Breaking

Tuesday, May 5, 2026

7TH SOCIAL SCIENCE Question And Answer - 03





வரலாற்றுத் தகவல்கள்: வினா-விடைத் தொகுப்பு

இந்திய வரலாறு - காலக்கோடு மற்றும் ஆட்சியாளர்கள்

1. பின் இடைக்கால இந்திய வரலாறு: கி.பி. 1200 முதல் 1700 வரை.

2. முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தது: கி.பி. 712 (உமையது அரசின் படைத்தளபதி).

3. தைமூர் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு: கி.பி. 1398.

சோழர் காலம்

1. முதலாம் ராஜேந்திர சோழனின் செப்பேடுகள்: திருவாலங்காடு செப்பேடுகள்.

2. சோழர் காலத்தில் பிராமணர்க்கு கொடையளிக்கப்பட்ட நிலங்கள்: பிரம்மதேயம்.

3. கல்விநிலையப் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள்: சாலபோகம்.

4. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்: தேவதானம்.

5. சோழர் காலத்தில் யுவராஜன்: அரசரின் மூத்த மகன்.

6. சோழர் கால நிர்வாகப் பிரிவு: பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

7. சோழர் கால கிராம நிர்வாகத்தின் மிகச் சிறிய அலகு: கிராமம்.

8. வேளாளரில் நில உடைமையாளர்களாக இருக்க இயலாத பிரிவினர்: உழுகுடி.

9. அஞ்சு-வண்ணத்தார்: மேற்கு ஆசியர்கள், அராபியர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்களை உள்ளடக்கிய வணிக அமைப்பு.

10. சோழர்களின் காலம்: பக்தி இலக்கியங்களின் காலம் என அழைக்கப்படுகிறது.

பாண்டியர் காலம்

1. களப்பிரர்களை வெற்றி கொண்டு பாண்டியப் பகுதியை மீட்ட அரசன்: கடுங்கோன்.

2. அரிகேசரி மாறவர்மனால் கழுவேற்றப்பட்ட சமணர்கள்: சுமார் 8000.

3. கண்ணனூர் போரில் வீர சோமேஸ்வரரைத் தோற்கடித்த பாண்டிய அரசன்: சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

4. பாண்டிய மன்னர்களின் பட்டப்பெயர்கள்: கூடல் கோர், கூடல் கோமான்கள்.

5. சித்திர-மேழி-பெரிய நாட்டார்: சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம்.

6. பாண்டிய நாட்டின் நிர்வாகப் பிரிவுகள்: மண்டலங்கள் வளநாடுகள் என அழைக்கப்பட்டன.

7. மானூர் கல்வெட்டு (ஆண்டு மற்றும் மாவட்டம்): கி. பி. 800, திருநெல்வேலி மாவட்டம்.

8. காயல் துறைமுகத்தில் செயல்பட்ட அராபிய வணிகரின் நிறுவனம்: மாலிக் உல் இஸ்லாம் ஜாமலுதீன் உடையது.

டெல்லி சுல்தான்கள்

1. டெல்லி சுல்தான் இல்துமிஷ் அறிமுகம் செய்த வெள்ளி நாணயம்: டங்கா.

2. ஒரு வெள்ளி டங்கா என்பது: 48 ஜிட்டல்களுக்குச் சமம்.

3. குதுப்மினாரைக் கட்டி முடித்த சுல்தான்: இல்துமிஷ்.

4. நாற்பதின்மர் அல்லது சகல்கானி என்ற குழுவை உருவாக்கியவர்: இல்துமிஷ்.

5. இல்துமிஷ் ராணுவ அதிகாரிகளுக்கு ஊதியத்திற்காக வழங்கிய நிலங்கள்: இக்தா.

6. கியாசுதீன் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர்: அமிர்குஸ்ரு.

7. ஜலாலுதீன் கில்ஜியை வஞ்சகமாகக் கொன்று ஆட்சியைப் பிடித்தவர்: அலாவுதீன் கில்ஜி.

8. அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் மதுரை வரை படையெடுத்த ஆண்டு: 1310.

9. முகமது பின் துக்ளக் தௌலதாபாத் எனப் பெயர் மாற்றிய நகரம்: தேவகிரி.

10. சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர்: கிசிர்கான் (தைமூரால் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்).

11. லோடி அரச வம்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து முகலாயப் பேரரசை நிறுவியவர்: பாபர்.

ராஜபுத்திரர்கள்

1. மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக ஜெயஸ்தம்பா எனும் வெற்றிதூண் நிறுவப்பட்ட இடம்: சித்தூர்.

