Breaking

Monday, March 30, 2026

6TH TAMIL - பாரதம் அன்றைய நாற்றங்கால்




நூல் வெளி
தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.


துமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு
மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்)

காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க
கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்
கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்)

கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்)

*புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்)

அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள்பசிதீர
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு வாசலிது!* - தாராபாரதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தாராபாரதியின் இயற்பெயர்

அ) இராமகிருஷ்ணன்
ஆ) இராதாகிருஷ்ணன்
இ) அரிகிருஷ்ணன்
ஈ) முத்துக்கிருஷ்ணன்

2. கவிஞாயிறு என்னும் அடைமொழியால் குறிக்கப்படுபவர்

அ) தாரா பாரதி
ஆ) தேவநேயபாவாணர்
இ) வாணிதாசனார்
ஈ) பெருஞ்சித்திரனார்

3. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு -  தாராபாரதி

அ) புதிய விடியல்கள்
ஆ) கால்முளைத்த கதை
இ) இது எங்கள் கிழக்கு
ஈ) விரல் நுனி வெளிக்கங்கள்

4. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை

5. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ) கங்கைச்கரை
ஈ) யமுனைக்கரை

6. கலைக்கூடமாகக் காட்சி தருவது

அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்

7. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நூல்+ஆடை
ஆ) நூலா+டை
இ) நூல் + லாடை
ஈ) நூலா + ஆட

8. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க

No comments:

Post a Comment