Breaking

Friday, April 24, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 04


வேத காலம்

1. ஆரியர்கள் எந்தக் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர்?

விடை:  இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய்.

2. ரிக்வேதகால ஆரியர்களின் வாழ்விடமான 'சப்தசிந்து' என்பதன் பொருள் என்ன?

விடை:  ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி.

4. ரிக் வேத கால அரசியலில் குடும்பத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

விடை:  குலபதி.

4. பின் வேதகாலத்தில் உருவான அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

விடை:   ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள்.

5. வேதகாலத்தில் 'பாலி' என்ற வரியின்படி விவசாய மகசூழில் அல்லது கால்நடைகளில் எவ்வளவு பங்கு அரசனுக்குச் செலுத்த வேண்டும்?

விடை:  1/6 பங்கு.

6. வேதகால மக்களின் முதன்மைப் பயிரான 'யவா' என்பது எதைக் குறிக்கிறது?

விடை:  பார்லி.

7. வேதகாலப் பண்பாடு எவ்வகை மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது?

விடை:  வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு.

8. ரிக்வேத கால மக்கள் பயன்படுத்திய நிஷ்கா, சத்மனா என்பவை எவ்வகை நாணயங்கள்?

விடை:  தங்க நாணயங்கள்.

9. ரிக்வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'கிருஷ்ணாலா' என்பது எவ்வகை நாணயம்?

விடை:  வெள்ளி நாணயம்.

10. நான்கு ஆஸ்ரமங்களில் ஒன்றான 'வனப்பிரஸ்தம்' என்பதன் பொருள் என்ன?

விடை:  காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்.

11.'மெகாலித்' (Megalith) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது?

விடை:  கிரேக்கச் சொல்.

சமணம் மற்றும் பௌத்தம்

1. சமணத் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த இடம் எது?

விடை:  வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம், பீகார்.

2. மகாவீரரின் பெற்றோர் பெயர்கள் யாவை?

விடை:  சித்தார்த்தர், திரிசலா.

3. பன்னிரண்டரை ஆண்டுகால தவத்திற்குப் பின்னர் மகாவீரர் அடைந்த எல்லையற்ற அறிவின் பெயர் என்ன?

விடை:  கைவல்ய.

4. மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி தொகுத்த போதனைகளின் பெயர் என்ன?

விடை:  : ஆகம சித்தாந்தம்.

5. முற்போக்கானவர்களாகக் கருதப்பட்டு வெள்ளை நிற ஆடைகளை அணியும் சமணப் பிரிவினர் யார்?

விடை:  சுவேதாம்பரர்.

6. சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது உடன் சென்ற சமணப் பெண் துறவி யார்?

விடை:  கவுந்தியடிகள்.

7. காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் கிராமம் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?

விடை:  ஜைனக் காஞ்சி.

8. புத்தரின் பெற்றோர் பெயர்கள் யாவை?

விடை:  சுத்தோதனா, மாயாதேவி.

9. புத்தரின் முதல் போதனைச் சொற்பொழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை:  தர்ம சக்ர பரிவர்த்தனா.

10. பௌத்த சங்கத்தின் துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

விடை:  பிட்சுக்கள்.

11. புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்ட பௌத்த நினைவுச்சின்னங்கள் எவை?

விடை:  ஸ்தூபி.

12. புத்தரின் உருவங்களை வணங்கிய பௌத்தப் பிரிவு எது?

விடை:  மகாயானம்.

1.    முதல் பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் மற்றும் அதனைத் தலைமையேற்றவர் யார்?

விடை:  இராஜகிருகம், அரசர் அஜாதசத்ரு.

2.    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த தர்க்கவியல் அறிஞர் யார்?

விடை:  தின்னகர்.

3.    பாரசீகத்தில் ஜொராஸ்டிரியனிசத்தை தோற்றுவித்தவர் யார்?

விடை:  ஜொராஸ்டர்.

மௌரியப் பேரரசு மற்றும் அதன் பின்

4.    ஆறாம் நூற்றாண்டில் மொத்தம் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?

விடை:  பதினாறு.

17. சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த எந்த அரசர் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்?

விடை:  காலசோகா.

18. சந்திரகுப்த மௌரியரைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்ற சமணத்துறவி யார்?

விடை: பத்ரபாகு.

19. உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமணச் சடங்கின் பெயர் என்ன?

விடை:  சல்லேகனா.

20. எதிரிகளை அழிப்பவன் என்று பொருள்படும் 'அமிர்தகதா' என்று கிரேக்கர்களால் அழைக்கப்பட்டவர் யார்?

விடை:   பிந்துசாரர்.

21. 'தேவனாம்பிரியர்' என்றழைக்கப்பட்ட அசோகரின் பட்டப்பெயருக்குப் பொருள் என்ன?

