Breaking

Saturday, April 4, 2026

9TH TAMIL - புறநானூறு



நூல்வெளி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கத்து இனிது - சிறுபஞ்சமூலம் 64


வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன்
தகுதி கேள்இனி மிகுதி ஆள!

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே ! அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே;
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே! - (புறம் 18:11 – 30)

(பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது)
திணை: பொதுவியல் துறை: முதுமொழிக்காஞ்சி

சொல்லும் பொருளும்
  • யாக்கை - உடம்பு, 
  • புணரியோர் - தந்தவர், 
  • புன்புலம் - புல்லிய நிலம், 
  • தாட்கு - முயற்சி, ஆளுமை; 
  • தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.
இலக்கணக்குறிப்பு
  • மூதூர், நல்லிசை, புன்புலம் - பண்புத்தொகைகள்;
  • நிறுத்தல் - தொழிற்பெயர் ; 
  • அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 
  • நீரும் நிலமும், உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்; 
  • அடு போர் - வினைத்தொகை.
  • கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்.
பகுபத உறுப்பிலக்கணம்

நிறுத்தல் - நிறு + த் + தல்

நிறு - பகுதி
த் - சந்தி
தல் - தொழிற்பெயர் விகுதி

கொடுத்தோர் - கொடு +த் + த் + ஓர்

கொடு - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி


புறநானூறு பொன்மொழிகள்

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189)

யாதும் ஊரே யாவரும் கேளிர் ! ( புறம் – 192 )

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! ( புறம் – 312)

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! ( புறம் – 183 )

குடபுலவியனார்
  • “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்
  • “நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே” என்று பாடிய புலவர் = குடபுலவியனார்

1. ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ என்னும் பாடலடி இடம்பெற்ற இலக்கியம்.

அ) புறநானூறு    

ஆ) மணிமேகலை

இ) திருமந்திரம்    

ஈ) திருக்குறள்

2. ‘நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே’ எனும் அடிகளின் பாடலாசிரியர்.

அ) மாங்குடி மருதனார்  

ஆ) குடபுலவியனார்

இ) காரியாசான்   

ஈ) காக்கைபாடினியார்

3. ‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறியவர்

அ) மாங்குடி மருதனார்  

ஆ) குடபுலவியனார்

இ) காரியாசான்   

ஈ) கபிலர்

4. ‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ எனக் கூறும் நூல்

அ) புறநானூறு    

ஆ) கொன்றைவேந்தன்

இ) திருமந்திரம்    

ஈ) திருக்குறள்

5. ‘கொடுத்தோர்’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அ) பகுதி+விகுதி  

ஆ) பகுதி+இடைநிலை+விகுதி

இ) பகுதி+சந்தி+இடைநிலை+விகுதி

ஈ) பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி

6. ‘குளம்தொட்டுக் கோடு பதித்து’ எனக் கூறும் நூல்.

அ) அகநானூறு   

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை   

ஈ) சிறுபஞ்சமூலம்

7. ‘மல்லல் மூதூர் வயவேந்தே’ இவ்வடியில் ‘மல்லல்’ என்பதன் பொருள்.

அ) மறுமை 

ஆ) பூவரசு 

இ) வளம்  

ஈ) பெரிய

8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.

அ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்.

ஆ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே.

இ) பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்.

ஈ) யாதும் ஊரே யாவரும் கேளிர்.

9. ‘அடுபோர்’ - இலக்கணக் குறிப்பு தருக.

அ) பண்புத்தொகை   

ஆ) வினைத்தொகை

இ) பெயரெச்சம்   

ஈ) எண்ணும்மை

10. பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது.

அ) பதிற்றுப் பத்து   

ஆ) புறநானூறு

இ) பரிபாடல்    

ஈ) கலித்தொகை

No comments:

Post a Comment