2. ராஜபுத்திரர்களின் முக்கிய மூன்று குலங்கள்: சூரிய வம்சி, சந்திர வம்சி, அக்னி குலம்.

3. ஹரியானா பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திர குலம்: தோமர்கள்.

4. பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர்: முதலாம் நாகபட்டர்.

5. தர்மபாலரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற பால அரசர்: தேவபாலர்.

6. தென்னிந்திய அரசர் ராஜேந்திர சோழனின் படையெடுப்பால் வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த இயலாத அரசர்: முதலாம் மகிபாலர்.

7. ஆஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர்: சிம்மராஜ்.

8. 1192 இல் நடைபெற்ற இரண்டாம் தரெயின் போரில் தோல்வியுற்ற அரசர்: பிருதிவிராஜ் சௌகான்.

முகலாயப் பேரரசு

1. பாபரின் சுயசரிதையின் பெயர்: துசுக்- இ- பாபரி.

2. 1540ல் கன்னோஜில் ஹூமாயூனைத் தோற்கடித்தவர்: ஷெர்ஷா.

3. ஜிசியா வரியையும், இந்துப் பயணிகளின் மீதான வரிகளையும் நீக்கிய முகலாய அரசர்: அக்பர்.

4. புதிய நகரான பதேப்பூர் சிக்ரியில் அனைத்து மத அறிஞர்களும் உரையாடிய மண்டபம்: இபாதத்கானா.

5. சீக்கிய தலைவர் குரு அர்ஜூன் சிங்கைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்ட முகலாய அரசர்: ஜஹாங்கீர்.

6. 'ஆலம்கீர்' என்னும் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட முகலாய மாமன்னர்: ஒளரங்கசீப்.

7. ஒளரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சிவாஜியின் மகன்: சம்பாஜி.

8. அக்பரின் வருவாய்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் பின்பற்றிய நிலவருவாய் முறை: ஷெர்ஷா அறிமுகம் செய்த முறை.

9. ஷெர்சாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்லறை மாடம்: பீகாரில் சசாரம்.

10. திவான்-இ-காஸ், திவான்-இ-ஆம், பஞ்ச் மஹால் ஆகியவற்றைக் கட்டியவர்: அக்பர்.

11. ஒளரங்கபாத்தில் 'பிபிகா மக்பாரா' என்னும் கல்லறை மாடத்தைக் கட்டியவர்: ஆஜாம் ஷா.

விஜயநகர மற்றும் பாமினி அரசுகள்

1. விஜயநகர அரசின் ஆன்மீக குரு: வித்யாரண்யர்.

2. விஜயநகரத்தை ஆண்ட நான்கு அரச மரபுகள்: சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு.

3. மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாயக்க அரசை நிறுவியவர்: குமார கம்பணா.

4. சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர்: சாளுவ நரசிம்மர்.

5. கிருஷ்ணதேவராயர் அமைத்த கோபுரங்கள்: ராயகோபுரம்.

6. தலைக்கோட்டைப் போரின் மற்றொரு பெயர்: ராக்சக தங்கடி.

7. ஹம்பியில் உள்ள புகழ் பெற்ற கோவில்: விருபக்சா கோவில்.

8. ஆரவீடு வம்சத்தார் உருவாக்கிய புதிய தலைநகரம்: பெனுகொண்டா.

9. விஜயநகர நிர்வாகத்தில் கிராமத்தலைவர்: கெளடா.

10. கோதை தேவியைப் பற்றிய 'அமுக்தமால்யதா' நூலை எழுதியவர்: கிருஷ்ணதேவராயர்.

11. பாமினி அரசை தோற்றுவித்த அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தனது அரசைப் பிரித்த நான்கு மாகாணங்கள்: தராப்.

12. மகமது கவானின் மதரசா அமைந்த இடம்: பீடார்.

13. பாமினி அரசில் வெளியுறவுத்துறை அமைச்சர்: வஷிர்-இ- அசாரப்.

மராத்தியர்கள்

1. சத்ரபதி என்னும் பட்டத்தின் பொருள்: அரசன் அல்லது பேரரசன்.

2. மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு பாதுகாப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்ட வரி (மராத்திய அரசு): சௌத்.

3. சிவாஜியின் எட்டு அமைச்சர்கள் குழுவில் 'அமத்தியா': நிதியமைச்சர்.

4. மூன்றாம் பானிப்பட்போர்: 1761.

No comments:

Post a Comment