விடை:  கடவுளுக்கு பிரியமானவன்.

22. அசோகர் கல்வெட்டுகளில் சாஞ்சியில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை எது?

விடை:  பிராமி.

1.    மௌரியர்களின் காலத்தில் நகர நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?

விடை:  நகரிகா.

2.    மௌரியர்கள் காலத்தில் அரசினுடைய செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

விடை:  மாஸகாஸ்.

3.    சுதர்சனா ஏரி உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ள கல்வெட்டு எது?

விடை:  ருத்ரதாமனின் ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.

4.    கலிங்கநாட்டு அரசன் காரவேலனுடைய புகழ்பெற்ற கல்வெட்டு எது?

விடை:  ஹதிகும்பா கல்வெட்டு.

27. காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் என கருதப்படுபவர் யார்?

விடை:  அக்னிமித்ரா.

28. கௌதமிபாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) எது?

விடை:  நாசிக் மெய்க்கீர்த்தி.

29. அமராவதியில் புகழ்பெற்ற பௌத்த ஸ்தூபிகளைக் கட்டியவர்கள் யார்?

விடை:  சாதவாகனர்கள்.

30. சாகர்களின் ஆட்சியானது காந்தாரப்பகுதியில் யாரால் நிறுவப்பட்டது?

விடை:  மாவோஸ் அல்லது மோகா.

31. தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு எது?

விடை:  ருத்ரதாமனுடைய ஜுனாகத் மற்றும் கிர்னார் கல்வெட்டு.

32. புனித தாமஸிடம் தொடர்புடைய, கிறித்துவத்திற்கு மதம் மாறிய இந்தோ-பார்த்திய அரசர் யார்?

விடை:  கோண்டோ பெர்னஸ்.

குப்தர் காலம்

33. முதலாம் சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம்பெற்றிருந்தன?

விடை:  சந்திரகுப்தர் மற்றும் குமாரதேவி.

34. சமுத்திரகுப்தரால் தென்னிந்தியாவில் தோற்கடிக்கப்பட்ட பல்லவ நாட்டு அரசர் யார்?

விடை:  விஷ்ணுகோபன்.

35. 'பிரசஸ்தி' என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?

விடை:  ஒருவரைப் பாராட்டி புகழ்வது.

36. விக்கிரமாதித்யர் (இரண்டாம் சந்திரகுப்தர்) அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்?

விடை:  அமர சிம்ஹர்.

37. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?

விடை:  விஸ்ணுகுப்தர்.

38. பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்த குப்தர் கால வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

விடை:  சார்த்தவாகா.

39. பூமி தனது அச்சில் சுழலுகிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார்?

விடை:  ஆரியப்பட்டர்.

40. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

விடை:  தினாரா.

பல்லவர் மற்றும் சாளுக்கியர்

41. களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கிய மன்னன் யார்?

விடை:  சிம்மவிஷ்ணு.

42. மத்தவிலாசப்பிரகசனம் என்ற நாடகத்தைச் சமஸ்கிருத மொழியில் எழுதிய பல்லவ அரசன் யார்?

விடை:  முதலாம் மகேந்திரவர்மன்.

43. சிறுத்தொண்டர் எனப் பிரபலமாக அறியப்பட்ட முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார்?

விடை:  பரஞ்சோதி.

44. காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமான் கோவிலைக் கட்டிய பல்லவ மன்னன் யார்?

விடை:   நந்திவர்மன்.

45. கிராதார்ஜுனியம் எனும் வடமொழிக் காப்பியத்தை வடித்த சமஸ்கிருத அறிஞர் யார்?

விடை:  பாரவி.

46. அய்கோல் கல்வெட்டை சமஸ்கிருத மொழியில் எழுதிய இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார்?

விடை:  ரவிகீர்த்தி.

47. வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறையை வளர்ச்சி பெறச் செய்தவர்கள் யார்?

விடை:  சாளுக்கியர்கள்.

48. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்?

விடை:  ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.

49. கீழடி அகழாய்வு மாதிரிகளை 2017ல் இந்திய தொல்லியல் துறை எந்த நிறுவனத்திற்கு கணிக்க அனுப்பியது?

விடை:  பீட்டா அனாலடிக் நிறுவனம், புளோரிடா.

புவியியல்

50. புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?

விடை:  ஆண்ட்ரோமெடா மற்றும் மெகல்லனிக் க்ளவுடஸ்.

51. சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியன் எத்தனை சதவிகிதம் உள்ளது?

விடை:  99.8 சதவிகிதம்.

52. புவி வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது?

விடை:  30 கிலோமீட்டர்.

No comments:

Post a Comment