
- இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.
- தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.
- சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.
- சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
- காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.
- வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார்.
- திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.
- "நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது" என்றார் சின்ன மருது.
- 'என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில், எனவே, தாம் முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம்
- பிறகு சிவகங்கையை மீட்போம்" என்றார் வேலு நாச்சியார்.
- மறுநாள் காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது.
- ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும்
- பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர்.
- 'விசயதசமி தாளில் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.
- நமது பெண்கள் படைப்பிரிவினர் கூடைகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றுடன் ஆயுதங்களையும் மறைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லட்டும்.
- உள்ளே அவர்கள் தாக்குதலைத் தொடங்கியதும் நமது ஆண்கள் படைப்பிரிவினரும் கோட்டைக்குள் நுழைந்து தாக்கட்டும். ஆங்கிலேயரை விரட்டியடித்து விடவாம்" என்றார் வேலுநாச்சியார்.
சரியான விடையைத் தேர்வு செய்க
1. வேலுநாச்சியாரின் தந்தை பெயர்
அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்
2. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்
அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்
3. வேலுநாச்சியாரின் கணவர் பெயர்
அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்
4. சிவகங்கையை ஆட்சி செய்த மன்னர்
அ) முத்துவடுகர்
ஆ) செல்லமுத்து
இ) தாண்டவராயர்
ஈ) காங்கேயன்
5. முத்துவடுகரை ஆங்கிலேயர்கள் கொன்ற இடம்
அ) சிவகங்கை
ஆ) காளையார்கோவில்
இ) இராமநாதபுரம்
ஈ) நாட்டரசன்கோட்டை
6. ஐதர் அலி வேலுநாச்சியாருக்கு அனுப்பிய படை.
அ) காலாட்படை
ஆ) குதிரைப்படை
இ) யானைப்படை
ஈ) தூசுப்படை
6. ஐதர் அலி வேலுநாச்சியாருக்கு எவ்வளவு குதிரைப் படை. அனுப்பினார்
அ) இரண்டாயிரம்
ஆ) ஐயாயிரம்
இ) பத்தாயிரம்
ஈ) ஐம்பராயிரம்
7. வேலுநாச்சியார் ஆங்கிலேயரைத் தோற்கடித்து முதன் முதலில் கைப்பற்றியது.
அ) சிவகங்கை
ஆ) காளையார்கோவில்
இ) இராமநாதபுரம்
ஈ) நாட்டரசன்கோட்டை
8. ஆங்கிலேயரால் கொள்ளப்பட்ட பெண்
அ) குயிலி
ஆ) உடையாள்
இ) விஜயலட்சுமி
ஈ) மணிமேகலை
9. ஆங்கிலேயரின் ஆய்தக் கிடங்கில் குதித்து தன் இன்னுயிரை மாய்த்துத் கொண்டவர்.
அ) குயிலி
ஆ) உடையாள்
இ) விஜயலட்சுமி
ஈ) மணிமேகலை
10. வேலுநாச்சியார் யாருக்காக நடுகல் வைத்தார்
அ) குயிலி
ஆ) உடையாள்
இ) விஜயலட்சுமி
ஈ) மணிமேகலை
11. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
அ) 1780
ஆ) 1870
இ) 1880
ஈ) 1796




No comments:
Post a Comment