
நூல்வெளி
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார். வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர். வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.
பனியும் பனி சார்ந்த நிலமும்
சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு. ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலாக ஐந்து நூறு பாடல்கள் கொண்டது. அந்நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை. புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப் பிரதேசங்களுக்குத் தான்.
என்னுடைய கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருந்தது. ஆறுமணிக்குருவியும் இருந்தது. சரியாக காலை ஆறு மணிக்கு இந்தக் குருவி 'கீஈஈஈய்க்' 'கீஈஈஈய்க்' என்று சத்தமிடும். காகத்துக்குப் பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப் பறந்துபோய் மீண்டும் திரும்பும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவிபோல. அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும். ஆம், ஆறாம் திணை
1. கொழும்பில் கலவரம் வந்த ஆண்டு
- 1957
- 1958
- 1959
- 1960
2. அ.முத்துலிங்கம் குறிப்பிடும் ஆறாம் திணை
- காடும் காடு சார்ந்த இடமும்
- மலையும் மலை சார்ந்த இடமும்
- பனியும் பனி சார்ந்த இடமும்
- கடலும் கடல் சார்ந்த இடமும்
3. அ.முத்துலிங்கம் பிறந்த இடம்
- இந்தியா
- பாகிஸ்தான்
- வங்கதேசம்
- இலங்கை
4. ராபின்சன் குருசோ என்ற நூலின் ஆசிரியர்
- பாரதியார்
- டேனியல் டிஃபோ
- சாண்டில்யன்
- சுரதா
5. கடல்புறா நூலின் ஆசிரியர்
- பாரதியார்
- டேனியல் டிஃபோ
- சாண்டில்யன்
- சுரதா
6. ஒரு இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூலை எரித்தால் போதும் என்று குறிப்பிடும் நூல்
- கடல்புறா
- ராபின்சன் குருசோ
- பறவை
- ஃபாரன்ஹீட் 451
7. தமிழர் பாரம்பரிய நாள்
- ஜனவரி 13
- பிப்ரவரி 13
- ஜனவரி 14
- பிப்ரவரி 14
8. ஆறாம் திணையின் ஆசிரியர்
- ஜெயமோகன்
- முத்துராமலிங்கம்
- சி.த.செல்லப்பா
- பிரபஞ்சன்
9. ______ என்னும் சிறுகதை தொகுப்பிற்காக அ.முத்துலிங்கம் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசை பெற்றார்.
- திகட சக்கரம்
- அக்கா
- வடக்குவீதி
- வம்சவிருத்தி
11. கனடாவில் புதிய சாலைக்கு சூட்டப்பட்ட பெயர்
- காவற்புரைச்சாலை
- கூழைக்கடை வீதி
- அகச்சாலை
- வன்னிவீதி
12. அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படும் நாள்
- பிப்ரவரி 13
- பிப்ரவரி 12
- ஜனவரி 12
- ஜனவரி 13
13. பின்வரும் எந்த தினத்துடன் தாய் மண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- சுதந்திர தினம்
- அயலகத் தமிழர் தினம்
- உள்ளாட்சி தினம்
- குடியரசு தினம்




No comments:
Post a Comment