புவியியல் தகவல்கள்
1. ஒளியின் திசைவேகம்
வினாடிக்கு எவ்வளவு?
விடை: 3,00,000 கி.மீ.
2. ஒலியானது வினாடிக்கு
எவ்வளவு வேகத்தில் பயணிக்கும்?
விடை: 330 மீட்டர்.
3. மணிக்கு
800 கி.மீ வேகத்தில் செல்லும் விமானம் சூரியனை அடைய எத்தனை வருடங்கள் ஆகும்?
விடை: 21 வருடங்கள்.
4. புவியின் மொத்த
பரப்பளவு தோராயமாக எவ்வளவு?
விடை: 510.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்.
புவியியல் - நிலத்தோற்றங்கள்
5. 600 மீட்டருக்கு
மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மலைகள்.
6. சர்வதேச மலைகள்
தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 11.
7. தமிழ்நாட்டில்
அமைந்துள்ள முக்கிய கோடை வாழிடங்கள் யாவை?
விடை: உதகமண்டலம், கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு மற்றும்
ஏலகிரி.
8. தென்னிந்தியாவில்
உள்ள தக்காணப் பீடபூமி எவ்வகையான பாறைகளால் ஆனது?
விடை: எரிமலைப் பாறைகளால் ஆனது.
9. தமிழ்நாட்டில்
காணப்படும் பீடபூமிகள் யாவை?
விடை: தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி மற்றும்
மதுரை பீடபூமி.
10. சமவெளி என்பது
கடல் மட்டத்திலிருந்து சுமார் எத்தனை மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம்?
விடை: 200 மீட்டருக்கும் குறைவானது.
11. சென்னை மெரினா
கடற்கரை எவ்வகை நிலத்தோற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்?
விடை: மூன்றாம் நிலை நிலத்தோற்றம்.
12. இங்கிலாந்தின்
முதுகெலும்பு என அழைக்கப்படும் மலைத்தொடர் எது?
விடை: பென்னைன்ஸ்.
13. ஐரோப்பாவின்
மிக உயரமான சிகரமான எல்ப்ராஸ் சிகரம் (5645 மீ) எந்த மலைத்தொடரில் உள்ளது?
விடை: காகசஸ் மலைத்தொடர்.
14. 'மத்திய தரைக்கடல்
பகுதியின் கலங்கரை விளக்கம்' என்று அழைக்கப்படும் எரிமலை எது?
விடை: ஸ்ட்ரோம்போலி எரிமலை.
15. சுவிஸ்நாட்டில்
உள்ள ஆல்ப்ஸ் மலையில் பிரமிடு வடிவத்தில் காணப்படும் மலையின் பெயர் என்ன?
விடை: மேட்டர்ஹார்ன் மலை.
புவியியல் - பெருங்கடல்கள்
16. பசிபிக் பெருங்கடல்
புவியின் மொத்தப் பரப்பளவில் எவ்வளவு பகுதியைக் கொண்டுள்ளது?
விடை: மூன்றில் ஒரு பகுதி.
17. பசிபிக் பெருங்கடலின்
மொத்தப் பரப்பளவு தோராயமாக எவ்வளவு?
விடை: சுமார் 168.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர்.
18. முக்கோண வடிவத்தில்
காணப்படக்கூடிய பெருங்கடல் எது?
விடை: பசிபிக் பெருங்கடல்.
19. கடலின் ஆழத்தை
அளவிடப் பயன்படும் குறியீடு எது?
விடை: மீ (மீட்டர்).
20. பசிபிக் பெருங்கடலுக்கு
'பசிபிக்' (அமைதி) எனப் பெயரிட்ட ஸ்பெயின் நாட்டு மாலுமி யார்?
விடை: பெர்டினாண்டு மெகல்லன்.
21. அட்லாண்டிக்
பெருங்கடலின் பரப்பளவு எவ்வளவு?
