
தெரிந்து தெளிவோம்
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே. - ஒளவையார்
தெரிந்து தெளிவோம்
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே - ஔவையார்
1. அதியமான் ஔவையாருக்குக் கொடுத்த நெல்லிக் கனியின் பெயர்
அ) அருநெல்லி
ஆ) கருநெல்லி
இ) சிறுநெல்லி
ஈ) பெருநெல்லி
2. ஔவையார் யாரக்காகத் தூது சென்றார்.
அ) தொண்டைமான்
ஆ) அதியமான்
இ) இளங்கிள்ளி
ஈ) முதுகிள்ளி
3. ஔவையார் யாரிடம் தூது சென்றார்.
அ) தொண்டைமான்
ஆ) அதியமான்
இ) இளங்கிள்ளி
ஈ) முதுகிள்ளி
4. இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி எனப் பாடியவர்
அ) பெருங்குன்றூர் கிழார்
ஆ) ஔவையார்
இ) காக்கைபாடினியார்
ஈ) நப்பச்சொள்ளையார்
5. இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன் - இவ்வடிகளில் பயின்று வந்திருப்பது
அ) எதுகை, மோனை
ஆ) எதுகை, இயைபு
இ) மோனை, இயைபு
ஈ) அனைத்தும்




No comments:
Post a Comment