கண்டங்கள் பற்றிய தகவல்கள் - ஆசியா
1. ஆசியா கண்டம்
உலகின் பரப்பளவில் மற்றும் மக்கள் தொகையில் எவ்வளவு சதவீதத்தை உள்ளடக்கியது?
விடை: பரப்பளவில் 30 சதவீதம், மக்கள் தொகையில் 60 சதவீதம்.
2. ஆசியா கண்டத்தில்
மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?
விடை: 48 நாடுகள்.
3.ஆசியாவிலேயே
மிகவும் பரந்து காணப்படும் தாழ்நிலமான சைபீரியச் சமவெளி எந்த இரு மலைகளுக்கு இடையே
அமைந்துள்ளது?
விடை: யூரல் மலைகளுக்கும் வெர்கோயான்ஸ்க் மலைத்தொடருக்கும்
இடையே.
4.ஆசியாவில் அமைந்துள்ள
உலகின் மிகவும் தாழ்வான பகுதி எது?
விடை: சாக்கடல்.
5.திபெத் பீடபூமி
'உலகின் கூரை' என்பதைத் தவிர வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: மூன்றாம் துருவம்.
6.கைபர் கணவாய்
மற்றும் போலன் கணவாய் எந்த மலைத்தொடர்களில் அமைந்துள்ளன?
விடை: கைபர் - சுலைமான் மலைத்தொடர், போலன் - டோபா காகர்
மலைத்தொடர்.
ஆசியாவில் காணப்படும்
தெற்கு பீடபூமிகளில் மிகப்பெரிய பீடபூமி எது?
விடை: அரேபிய பீடபூமி.
7.சீனாவின் மின்சார
தேவையில் 10 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் முப்பள்ளத்தாக்கு நீர்த் தேக்கம் எந்த ஆற்றின்
குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
விடை: யாங்சி ஆறு.
8.ஆசியாவில் அமைந்துள்ள
மிகவும் குளிர்ந்த பாலைவனங்கள் எவை?
விடை: கோபி மற்றும் தக்லாமக்கன் பாலைவனங்கள்.
9.உலகின் மிகத்
தொடர்ச்சியான மணற்பாங்கான பாலைவனமான 'ரூப-அல்-காலி' எங்கு காணப்படுகிறது?
விடை: சௌதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில்.
10.உலகிலேயே அதிக
நிலக்கரி இருப்பைக் கொண்ட கண்டம் எது?
விடை: ஆசியா கண்டம்.
11.உலகிலேயே அதிக
அளவில் மைக்காவினை உற்பத்தி செய்யும் நாடு எது?
விடை: இந்தியா.
12.ஆசியாவின் மொத்தப்
பரப்பளவில் சுமார் எத்தனை சதவிகிதம் மட்டுமே வேளாண்மைக்கு ஏற்ற நிலமாகக் காணப்படுகிறது?
விடை: 18 சதவிகிதம்.
13.பனாப் படிக்கட்டு
முறை நெல் விவசாயம் 2000 ஆண்டுகளுக்கு முன் எந்த நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டது?
விடை: பிலிப்பைன்ஸ் (இப்கௌஸ் மக்கள்).
14.கம்போடியாவில்
உள்ள உலகின் மிகச் சிறந்த நன்னீர் மீன்பிடி ஏரியின் பெயர் என்ன?
விடை: டோன்லே சாப்.
15.ஆசிய நெடுஞ்சாலை
வலையமைப்பிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை (AH1) எவற்றை இணைக்கிறது?
விடை: டோக்கியோவைத் துருக்கியுடன் இணைக்கிறது.
16.ஜப்பானிலுள்ள
ஒசாகா மற்றும் டோக்கியோ இடையில் பயணிக்கும் உலகப்புகழ் வாய்ந்த அதிவிரைவு புல்லட் இரயில்
எது?
விடை: சின்கான்வென்.
17.கெமர் மொழியில்
'அங்கோர்வாட்' என்பதன் பொருள் என்ன?
விடை: கோயில்களின் நகரம்.
18.கம்போடியாவில்
உள்ள அங்கோர்வாட் கோயிலை கி.பி 1100 ஆம் ஆண்டில் கட்டிய மன்னர் யார்?
