மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
1. பழமொழிக்கான பொருள் எழுதுக. (ஊருடன் ஒத்து வாழ்.)
நாம் வாழும் ஊர் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.
2. பழமொழியைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
அ ) பதறாத காரியம் சிதறாது
பதறாத காரியம் சிதறாது என்பதற்கேற்ப நிதானமாகச் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும்.
ஆ) ஒரு கை தட்டினால் ஓசை வராது.
ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதைப்போல் நம்மிடையே ஒற்றுமை இல்லையேல் உயர்வில்லை.
3. பழமொழியை நிறைவு செய்க.
அ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து
ஆ)சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
இ) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
4. மரபுத்தொடர்களுக்கான பொருளை எழுதுக.
அ) எட்டாக்கனி - கிடைக்காத ஒன்று
ஆ) உடும்புப் பிடி - தீவிரப்பற்று , விடாப்பிடி
இ) கிணற்றுத் தவளை - உலக ஞானம் அறியாதது.
5. மரபுத் தொடர்களைச்சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ)ஆகாயத்தாமரை
ஆகாயத்தாமரையைப் பறித்துக் காட்டுவேன் என்று சொல்பவரை ஒரு காலமும் நம்பக் கூடாது.
ஆ) முதலைக் கண்ணீர்
திருடன் காவலர்களால் பிடிபட்டதும் முதலைக் கண்ணீர் வடித்தான்.
6. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
அ) வீட்டின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
வீட்டின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
ஆ) கயல் பானை செய்யக் கற்றுக்கொண்டாள்.
கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.
7. செய்யுள் தொடர்கள் உணர்த்தும் பொருளை எழுதுக.
அ)உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம்-18).
பசித்தோருக்கு உணவு அளிப்பவரே உயிர் கொடுத்தவராவார்.
ஆ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே! (புறம்-189),
உண்பது படி அளவு உணவு
உடுப்பது மேலாடை , கீழாடை எனும் இரண்டே .
இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம்-192).
எல்லா ஊரும் எங்கள் ஊரே
எல்லா மக்களும் எங்கள் உறவினரே
No comments:
Post a Comment