Breaking

Sunday, March 29, 2026

6TH TAMIL - இன எழுத்துகள்



இன எழுத்துகள்
  • சில எழுத்துகளுக்கு இடையே “ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம்” ஆகியவற்றில் ஒற்றுமையுண்டு.
  • இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்களை “இன எழுத்துகள்” என்பர்.
  • ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
  • சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
  • இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.
  • மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
  • உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
  • குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும்.
  • ஒள என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
  • அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
  • தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

No comments:

Post a Comment