விடை: இரண்டாம் சூரியவர்மன்.
19.பிலிப்பைன்ஸ்
நாட்டின் தேசிய நடனம் எது?
விடை: டினிக்லிங்.
கண்டங்கள் பற்றிய தகவல்கள் - ஐரோப்பா
1.நெதர்லாந்தில்
கடல்நீரைத் தடுக்க எழுப்பப்பட்ட பெருஞ்சுவர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: டைக்.
2.நெதர்லாந்தில்
கடல்நீரைத் தடுத்து உருவாக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை: போல்டர்கள்.
3.உலகிலேயே அதிக
மக்கள் அடர்த்தி காணப்படும் நாடு எது?
விடை: மொனாக்கோ (26,105 நபர்கள் /ச.கி.மீ).
4.ஆசியாவின் மிகப்பெரிய
தீபகற்பமாக விளங்கும் கண்டம் எது?
விடை: ஐரோப்பா.
வரலாறு மற்றும் சமூகவியல்
1.உலகின் முதன்முதலாக
புவி மாதிரியை கி.பி. 150 ல் உருவாக்கியவர்கள் யார்?
விடை: கிரேக்கர்கள்.
2.விண்மீன்கள்
வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால்
விளைகிறது எனத் தமது நூலில் கூறியவர் யார்?
விடை: ஆர்யப்பட்டர்.
3.தாலமி எழுதிய
எந்த நூலில் புவியின் அளவும், அதன் மேற்பரப்பைக் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன?
விடை: GEOGRAPHIA.
4.வேளாண் அடிப்படைத்
தொழிற்சாலைகள் மற்றும் காடுசார்ந்த தொழிற்சாலைகள் ஆகியவை எவ்வகை தொழில்களுக்கு எடுத்துக்காட்டு?
விடை: இரண்டாம் நிலை தொழில்கள்.
5.போக்குவரத்து,
தொலைத்தொடர்பு மற்றும் வங்கி சேவைகள் ஆகியவை எவ்வகைத் தொழில்கள்?
விடை: மூன்றாம் நிலைத் தொழில்கள்.
6.2001 மக்கள்
தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் எத்தனை முக்கிய மொழிகளும், பிற மொழிகளும் உள்ளன?
விடை: 122 முக்கிய மொழிகளும், 1599 பிற மொழிகளும்.
7.இந்தியாவின்
முக்கிய மொழிக் குடும்பங்கள் நான்கினை கூறுக?
விடை: இந்தோ-ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோஆஸ்டிக், சீன திபெத்தியன்.
8.இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி எத்தனை மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
விடை: 22 மொழிகள்.
9.மலையாளம் மற்றும்
ஒடியா மொழிகள் எந்தெந்த ஆண்டுகளில் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன?
விடை: மலையாளம் - 2013, ஒடியா - 2016.
10.இந்திய தொல்லியல்
துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவிதம் தமிழ்நாட்டில் இருந்து
கண்டுபிடிக்கப்பட்டவை?
விடை: 60 சதவிதம்.
11.சுதந்திர இந்தியாவின்
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நாடாகத் திகழ்கிறது
என எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
விடை: டிஸ்கவரி ஆஃப் இந்தியா.
12.2011 கணக்கெடுப்பின்படி,
தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட முதல் இரண்டு மாவட்டங்கள் எவை?
விடை: கன்னியாகுமரி (91.75%) மற்றும் சென்னை
(90.18%).
13.2011 கணக்கெடுப்பின்படி,
தமிழ்நாட்டில் அதிக மற்றும் குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் எவை?
விடை: அதிகபட்சம் - நீலகிரி (1041), குறைந்தபட்சம் - தருமபுரி
(946).
14.'பாபா சாஹேப்'
என அழைக்கப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு இந்திய அரசால் எந்த ஆண்டு
பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
விடை: 1990 ஆம் ஆண்டு.
15.திரு. அப்துல்
கலாம் அவர்கள் எந்த ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்றார்?
விடை: 1997 ஆம் ஆண்டு.
