மதிப்பீடு
1. முத்தமிழ் தொகைச்சொல்லை விளக்குக.
முத்தமிழ் - மூன்று + தமிழ்
* இயற்றமிழ்
* இசைத்தமிழ்
* நாடகத்தமிழ்
இயற்றமிழ் : இயல்பாக எழுதப்படுவதும் , பேசப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.
சான்று : இருவகை வழக்கிலும் உள்ள செய்யுளும் , வசனமும் அடங்கிய நூல்களின் தொகுதி.
இசைத்தமிழ் : பண்ணோடு கலந்தும் , தாளத்தோடு கூடியும் இசைக்கப்படுவது இசைத்தமிழ் ஆகும்.
சான்று :
பண்களால் ஆகிய பாடல்கள் கீர்த்தனங்கள் , வரிப்பாட்டு , சிந்து , ஆனந்தக் களிப்பு , கும்மி , தெம்மாங்கு .
நாடகத் தமிழ் :
இயற்றமிழும் , இசைத்தமிழும் கலக்க நாடகத் தமிழ் பிறக்கும்.
சான்று : மனோன்மணியம்
2. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?
எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பர்.
எட்டுத்தொகை நூல்கள் :
1 ) நற்றிணை
2 ) குறுந்தொகை
3 ) ஐங்குறுநூறு
4 ) பதிற்றுப்பத்து
5 ) பரிபாடல்
6 ) கலித்தொகை
7 ) அகநானூறு
8 ) புறநானூறு
பத்துப்பாட்டு
1 ) திருமுருகாற்றுப்படை
2 ) பொருநராற்றுப்படை
3 ) சிறுபாணாற்றுப்படை
4 ) பெரும்பாணாற்றுப்படை
5 ) முல்லைப்பாட்டு
6 ) மதுரைக்காஞ்சி
7 ) நெடுநல்வாடை
8 ) குறிஞ்சிப்பபாட்டு
9 ) பட்டினப்பாலை
10) மலைபடுகடாம்
3. ஐம்பெருங்காப்பியங்களைக் கூறுக.
1 ) சிலப்பதிகாரம்
2 ) மணிமேகலை
3 ) குண்டலகேசி
4 ) வளையாபதி
5 ) சீவகசிந்தாமணி
4. பாரதியின் படைப்புகளைப் பட்டியலிடுக.
* பாஞ்சாலி சபதம்
* பாப்பா பாட்டு
* கண்ணன் பாட்டு
* குயில் பாட்டு மற்றும் பல.
No comments:
Post a Comment