Breaking

Friday, April 3, 2026

9TH TAMIL - எழுத்து - அளபெடை


அளபெடை

அளபெடை என்றால் 'அளபெடுத்தல்' அல்லது நீண்டு ஒலித்தல் என்று பொருள். செய்யுளில் ஓசை குறையும்போதோ அல்லது ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காகவோ ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை ஆகும். இது,  உயிரளபெடை, ஒற்றளபெடை இரண்டு வகைப்படும்:

1. உயிரளபெடை

உயிரளபெடை, செய்யுளிசை அளபெடை,  இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை மூன்று என வகைப்படும்:

செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை): 
  • செய்யுளில் ஓசை குறையும்போது அதை நிறைவு செய்ய அளபெடுப்பது.
  • எடுத்துக்காட்டு: ஓஓதல் வேண்டும், உழாஅர்.
இன்னிசை அளபெடை
  • செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும், இனிய ஓசைக்காகக் குறில் நெடிலாகி அளபெடுப்பது.
  • எடுத்துக்காட்டு: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம்.
சொல்லிசை அளபெடை: 
  • செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது.
  • எடுத்துக்காட்டு: உரனசைஇ (நசை - விருப்பம்; நசைஇ - விரும்பி).
2. ஒற்றளபெடை
  • செய்யுளில் ஓசை குறையும்போது அதை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் (ஒற்றெழுத்துகள்) அளபெடுப்பதே ஒற்றளபெடை ஆகும்.
  • அளபெடுக்கும் எழுத்துகள்: ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் 'ஃ' என்னும் ஆய்த எழுத்தும் (மொத்தம் 11) அளபெடுக்கும்.
  • எடுத்துக்காட்டு: எங்ஙுறை இறைவன், எஃஃகிலங்கிய

No comments:

Post a Comment