மொழி முதல் எழுத்துக்கள்
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
- க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
- ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- நுனம்(இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
- ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
- மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.
- ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.
No comments:
Post a Comment