கள் (விதைகள் கனிகளில் புதைந்திருக்காது) எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஜிம்னோஸ்பெர்ம்கள்.
  22. வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக்கூடிய தாவரம் எது? மூங்கில்.
  23. ரயில் கற்றாழை என அழைக்கப்படுவது எது? அகேவ்.
  24. அமீபா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? விரல் போன்ற நீட்சிகளான போலிக்கால்கள் மூலம்.
  25. பாரமீசியம் எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? குறுஇழைகள் மூலம்.

No comments:

Post a Comment