கற்றல் விளைவுகள்
* ஐந்திலக்கணங்களைப் பற்றி அறியச் செய்தல்.
* மொழியில் எழுத்துகளின் ஒலிவடிவம், வரிவடிவம் பற்றி அறிதல்.
* சொல்லாக்க விதிமுறைகளை அறிந்து புதிய சொற்களை உருவாக்குதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களே! தெருவில் வியாபாரிகள் பூ, பழம், கீரை போன்றவற்றை எவ்வாறு கூவி விற்பார்கள்? என்று ஆசிரியர் வினவ அதற்கான விடைகளை மாணவர்களிடமிருந்து வரவழைத்து
ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
இலக்கணம் :
மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம். மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும். அவ்விலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி என்பனவாகும்.
அளபெடை
* அளபெடை = அளபு + எடை
* அளபு - அளவு ( மாத்திரை )
* எடை - எடுத்தல்
* அளபெடுத்தல் - நீண்டு ஒலித்தல்
உயிரளபெடை :
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் சொல்லின் முதல் , இடை , கடை , ஆகிய மூன்று இடங்களிலும் அளபெடுப்பது உயிரளபெடை ஆகும்.
செயல்பாடு : 2
ஒற்றளபெடை :
ஒற்றெழுத்துகளைக் ( மெய்யெழுத்து , ஆய்தம் ) கொண்டு ஓசையை நிறைவு செய்வது ஒற்றளபெடை
ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் ஆகிய பத்து மெய்களும் , ஆய்த எழுத்து ( ஃ ) ஒன்றும் ஆக 11 எழுத்துகள் ஒற்றளபெடையில் அளபெடுக்கும்.
சான்று :
* எஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்
* கண்ண் கருவிளை
செயல்பாடு : 3
சொல் என்பதன் வரையறை :
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல்லாகும். அவை,
* இருதிணை ஐம்பால்களைக் குறிக்கும்.
*மூவகை இடங்களில் வரும்.
* உலக வழக்கு செய்யுள் வழக்கிலும் வரும்.
* வெளிப்படையாகவும் குறிப்பாகவும் வரும்.
தொழிற்பெயர் :
ஒரு வினையை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைவெளிப்படையாகவோ குறிப்பாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
சான்று :
* கொடுத்தல், நடத்தல், ஈதல்.
விகுதி பெற்ற தொழிற்பெயர் :
வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
வினையடி விகுதி தொழிற்பெயர்
சமை தல் சமைத்தல்
வாழ் கை வாழ்க்கை
ஆள் அல் ஆளல்
எதிர்மறைத் தொழிற்பெயர் :
எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.
சான்று :
* சொல்லாமை, நடவாமை.
மாணவர் செயல்பாடு
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்தல். ஒரு குழு ஒரு சொல்லைக் கூற மற்றொரு குழு அவற்றிற்குரிய சரியான அளபெடை, தொழிற்பெயர்களை குறிப்பேட்டில் எழுதச் செய்தல்.
*********** *********** *********
மதிப்பீடு
1. உயிரளபெடை என்றால் என்ன?
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் சொல்லின் முதல் , இடை , கடை , ஆகிய மூன்று இடங்களிலும் அளபெடுப்பது உயிரளபெடை ஆகும்.
சான்று :
ஓஒதல் வேண்டும் - முதல்
கெடுப்பதூஉம் - இடை
நல்ல படாஅ பறை - கடை
2. 'உரனசைஇ' - இவற்றிற்குரிய அளபெடை யாது ?
உரனசைஇ - சொல்லிசை அளபெடை
No comments:
Post a Comment