
இலக்கணக்குறிப்பு
- கருங்குவளை, செந்நெல் - பண்புத் தொகைகள்.
- விரிமலர் - வினைத்தொகை
- தடவரை - உரிச்சொல் தொடர்
பாய்வன - பாய் + வ் + அன் + அ
பாய் - பகுதி
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி
வளர் முதல் - நெற்பயிர் ;
கழை - கரும்பு ;
ஆடும் - நீராடும் ;
சூடு - நெல் அரிக்கட்டு ;
பகடு - எருமைக்கடா ;
நாளிகேரம் - தென்னை ;
1.
பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) திருத்தொண்டத் தொகை – சுந்தரர்
ஆ) திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி
இ) அற்புத திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்
ஈ) திருத்தொண்டர் புராணம் – சேக்கிழார்
2.
சேக்கிழார் வாழ்ந்த காலம்.
அ) எட்டம் நூற்றாண்டு
ஆ) பத்தாம் நூற்றாண்டு
இ) பன்னிரண்டாம் நூற்றாண்டு
ஈ) பதினாறாம் நூற்றாண்டு
3.
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சேக்கிழாரைப் பாராட்டியவர்.
அ) இரண்டாம் குலோத்துங்கன்
ஆ) சிவப்பிரகாச சுவாமிகள்
இ) மீனாட்சி சுந்தரனார்
ஈ) துரைசாமி பிள்ளை
4.
சேக்கிழார் யாருடைய அரசவையில் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
அ) இரண்டாம் குலோத்துங்கன்
ஆ) சீயகங்கன்
இ) கங்கைகொண்டான்
ஈ) நந்திவர்மன்
5.
‘மாவி ரைத்தெழுந் தார்ப்ப’ எனும் தொடரில் ‘மா’ என்பதன் பொருள்.
அ) பெரிய
ஆ) பசு
இ) வண்டு
ஈ) மரம்
6.
பொருந்தாததைக் கண்டறிக.
அ) வாவி – பொய்கை
ஆ) தரளம் – முத்து
இ) கோடு – குளக்கரை
ஈ) மேதி – பசு
7.
‘பகடு’ என்பதன் பொருள்.
அ) ஆட்டுக்கடா
ஆ) எருமைக்கடா
இ) ஆண் பன்றி
ஈ) ஆண் மான்
8.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) சந்து – சந்தனமரம்
ஆ) கோளி – அரசமரம்
இ) சாலம் – பனைமரம்
ஈ) காஞ்சி – ஆற்றுப் பூவரசு
9.
‘பாய்வன’ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) பகுதி+விகுதி
ஆ)
பகுதி+இடைநிலை+விகுதி
இ) பகுதி+சந்தி+இடைநிலை+விகுதி
ஈ) பகுதி+இடைநிலை+சாரியை+விகுதி
10.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) வேரி – தேன்
ஆ) மாடு – பக்கம்
இ) கழை – கரும்பு
ஈ) சூடு – சங்கு




No comments:
Post a Comment