16.2008 ஆம் ஆண்டில்
பிரான்ஸின் கேனஸ் நகரில் பாலைஸ் தேஸ் விழாப் போட்டிகளில் முதல் கேரம் சாம்பியன் பட்டத்தை
வென்றவர் யார்?
விடை: செல்வி. செ. இளவழகி.
17.ஆற்று ஓங்கில்
மற்றும் யானை ஆகியவை எந்த ஆண்டில் இந்தியாவின் தேசிய இயற்கை சின்னங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன?
விடை: 2010.
18.புலி எந்த ஆண்டில்
இந்தியாவின் தேசிய விலங்காக அங்கீகரிக்கப்பட்டது?
விடை: 1973.
19.தமிழ்நாட்டின்
மாநில விலங்கு மற்றும் மாநில பறவை எவை?
விடை: விலங்கு - நீலகிரி வரையாடு, பறவை - மரகதப் புறா.
20.தமிழ்நாட்டின்
மாநில மலர் மற்றும் மாநில மரம் எவை?
விடை: மலர் - செங்காந்தள் மலர், மரம் - பனை மரம்.
21.விடுதலை இந்தியாவின்
முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நெய்யப்பட்டது?
விடை: குடியாத்தம் (வேலூர் மாவட்டம்).
22.அசோகர் காலத்தில்
சாரநாத் தூணின் உச்சியில் அமைந்திருந்த நான்முகச் சிங்கம் தற்போது எங்கு பாதுகாக்கப்படுகிறது?
விடை: சாரநாத் அருங்காட்சியகம்.
23.இந்திய தேசிய
கீதத்தை பாடுவதற்கு தோராயமாக எத்தனை வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
விடை: 52 வினாடிகள்.
24."இந்தியா
எனது தாய்நாடு" என்னும் தேசிய உறுதிமொழியை தெலுங்கில் எழுதியவர் யார்?
விடை: வெங்கட சுப்பாராவ்.
25.16ம் நூற்றாண்டில்
மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன?
விடை: ருபியா.
26.பேரரசர் கனிஷ்கர்
காலத்தில் சக ஆண்டு முறை எந்த ஆண்டில் தொடங்கியது?
விடை: கி.பி. 78.
27.'ஆடுவோமே பள்ளு
பாடுவோமே' என்ற பாரதியாரின் பாடலை நாடு விடுதலை பெற்ற நாளன்று அகில இந்திய வானொலியில்
பாடியவர் யார்?
விடை: டி.கே. பட்டம்மாள்.
28.இந்திய குடியரசு
நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29 அன்று நடைபெறும் சிறப்பு விழாவின் பெயர் என்ன?
விடை: பாசறைக்கு திரும்புதல்.
29.காந்தியின்
பிறந்த நாளை 'சர்வதேச அகிம்சை நாள்' ஆக ஐ.நா. சபை எந்த ஆண்டு முதல் அங்கீகரித்துக்
கொண்டாடி வருகிறது?
விடை: 2007.
30.அரசமைப்புச்
சட்டத்தை உருவாக்கும் நோக்கில் 1946-ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில்
மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?
விடை: 389 உறுப்பினர்கள்.
31.இந்திய அரசமைப்பு
நிர்ணய மன்றத்தில் இடம்பெற்றிருந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை: 15 பெண் உறுப்பினர்கள்.
32.இந்திய அரசியல்
சட்டம் உருவானபோது அதில் எத்தனை உறுப்புகள், பகுதிகள் மற்றும் அட்டவணைகள் இருந்தன?
விடை: 395 உறுப்புகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள்.
33.இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் எந்த வாயு நிரப்பப்பட்ட
பேழையில் வைத்துக் பாதுகாக்கப்படுகிறது?
விடை: ஹீலியம் வாயு.
34.தமிழ்நாட்டில்
எந்த மாவட்டத்தில் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன?
விடை: விழுப்புரம் மாவட்டம்.
35.பாதசாரிகளுக்கு
என்று சாலையில் கடக்கும் பகுதி முதன்முதலில் 1934 ஆம் ஆண்டு எந்த நாட்டில் அமைக்கப்பட்டது?
விடை: பிரிட்டன்.




No comments:
Post a Comment