Breaking

Monday, March 30, 2026

6TH TAMIL - பாஞ்சை வளம்


நூல் வெளி 

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.


சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை
துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்

நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் - பாஞ்சைக்
கோட்டை வளங்களைக் கேளுமையா
கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் - மதில்
கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்

வீட்டிலுயர் மணிமேடைகளாம் - மெத்தை
வீடுகளா மதிலோடை களாம்
பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் - பணப்
பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்

ஆசார வாசல் அலங்காரம் - துரை
ராசன் கட்டபொம்மு சிங்காரம்
ராசாதி ராசன் அரண்மனையில் - பாஞ்சை
நாட்டரசன் கொலுவீற்றிருந்தான்.

விந்தையாகத் தெருவீதிகளும் - வெகு
விஸ்தாரமாய்க் கடை வாசல்களும்
நந்தவனங்களும் சந்தனச் சோலையும் - அங்கே
நதியும் செந்நெல் கமுகுகளும்,

வாரணச் சாலை ஒருபுறமாம் - பரி
வளரும் சாலை ஒருபுறமாம்
தோரண மேடை ஒருபுறமாம் - தெருச்
சொக்கட்டான் சாரியல்ஓர் புறமாம்

சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் - வளம்
சொல்லி மயில் விளையாடிடுமாம்
அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் - சில
அதிசயம் சொல்கிறேன் கேளுமையா

முயலும் நாயை விரட்டிடுமாம் - நல்ல
முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே
பசுவும் புலியும் ஒரு துறையில் - வந்து
பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்.

கறந்த பாலையுங் காகங் குடியாது - எங்கள்
கட்டபொம்மு துரை பேரு சொன்னால்
வரந்தருவாளே சக்க தேவி - திரு
வாக்கருள் செய்வாளே சக்க தேவி


சொல்லும் பொருளும்

  • சூரன் – வீரன்
  • வாரணம் – யானை
  • பொக்கிஷம் – செல்வம்
  • பரி – குதிரை
  • சாஸ்தி – மிகுதி
  • சிங்காரம் – அழகு
  • விஸ்தாரம் – பெரும்பரப்பு
  • கமுகு – பாக்கு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் ஆசிரியர்

அ) நா. வானமாமலை
ஆ) அ. கா. பெருமாள்
இ) ஆ. சிவசுப்பிரமணியன்
ஈ) ஆறு. இராமநாதன்

2. சுத்த வீர சூரன் என்று நா. வானமாமலை யாரைக் குறிபிடுகிறார்

அ) மருது சகோதரர்கள்
ஆ) கட்ட பொம்மன்
இ) ஊமைத்துரை
ஈ) பூலித்தேவன்

3. ஊர்வலத்தின் முன்னால் ------ அசைந்து வந்தது.

அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்

4. பாஞ்சாலங்குறிச்சியில் -------- நாயை விரட்டிடும்.

அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி

5. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ________

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடிவீடு

6. ‘பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்

7. “தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஒடை
ஈ) தோரணம் + ஓடை

8. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) வாசல்அவங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்

9. பாஞ்சாலங் குறிச்சிக்கு திரு வாக்கு அருள்பவள்

அ) இராணி மங்கம்மாள்
ஆ) சக்கமாதேவி
இ) வேலு நாச்சியார்
ஈ) ஜான்சிராணி

10. பொருத்தி விடை காண்க

பொக்கிஷம் - அழகு
சாஸ்தி - செல்வம்
விஸ்தாரம் - மிகுதி
சிங்காரம் - பெரும்பரப்பு

அ) 2 3 4 1
ஆ) 2 4 3 1
இ) 4 2 1 3
ஈ) 2 1 4 3

No comments:

Post a Comment