நூல் வெளி
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்,
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,
ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்
முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்,
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் - முடியரசன்
- மல்வெடுத்த - வலிமைபெற்ற
- சமர் – போர்
- நல்கும் - தரும்
- கழனி - வயல்
- மறம் - வீரம்
- எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
- கலம் - கப்பல்
- ஆழி – கடல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) துரை மாணிக்கம்
ஆ) தென்னரசு
இ) துரைராசு
ஈ)
2. கீழ்க்கண்டவற்றுள் முடியரசன் நூல்கள் அல்லாத ஒன்று
3. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
அ) துரை மாணிக்கம்
ஆ) தென்னரசு
இ) துரைராசு
ஈ)
4. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை எனத் தொடங்கும் பாடல் அமைந்த நூல்.
அ) பூங்கொடி
ஆ) வீரகாவியம்
இ) புதியதொரு விதி செய்வோம்
ஈ) காவியப்பாவை
5 பொருத்துக
அ) சமர் - 1. வயல்
ஆ) கழனி - 2. போர்
இ) மறம் - 3. கப்பல்
இ) மறம் - 3. கப்பல்
ஈ) கலம் - 4. வீரம்
அ) 3 4 2 1
ஆ) 2 1 4 3
இ) 2 3 4 1
ஈ) 3 1 4 2
6. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்.
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை
7. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து
8. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்
9. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடு என்ற
ஈ) தாடுஅன்ற
10. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்..
அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி




No comments:
Post a Comment