Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 5, 2021

10th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 -2022 - செயல்பாடு 13 Answer Key


1.       மரங்களால் மனிதன் பெறும் அடிப்படைத் தேவைகளைக் குறிப்பிடுக.

ஒரு மனிதனின்தேவைக்கான நீர், காற்று, உணவு, உடை, உறைவிடம் ஆகிய அனைத்தையும் தருவன மரங்களே

2.       பத்தியில் இடம்பெற்றுள்ள உருவகத்தொடர் அல்லாததைக் கண்டறிக.

அ)       முகிற்கலைஞன்                                ஆ)      நதிப்பெண்   

இ)       உயிர்மரங்கள்                                   ஈ)        மரவுரி

 

3.       மரம் நமக்கு வழங்குவன யாவை?

இலை, பூ, காய், பழம், வேர், மரவுரி, கிளை, வாசனையுள்ள பிசின், பொடி, தளிர் போன்றவற்றை வரையின்றி வழங்கி மனித வாழ்வில் மகத்தான இடத்தைப் பிடிக்கின்றன.

4.       எல்லா உயிர்களுக்கும் உயிராக மரங்கள் விளங்குகின்றன- எவ்வாறு?

Ø  மரங்கள் ஒரு மனிதனின்தேவைக்கான நீர், காற்று, உணவு, உடை, உறைவிடம் ஆகிய அனைத்தையும் தருகின்றன.

Ø  நிழல் தருவதோடு, விலங்குகள் உண்ணுவதற்கும் விவசாயம் மேம்படுவதற்கும் தழைகளைத் தருகின்றன.

Ø  மழையையும் குளிர்காற்றையும் மக்கள் உடல்நலம் பேணும் மருந்துகளையும் விறகுகளையும் மரங்கள் தருகின்றன.

Ø  காற்று, மழை, வெயில், பனி ஆகியவற்றைச் தாங்கிக் கொண்டு நம்மைக் காப்பாற்றுகின்றன. எனவே, எல்லா உயிர்களுக்கும் உயிர் மரங்களே! என்று உறுதியாகக் கூறலாம்.

5.       பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து உரையாடலை நீட்டித்து எழுதுக.

 மலர்விழி :    சுற்றுச்சூழலுக்கு மரங்கள் பெரிதும் துணைபுரிகின்றன என்று

கூறுகிறார்களே வெண்பா! அதனைக் குறித்து நீ ஏதும் அறிவாயா?

 வெண்பா :    புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம், விளைநிலங்கள் அழிதல்,

நகரமாதல் போன்ற செயல்களே சுற்றுச்சூழல் அழிவிற்குக் காரணம்

என அறிவேன். ஆகவே மரங்கள் நட்டுப் பசுமை நிறைந்த

நிலமாகச் சுற்றுப்புறத்தை மாற்றுவது நமது கடமையாகும்.

மலர்விழி :      மரங்கள் அழிவதற்கு என்ன காரணம் வெண்பா?

வெண்பா :     மக்கள் தொகைப் பெருக்கம், வீட்டுப் பொருட்கள் பயன்பாடு முதலியன.

மலர்விழி :      காடுகளை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும்.

வெண்பா :     விதைப்பந்து தயாரித்து அனைத்து இடங்களிலும் இடவேண்டும்.

No comments:

Post a Comment