Breaking

Saturday, March 28, 2026

6TH TAMIL - வளரும் வணிகம்



பாடக்குறிப்புகள்
  • பொருளை விற்பவர் = வணிகர்.
  • பொருளை வாங்குபவர் = நுகர்வோர்.
  • நம்மிடம் இருக்கும் பொருளைக் கொடுத்துவிட்டு, பிறரிடம் இருக்கும் பொருட்களைப் பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும்.
  • நெல்லைக்குப் பதிலாக உப்பைப் பெற்றச் செய்தியும் (நற்றிணை 183) ஆட்டுப் பாலுக்குப் பதிலாக தானியங்கள் பெற்ற செய்தியும் (குறுந்தொகை 221) பொன்னுக்குப் பதிலாக மிளகு (கறி) வாங்கிச் சென்ற செய்தியும் (அகநானூறு - 149) செய்தியும்  சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
  • வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர் வழி வணிகம் எனப் பிரிக்கலாம்.
  • தரைவழியாகப் பொருட்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரைகளைப் பயன்படுத்தினர்.
  • வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.
  • கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்.
  • கடல் வழியாக கப்பல்கள் மூலம் பொருட்களை அனுப்புவரும் வரவழைப்பதும் நீர்வழி வணிகமாகும்.
  • கல்பல்கள் வந்து நிற்கும் இடத்திற்கு துறைமுகங்கள் என்று பெயர்
  • துறைமுக நகரங்களைப் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.
  • தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது.
  • வணிகத்தைத் தனிநபர் வணிகம் நிறுவன வணிகம் எனப் பிரிக்கலாம்.
  • தனி நபரால் உருகாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம்.
  • ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது நிறுவன வணிகம்.
  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
  • சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவையும் அரேபியாவில் இருந்து குதிரைகளும் வாங்கப்பட்டன.
வணிகத்தில் நேர்மை

வணிகர்கள் பொருளை வாங்கும்போதும் உரிய அளவைவிட வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் போதும் அளவைக் குறைத்து கொடுக்கமாட்டார்கள். இச்செய்தியினை கீழ்க்கண்ட இலக்கியச் சான்றுகள் பறைசாற்றுகின்றன.

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்  
பிறவும் தமபோல் செயின்”  (குறள் 120) 

என வணிகரின் நேர்மையைத் திருக்குறளும், பொருளை வாங்கும்போதும் உரிய அளவைவிட வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் போதும் அளவைக் குறைத்து கொடுக்கமாட்டார்கள் என்ற செய்தியை, 

“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” - பட்டினப்பாலை

கொள்வதும் மிகை கொளாது 
கொடுப்பதும் குறைபடாது - பட்டினப்பாலை

எனப் பட்டினப்பாலையும் கூறுகின்றன.

வணிகரை என்று பாராட்டி கூறும் நூல் = பட்டினப்பாலை.
“கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = பட்டினப்பாலை.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.  வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்

அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி

2. வணிகம்+சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வணிகசாத்து
ஆ)வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து

3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று

4. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மின் + னணு
ஆ) மின்ன + அணு
இ) மின்னல் + அணு
ஈ) மின் + அணு

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) விரி+வடைந்த
ஆ) விரி+அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ்+அடைந்த

6. அந்தக் காலத்தில் இருந்த வணிக முறை

அ) வியாபாரம்
ஆ) பண்ட மாற்றுமுறை
இ) பணம் கொடுத்து வாங்குவது
ஈ) மின்னணுப் பரிமாற்றம்

7. வணிகச் சாத்து என்பது

அ) பொருள்களை வெளியூருக்குக் குழுவாக எடுத்துச் செல்லல்
ஆ) கடல் வழியாகப் பொருட்களை எடுத்துச் செல்லல்
இ) தரைவழியாகப் பொருட்களை எடுத்துச் செல்லல்
ஈ) இவை அனைத்தும்

8. தமிழ்நாட்டில் தலைசிறந்த துறைமுகமாக விளங்கியது

அ) தொண்டி
ஆ) முசிறி
இ) பூம்புகார்
ஈ) தூத்துக்குடி

9. அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை

அ) கழுதைகள்
ஆ) குதிரைகள்
இ) எருதுகள்
ஈ) எருமைகள்

10. வணிகத்தில் நடுவு நிலைப் பற்றிக் கூறும் நூல்

அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) பட்டினப்பாலை
ஈ) பரிபாடல்

No comments:

Post a Comment