மொழி இறுதியில் வரும் எழுத்துகள்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
• உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
• ஞ், ண், ந், ம், ய்,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)
மொழி இறுதியில் வாரா எழுத்துகள்
• சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
• உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
• அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
• ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
• க், ங், ச், ட்,த்,ப்,ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும். வருவதில்லை.
• உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
* எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
• நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் = துன்பம்.
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
- மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
- உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை
கூற்று 2 உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்றுகள் இரண்டும் சரி
ஈ) கூற்றுகள் இரண்டும தவறு
2. மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதிமூன்று
3. மொழி இறுதியில் வாரா மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதிமூன்று
4. மொழி இறுதியில் வாரா எழுத்து,
அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து
5. உயிர்மெய் எழுத்துகளுள் எந்த வரிசை எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரது.
அ) ங
ஆ) ட
இ) ழ
ஈ) ற
6. நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
அ) இல்லை
ஆ) துன்பம்
இ) நொண்டு
ஈ) நண்டு
7. உயிர் எழுத்தின் எந்த வரிசை எழுத்துகள் மொழி இறுதியில் வருதல் இல்லை.
அ) உ வரிசை எழுத்துகள்
ஆ) எ வரிசை எழுத்துகள்
இ) ஒ வரிசை எழுத்துகள்
ஈ) இ வரிசை எழுத்துகள்
8. சொல்லின் நடுவில் மட்டுமே வரும் எழுத்து
அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து
9. அளபெடையில் மட்டும் சொல்லின் இடையில் வரும் எழுத்து
அ) உயிர் எழுத்து
ஆ) உயிர்மெய் எழுத்து
இ) மெய் எழுத்து
ஈ) ஆய்த எழுத்து
10. மொழி இடையில் வரும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
அ) ஏழு
ஆ) பதினொன்று
இ) பதினாறு
ஈ) பதினெட்டு




No comments:
Post a Comment