Breaking

Thursday, March 26, 2026

6TH TAMIL - கடலோடு விளையாடு




விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா
அடிக்கும்அலை நம்தோழன் - ஐலசா
அருமைமேகம் நமதுகுடை - ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
விண்ணின்இடி காணும்கூத்து - ஐலசா
*பாயும்புயல் நம் ஊஞ்சல் - ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
காயும்கதிர்ச் சுடர்கூரை - ஐலசா
கட்டுமரம் வாழும்வீடு - ஐலசா
மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா
பிடிக்கும்மீன்கள் தம்பொருள்கள் - ஐசோ
முழுநிலவே கண்ணாடி - ஐலசா
மூச்சடக்கும்நீச்சல் யோகம் - ஐலசா
தொழும்தலைவன் பெருவானம் - ஐலசா
துணிவோடு தொழில்செய்வோம் - ஐலசா"

சொல்லும் பொருளும்

கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
மின்னல்வரி - மின்னல் கோடு
அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்

தெரிந்து தெளிவோம்

நெய்தல் திணை
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதவர், பரத்தியர்
தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ


சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கதிர்ச்+சுடர்
இ) கதிரவன்+சுடர்
ஆ) சதிரின்+கடர்
ஈ) கதிர்+சுடர்

2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மூச்சு+அடக்கி
இ) மூச்+சடச்சி
ஆ) முச்+அடக்கி
ஈ) மூச்சை+அடக்கி

3. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்

4. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை

5. பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு

அ)  4 1 2 3
ஆ) 4 1 3 2
இ) 2 1 4 3
ஈ)  2 1 4 3

No comments:

Post a Comment