
- காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார்.
- எளிமையை ஓர் அறமாகப் போற்றினார்.
- இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை.
- காந்தியடிகள் சென்னை வந்த ஆண்டு = 1919.
- காந்தியடிகள் 1919 இல் சென்னை வந்ததன் காரணம் = ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராட
- ரௌலட் சட்ட எதிர்ப்பு கருத்தாய்வு கூட்டம் யாருடைய வீட்டில் நடைபெற்றது = இராஜாஜி வீட்டில்.
- இராஜாஜி வீட்டில் காந்தியடிகளை சந்திக்க வந்தவர் = பாரதியார்.
- தான் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க காந்தியடிகளை கேட்டுக் கொண்டார் பாரதியார்.
- வேறு பனி இருப்பதால் தன்னால் கலந்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் காந்தி.
- இராஜாஜி, காந்தியடிகளிடம் பாரதியாரை பற்றி “இவர் தான் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறினார்.
- “பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்” என்று ராஜாஜியிடம் கூறினார் காந்தியடிகள்.
- 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காந்தியடிகள் மதுரைக்கு வந்த பொழுது மக்களின் ஆடைகளைக் கண்டு, அன்று முதல் தானும் ஒரு வேட்டியும் துண்டும் மட்டும் அணியப் போவதாக முடிவு செய்து அதன் படி நடந்தார்.
- காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் = மதுரை
- காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்த பொழுது கானாடுகாத்தான் என்னும் ஊரில் உள்ள அன்பர் ஒருவரில் இல்லத்தில் தங்கினார்.
- ஆடம்பரமாக இருந்த அவ்வீட்டின் உரிமையாளரிடம் “வீட்டை அழகு செய்ய செலவிட்ட தொகையில் ஒரு பகுதியை என்னிடம் கொடுத்து இருந்தால் இதை விட அழகாக செய்து இருப்பேன்” என்று கூறினார்.
- காந்தியடிகள் மீண்டும் அவ்வீட்டிற்கு வந்த பொழுது, வீட்டில் இருந்து வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் எதுவும் அங்கு இல்லை.
- காந்தியடிகள் மதுரைக்கு வந்த பொழுது, சிலர் அவரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருமாறு அழைத்தனர்.
- மீனாட்சியம்மன் கோவிலில் அனைவர்க்கும் அனுமதி உண்டா எனக் கேட்டார் காந்தியடிகள். இல்லை எனத் தெரிவித்தனர் அவர்கள்.
- கோவிலில் அனைவர்க்கும் அனுமதி அளித்தால் மட்டுமே வருவேன் எனக்கூறி மறுத்து விட்டார்.
- சில காலங்களுக்கு பிறகு கோவிலில் அனைவர்க்கும் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்ட பொழுது தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார் காந்தியடிகள்.
- காந்தியடிகள் எங்கிருந்த பொழுது தமிழை கற்கத் துவங்கினார் = தென் ஆப்ரிக்காவில் இருந்த பொழுது.
- ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
- காந்தியடிகளை பெரிதும் கவர்ந்த நூல் = திருக்குறள்.
- காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1937.
- காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம் = சென்னை.
- காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் = உ.வே.சாமிநாதர்.
- உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.
- காந்தியடிகள் உ.வே.சா அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
1. தமிழ்நாட்டில் காந்தியடிகளுக்கு அருங்காட்சியம் அமைந்துள்ள இடம்.
அ) சென்னை
ஆ) மதுரை
இ) செங்கோட்டை
ஈ) கரூர்
2. பாரதியாரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்று கூறியவர்.
அ) இராஜாஜி
ஆ) காந்தியடிகள்
இ) அண்ணா
ஈ) காமராஜர்
அ) 1910
ஆ) 1911
இ) 1919
ஈ) 1920
4. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
5. காந்தியடிகளைக் கவர்ந்த நூல்
அ) நாலடியார்
ஆ) திருக்குறள்
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) ஆசாரக்கோவை
6. 1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம்
அ) சென்னை
ஆ) மதுரை
இ) திருச்சி
ஈ) இராமநாதபுரம்
7. காந்தியடிகள் ----------- அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) பாரதிதாசன்
இ) உ.வே.சாமிநாதர்
ஈ) பாரதியார்
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) பாரதிதாசன்
இ) உ.வே.சாமிநாதர்
ஈ) பாரதியார்




No comments:
Post a Comment