Breaking

Thursday, March 26, 2026

6TH TAMIL - தமிழர் பெருவிழா



தெரிந்து தெளிவோம்

தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.


தெரிந்து தெளிவோம்

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

தெரிந்து தெளிவோம்

திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2018 + 31 - 2049

தெரிந்து தெளிவோம்

அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது. குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

சரியான விடையைத் தேர்ந்தெடு


1. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

அ) பொங்கல் விழா
ஆ) தமிழர் திருநாள்
இ) விதைத்தல் திருவிழா
ஈ) அறுவடைத் திருவிழா

2. பழையன கழிதலும் புதியன புகுதலும் எனக் கூறும் நூல்

அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) தொன்னூல் விளக்கம்

3. வீட்டைத் துய்மை செய்யும் நாள்.

அ) போகித் திருநாள்
ஆ) பொங்கல் திருநாள்
இ) மாட்டுப் பொங்கல்
ஈ) காணும் பொங்கல்

4. பொங்கல் என்பதன் பொருள்

அ) பச்சரிசி சாதம்
ஆ) பொங்கிப் பெருகி வருதல்
இ) இது ஒரு பண்டிகை
ஈ) பூரித்தல்

5. மாடு என்ற சொல்லின் பொருள்

அ) விலங்கு
ஆ) செல்வம்
இ) மாண்புடையது
ஈ) ஏசல் மொழி

6. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

அ) ஜல்லிக்கட்டு
ஆ) மாடு விரட்டல்
இ) ஏறு தழுவுதல்
ஈ) மாடு பிடித்தல்

7. அந்தக் காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்ட பண்டிகை

அ) போகித் திருநாள்
ஆ) பொங்கல் திருநாள்
இ) மாட்டுப் பொங்கல்
ஈ) காணும் பொங்கல்

8. கதிர் முற்றியதும் -------- செய்வர்.

அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்

9. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் --------- கட்டுவர்.

அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு

10. பொங்கல் +அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பொங்கலன்று
இ) பொங்கலென்று
ஆ)பொங்கல் அன்று
ஈ) பொங்கஅன்று

11. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) போகி + பண்டிகை
ஆ) போ + பண்டிகை
இ) போகு + பண்டிகை
ஈ) போகிப் + பண்டிகை

12. பழையன கழிதலும் --------- புகுதலும்.

அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான

13. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ------------ தரும்.

அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு

14. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக - மகா சங்கராந்தி

அ) தெலுங்கானா
ஆ) கர்நாடகம்
இ) பஞ்சாப்
ஈ) மராட்டியம்

No comments:

Post a Comment