
நூல் வெளி
ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒருகுழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். இவரது வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் - உன்
நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்! - காலம் பிறக்கும் முன்....
ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் - நீதி
ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்
மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட... - காலம் பிறக்கும் முன்....
எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே
சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச்
சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே... - காலம் பிறக்கும் முன்...
விரலை மடக்கியவன் இசையில்லை - எழில்
வீணையில் என்று சொல்வதுபோல்
குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்
கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்! - ஈரோடு தமிழன்பன்
- எத்தனை எத்தனை, விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
- ஏந்தி - வினையெச்சம்
- காலமும் - முற்றும்மை
வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்
வளர் - பகுதி
ப் - சந்தி,
ப் - எதிர்கால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் -- பிங்கல நிகண்டு
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்
தெரியுமா?
உலகத் தாய்மொழி நாள் - பிப்ரவரி 21
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் இலங்கை , சிங்கப்பூர்
1. ‘ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின்
புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை என்று கூறியவர்.
அ) கந்தர்வன்
ஆ) ஈரோடு தமிழன்பன்
இ) ஆண்டாள் பிரியதர்ஷினி
ஈ) ந. பிச்சமூர்த்தி
2. ஈரோடு தமிழன்பனின் எந்தக் கவிதை நூலுக்கு
2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
அ) தமிழோவியம்
ஆ) வணக்கம்
வள்ளுவ
இ) தண்ணீர் தண்ணீர்
ஈ) தமிழன்பன் கவிதைகள்
3. தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பன்
நூல் எது?
அ) தமிழோவியம்
ஆ) வணக்கம் வள்ளுவ
இ) தண்ணீர் தண்ணீர்
ஈ) தமிழன்பன் கவிதைகள்
4. ‘தமிழோவியம்’ என்னும் நூலின் ஆசிரியர்.
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) இன்குலாப்
ஈ) ஈரோடு தமிழன்பன்
5. ‘ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ’ எனப்
புதுப்புது கவிதை வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.
அ) கல்யாண்ஜி
ஆ) பிரியதர்ஷிணி
இ) தமிழன்பன்
ஈ) கந்தர்வன்
6. ஈரோடு தமிழன்பனின் படைப்புத் தளங்கள்
எது?
அ) கவிதை, கட்டுரை
ஆ) புதுக்கவிதை, சிறுகதை
இ) புதுக்கவிதை, புதினம்
ஈ) புதுக்கவிதை, நாவல்
7. உலகத் தாய்மொழி நாள்.
அ) பிப்ரவரி 21
ஆ) மார்ச் 15
இ) ஜீன் 17
ஈ) ஏப்ரல் 22
8. ‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’
எனக் கூறும் நூல்
அ) காக்கைபாடினியம்
ஆ) பிங்கல நிகண்டு
இ) தொன்னூல் விளக்கம்
ஈ) குவலயாணந்தம்
9. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்.
அ) இலங்கை, சிங்கப்பூர்
ஆ) அமெரிக்கா, கனடா
இ) இங்கிலாந்து, பர்மா
ஈ) நார்வே, மலேசியா
10. ‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன்
நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்று கூறியவர்.
அ) கல்யாண்ஜி
ஆ) பிரியதர்ஷிணி
இ) தமிழன்பன்
ஈ) கந்தர்வன்




No comments:
Post a Comment