Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 1, 2021

10th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 3

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்


1. உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப்
புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.

பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள்
அமைக்கப்பட்டன. கோவில் தூண்கள் சிற்பங்களால் அழகு பெறுகின்றன.

தூண்களில் யாளி, சிங்கம், தாமரைமலர், நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த வட்டங்கள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள், நுழைவுவாயில்கள் என அனைத்து இடங்களிலும் சிற்பங்கள் மிளிர்வதைக் காணமுடியும். பல்லவர் காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச்சிறந்த சான்றுகளாகும். கடற்கரையில் காணப்பட்ட பெரும்பாறைகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இயல்புப் புணர்ச்சி

* தாமரை மலர்
* நுழைவு வாயில்கள்

விகாரப்புணர்ச்சி

* கருங்கல்
* கற்றூண்கள்
* சுற்றுச்சுவர்கள்
* சிற்பக்கலை
* கடற்கரை
* பற்பல

2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு அட்டவணையை நிரப்புக.

(எட்டுத்தொகை, மரவேர், கற்சிலை, மட்குடம், அகநானூறு, பத்துப்பாட்டு, பற்பொடி,
பூங்கொடி, நிலமங்கை).

தோன்றல்

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பூங்கொடி

திரிதல்

கற்சிலை
பற்பொடி
மட்குடம்

கெடுதல்

மரவேர்
அகநானூறு
நிலமங்கை

No comments:

Post a Comment