வரலாறு மற்றும் தொல்லியல்
1.
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எதற்கும் எதற்கும் இடைப்பட்ட காலம்?
விடை: கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும்
எழுதும் முறைகளைக் கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம்.
2.
விலங்குகளுக்கு முதன்முதலாக மருத்துவமனை அமைத்துத் தந்த இந்திய அரசர் யார்?
விடை: அசோகர்.
3.
நமது தேசியக் கொடியில் உள்ள 24 ஆரக்கால் சக்கரம் எதிலிருந்து பெறப்பட்டது?
விடை: சாரநாத் கற்றூண் முத்திரையிலிருந்து.
4.
அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைச் சார்லஸ் ஆலன் எந்தப் பெயரில் நூலாக வெளியிட்டார்?
விடை: The Search for the India's
Lost Emperor.
5.
'தம்மா' என்பது பிராகிருத சொல், இதன் சமஸ்கிருதச் சொல் என்ன?
விடை: தர்மா.
1. மனிதன் சுமார் எத்தனை இலட்சம்
ஆண்டுகளுக்கு முன் நடக்கத் தொடங்கினான்?
விடை: 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்.
2. ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதர்கள் எங்கு
தோன்றினர்?
விடை: கிழக்கு ஆப்பிரிக்கா.
3. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம்
கொண்டிருந்த, ஜெர்மனியில் சான்றுகள் கிடைக்கப்பெற்ற பழங்கால மனிதன் யார்?
விடை: நியாண்டர்தால்.
4. பீகிங் மனிதன் எங்கு வாழ்ந்தான்?
விடை: சீனா.
5. லண்டன் பகுதியில் வாழ்ந்த பழங்கால
மனிதன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
விடை: ஹைடல்பர்க் மனிதன்.
6. தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள்
காணப்படும் பொறிவரை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: நீலகிரி மாவட்டம்.
7. ஹரப்பா மற்றும் மொஹஞ்ச-தாரோ நகரங்களை
அகழாய்வு செய்ய ஆரம்பித்த ஆண்டு எது?
விடை: 1920.
8. ஹரப்பாவிற்கும் மொஹெஞ்ச-தாரோவிற்கும்
பொதுவான அம்சங்கள் இருப்பதை 1924ல் கண்டறிந்தவர் யார்?
விடை: ஜான் மார்ஷல்.
9. ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு
எவ்வளவு?
விடை: 13 லட்சம் சதுர கி.மீ.
10. மொஹஞ்ச-தாரோவில் இருந்த 20 தூண்கள்
மற்றும் 4 வரிசைகளைக் கொண்ட மிகப்பெரிய பொதுக் கட்டடம் எது?
விடை: கூட்ட அரங்கு.
11. சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா
என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கிய அக்காடிய அரசன் யார்?
விடை: நாரம்-சின்.
12. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
தந்தத்திலான அளவுகோல் எவ்வளவு சிறிய அளவீட்டைக் கொண்டுள்ளது?
விடை: 1704 மி.மீ.
13. நடன மாது எனப் பெயரிடப்பட்ட வெண்கலத்தாலான
சிறிய பெண் சிலை எங்கு கிடைத்தது?
விடை: மொஹெஞ்ச-தாரோ.
14. சிந்துவெளி மக்கள் ஆபரணங்கள்
செய்ய எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்?
விடை: சிவப்பு நிற மணிக்கற்கள்.
15. மனித வரலாற்றில் முதல் எழுத்து
வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
விடை: சுமேரியர்களால்.
16. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக்
கொண்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட ராகிகர்கி எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை: ஹரியான மாநிலம்.
17. சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடியாகக்
கருதப்படும் மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
விடை: போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு.
சங்க காலம் மற்றும்
பண்டைய தமிழகம்
1.
பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?
விடை: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
2.
சந்திர குப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையைப் பற்றி எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
விடை: அர்த்தசாஸ்திரம்.
3.
சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக எங்கு இருந்த கடிகைக்கு வந்தார்?
விடை: காஞ்சி.
4.
தமிழ்நாட்டில் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுவது எது?
விடை: காஞ்சிபுரம்.
5.
சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு மற்றும் தொண்டைநாடு ஆகியவை எதற்குப் புகழ் பெற்றவை?
விடை: சோழநாடு - சோறுடைத்து, பாண்டிய நாடு - முத்துடைத்து,
சேரநாடு - வேழமுடைத்து, தொண்டைநாடு - சான்றோருடைத்து.
6.
சேர அரசர்களைப் பற்றிய செய்திகளை வழங்கும் சங்க கால நூல் எது?
விடை: பதிற்றுப்பத்து.
7.
தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சங்க கால சேர அரசன் யார்?
விடை: சேரல் இரும்பொறை.
8.
கரிகாலன் மூவேந்தர்கள் மற்றும் பதினொன்று வேளிர் தலைவர்களை தோற்கடித்த இடம் எது?
விடை: வெண்ணி.
9.
சேரர்களின் அடையாள மாலை மற்றும் துறைமுகம் யாவை?
விடை: பனம்பூ மாலை, முசிறி/தொண்டி.
1. குறுநில மன்னர்களில் 'ஆய்' என்னும்
பெயர் எந்தப் பழந்தமிழ்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது?
விடை: ஆயர்.
2. சங்க காலத்தில் நிலவரியே வருவாயின்
முக்கிய ஆதாரம், அது எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: இறை.
3. சங்க காலத்தில் எறியீட்டி எவ்வாறு
குறிப்பிடப்பட்டது?
விடை: தோமாரம்.
4. சங்க காலத்தில் நெய்தல் திணை
மக்களின் கடவுளாக வணங்கப்பட்டவர் யார்?
விடை: வருணன்.
5. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள
கொடுமணல் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: ஈரோடு மாவட்டம்.
6. இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும்
வகையில் நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நடுகல்.




No comments:
Post a Comment