மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன - (கலி- ice 24 7-10)
கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
ஏறு தழுவுதல் பற்றிப் பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.
தொல்சான்றுகள்
ஏறு தழுவுதல் குறித்த பல நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுன்னன. சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு
மேலைநாடுகளில் குறிப்பாக, தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
- ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = கலித்தொகை.
- கலித்தொகையின் முல்லைக்கலியில் “ஏறு தழுவுதல்” பற்றிய குறிப்புகள் உள்ளன.
- முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் நிகழ்வு = ஏறு தழுவுதல்.
- “காளைகளின் பாய்ச்சல்” பற்றி கூறும் சங்க இலக்கிய நூல் = கலித்தொகை.
- கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
- “ஏறுகோள்” பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = கலித்தொகை
- “ஏறுகோள்” பற்றிய குறிப்புகள் உள்ள ஐம்பெருங்காப்பிய நூல் = சிலப்பதிகாரம்.
- “ஏறுகோள்” பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ள இலக்கண நூல் = புறப்பொருள் வெண்பாமாலை.
- “ஏறு தழுவுதல்” பற்றி குறிப்புகள் உள்ள சிற்றிலக்கிய வகை = பள்ளு.
- “எருதுகட்டி” என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் “கண்ணுடையம்மன் பள்ளு” பதிவு செய்துள்ளது.
- ஏறு தழுவுதலை “எருதுகட்டி” என்று குறிப்பிட்டுள்ள சிற்றிலக்கியம் = பள்ளு
- ஏறு தழுவுதலை “எருதுகட்டி” என்று குறிப்பிட்டுள்ள பள்ளு இலக்கியம் = கண்ணுடையம்மன் பள்ளு.
- “கண்ணுடையம்மன் பள்ளு” நூலின் ஆசிரியர் = முத்துகுட்டிப் புலவர் (முத்துநாயகப் புலவர்).
- “எருது பொருதார் கல்” கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் = சேலம்.
- சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது.
- கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு.
- கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் என்பது இதன் பொருள்.
- கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது.
- திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.
- தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது
- சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.
- இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
- சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.
- ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
- இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
- ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன.
- மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
- சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.
- சல்லி என்பதன் பொருள் = மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.
- ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு = காளைச் சண்டை.
- இதில் காளை மாட்டினை கொன்று அடக்க வேண்டும்.
- எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த இடம்பெற்றுள்ளன.
காங்கேயம் காளை மாடுகள்
- தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.
- தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது.
- தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என கருதப்படும் காளை இனம் = காங்கேயம் காளைகள்.
- பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன.
- பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன.
- மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன.
- அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
- கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.
- இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1.
சங்க இலக்கியத்தில் ‘ஏறு தழுவுதல்’ பற்றிக் கூறும் நூல்.
அ) அகநானூறு
ஆ) கலித்தொகை
இ) பரிபாடல்
ஈ) ஐங்குறுநூறு
2.
ஏறுதழுவுதல் குறித்துக் கூறும் கலித்தொகைப் பகுதி.
அ) குறிஞ்சிக்கலி
ஆ) முல்லைக் கலி
இ) மருதக்கலி
ஈ) நெய்தற்கலி
3.
‘கண்ணுடையம்மன் பள்ளு’ ஏறுதழுவுதலை எவ்வாறு குறிப்பிடுகிறது?
அ) எருது பொருதல்
ஆ) எருதுகட்டி
இ) ஏறுகோள்
ஈ) காளைப்பாய்ச்சல்
4.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) நீலகிரி மாவட்டம் – கரிக்கையூர்
ஆ) சேலம் மாவட்டம் – கருவத்துறை
இ) மதுரை மாவட்டம் – கல்லூத்து மேட்டுப்பட்டி
ஈ) தேனி மாவட்டம் – சித்திரக்கல் புடலில்
(விடையாக வருபவை நடுகல், ஏனையவை காளை ஓவியம் சம்பந்தம்
உடையவை)
5.
காளையைக் கொன்று அடக்குபவனே சிறந்த வீரனாகக் கருதப்படும் நாடு.
அ) இங்கிலாந்து
ஆ) இலங்கை
இ) ஸ்பெயின்
ஈ) கனடா
6.
சிந்துவெளி அகழாய்வுகளில் காண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின்
பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக உள்ளது என்று கூறியவர்.
அ) எம் பிரபாகரன்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) ஆர் நாகசுவாமி
ஈ) கே ராஜன்
7.
பொருந்தாத இணை எது?
அ) முல்லை
ஆ) மருதல்
இ) நெய்தல்
ஈ) பாலை
(விடையாகக் கொடுக்கப்பட்டுள்ளதைத் தவிர ஏனையவற்றில்
மாடுகளின் பயன்பாடு உள்ளது)
8.
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
9.
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ...............இல் உள்ளது.
அ) கோத்தகிரி
ஆ) கரிக்கையூர்
இ) ஆதிச்சநல்லூர்
ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி
10.
காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.
அ) இங்கிலாந்து
ஆ) இலங்கை
இ) ஸ்பெயின்
ஈ) கனடா




No comments:
Post a Comment