
நூல் வெளி
தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்; பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம். இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது; பௌத்த சமயச் சார்புடையது. கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை.
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர். கூலவாணிகம் (கூலம் - தானியம்) செய்தவர். இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர். தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
விழாவறை காதை
தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்;
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்;
விழவுமலி மூதூர் வீதியம் மன்றமும்
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்தமின்;? (அடிகள் 43-53)|
தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்;
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
பாரா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்;
வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்தடன் திரிதரும்
நாலேழ் நாளினும் நன்கறிந்தீர் என –
ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் சுகத்தர் மருங்கென்- (அடிகள் 58-72)
1.
‘தண்டமிழாசான்’ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச் சாத்தனார்
இ) மாங்குடி மருதனார்
ஈ) திருத்தக்கத் தேவர்
2.
‘நன்னூற்புலவன்’ எனச் சாத்தனாரைப் பாராட்டியவர்.
அ) இளங்கோவடிகள்
ஆ) கம்பர்
இ) வாணிதாசன்
ஈ) பாரதியார்
3.
மணிமேகலை ....... சமய சார்புடைய காப்பியம்.
அ) சமண
ஆ) பௌத்த
இ) சைவ
ஈ) வைணவ
4.
மணிமேகலையில் அமைந்துள்ள காதைகளின் எண்ணிக்கை.
அ) 20
ஆ) 30
இ) 35
ஈ)
38
5.
‘சீத்தலை’ என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அ) திருச்சி
ஆ) சேலம்
இ) கோவை
ஈ) ஈரோடு
6.
ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டை குறிக்கும் சொல்.
அ) தூணம்
ஆ) தாமம்
இ) துருத்தி
ஈ) பொலம்
7. ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி’ இவ்வடிகள் இடம்பெற்ற இலக்கியம்.
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
8.
‘ஐம்பெருங்குழு, எண்பேராயம்’ – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.
அ) திசைச்சொற்கள்
ஆ) வடசொற்கள்
இ) உரிச்சொற்கள்
ஈ) தொகைச்சொற்கள்
9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) தோம் - மக்கள்
ஆ) கோட்டி – மன்றம்
இ) பொலம் – பொன்
ஈ) வேதிகை – திண்ணை
10.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) வசி – மழை
ஆ) செற்றம் – சினம்
இ) துருத்தி - ஆற்றிடைக்குறை
ஈ) கலாம் - போர்வை




No comments:
Post a Comment