விடை: 85.13 மில்லியன் சதுர கிலோமீட்டர்.
22. போர்ட்டோரிக்கோ
அகழியில் காணப்படும் 'மில்வாக்கி அகழி' எந்தப் பெருங்கடலில் அமைந்துள்ளது?
விடை: அட்லாண்டிக் பெருங்கடல்.
23. இந்தியப் பெருங்கடலின்
பரப்பு சுமார் எவ்வளவு மில்லியன் சதுர கி.மீ ஆகும்?
விடை: 70.56 மில்லியன் சதுர கி.மீ.
24. இந்தியப் பெருங்கடலையும்
பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது?
விடை: மலாக்கா நீர்ச்சந்தி.
25. இந்தியப் பெருங்கடலின்
மிக ஆழமான பகுதியான ஜாவா அகழியின் ஆழம் என்ன?
விடை: 7,725 மீட்டர்.
26. அண்டார்டிகா
தீவைச் சுற்றி அமைந்துள்ள தென்பெருங்கடலின் ஆழம் எவ்வளவு?
விடை: 7,235 மீட்டர்.
27. ஆர்க்டிக்
பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள மிக ஆழமான பகுதியின் பெயர் என்ன?
விடை: யுரேசியன் தாழ்நிலம் (5,449 மீட்டர்).
28. ஐரோப்பாவில்
அமைந்துள்ள முக்கிய மீன்பிடித்தளத்தின் பெயர் என்ன?
விடை: டாகர் பாங்க்ஸ்.
புவியியல் - தீர்க்க/அட்சக் கோடுகள்
29. புவியில் வரையப்பட்டுள்ள
அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
விடை: 181 அட்சக்கோடுகள்.
30. புவியில் வரையப்படும்
அட்சக்கோடுகளில் மிக நீளமானது என்பதால் 'பெருவட்டம்' என அழைக்கப்படுவது எது?
விடை: நிலநடுக்கோடு.
31. 0° அட்சக்
கோட்டிலிருந்து 23½ டிகிரி வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள்
எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை: தாழ் அட்சக்கோடுகள்.
32. புவியில் வரையப்பட்டுள்ள
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
விடை: 360 கோடுகள்.
33. தீர்க்கக்கோடுகள்
புவியில் 45° அட்சப்பகுதிகளில் எவ்வளவு இடைவெளியில் காணப்படுகின்றன?
விடை: 79 கி.மீ.
34. கிரீன்வீச்
தீர்க்கக்கோடு எந்த நகருக்கு அருகில் அமைந்துள்ள 'இராயல் வானியல் ஆய்வு மையம்' வழியே
செல்கிறது?
விடை: லண்டன்.
35. பன்னாட்டு
தேதிக்கோடு நேராகச் செல்லாமல் வளைந்து வரையப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?
விடை: ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமைவதைத் தவிர்க்க.
36. புவி 1 மணி
நேரத்தில் எத்தனை தீர்க்கக்கோடுகளைக் கடக்கிறது?
விடை: 15° தீர்க்கக்கோடுகளை.
37. இந்திய திட்ட
நேரம் (IST) கணக்கிடப் பயன்படும் 82½ டிகிரி கிழக்கு தீர்க்கக்கோடு எந்த ஊரின் வழியே
செல்கிறது?
விடை: உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர்.
38. உலகளவில் மொத்தம்
எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன?
விடை: 24 மணி நேர மண்டலங்கள்.
39. 6° (டிகிரி)
கால்வாய் எந்த இரு பகுதிகளைப் பிரிக்கிறது?
விடை: இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கிறது.
40. 9° (டிகிரி)
கால்வாய் எந்த இரு தீவுகளைப் பிரிக்கிறது?
விடை: லட்ச தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது.
41. 10° (டிகிரி)
கால்வாய் எந்த இரு தீவுகளைப் பிரிக்கிறது?
விடை: அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கிறது.




No comments:
Post a Comment